பேரினவாதம் தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் பாரிய முயற்சிகள் ஒருபுறம். இதற்கு மறுபுறம் இந்தியா முதல் பல நாடுகள் இன்று துணை நிற்கின்றது.
மறுபக்கத்தில் இவை ஒவ்வொன்றாக அம்பலமாகின்றது. பெண்கள் மேல் இராணுவம் நடத்திய பாலியல் யுத்தம் மூலம், யுத்தம் வெல்லப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆணாதிக்க பண்பின் ஊடாக, யுத்தம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் தான், சிங்கள மேலாதிக்க பாசிச திமிருடன் இன்று நாட்டை ஆளுகின்றனர். பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்த ஆணாதிக்க படைக்கு, நன்றி தெரிவித்து கொண்டாட்டங்கள் வேறு. கம்யூனிசத்தின் பெயரில் இனவாதம் பேசும் ஜே.வி.பியும் அதன் தலைவரும், இந்தக் குற்றத்தை விசாரித்தால் தங்கள் பிணத்தின் மேலாகத்தான் இது நடக்கும் என்று கொக்கரிக்கின்றனர்.
இனவழிப்பு யுத்தம் மூலம் தமிழ் பெண்கள் மேல் இழைத்த குற்றக் காட்சிகளே இவை. அதிரடி இணையம் இப்படத்தை தம் அரசியல் உள்ளடக்கத்தில் மூடிமறைக்காது, பொறுப்புடன் வெளியிட்டமைக்கு இந்த இடத்தில் நாம் நன்றி கூற வேண்டும்;
பெண்களையே நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தியது இந்த இராணுவ நடவடிக்கை. ஆயுதங்களை காட்டியவர்கள், தலைவர்களின் பிணத்தைக் அலமானப்படுத்தி காட்டியவர்கள், வென்ற பிரதேசத்தைக் காட்டியவர்கள், இதைக் காட்சியாக காட்டவில்லை. இதற்கு மாறாக படம் படமாக, இராணுவ இணையத்தளங்கள் பலவற்றை வெளியிட்டன. ஆனால் யுத்தத்தின் உண்மையான, கேவலமான, இழிவான பக்கங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டன. புலியெதிர்ப்பு அரசசார்பு தமிழ் ஊடகங்கள் அரசை நக்கினவே ஒழிய, மக்களுக்கு நடந்ததைக் வெளிக்கொண்டு வர முனையவில்லை. இப்படி இவர்கள் ஜனநாயகமோ, ஆணாதிக்க வகைப்பட்டது. பெண்களுக்கு எதிரானது.
இந்தக் காட்சி மக்கள் மேல் இழைத்த யுத்த எதார்த்தத்தை காட்டுகின்றது. இப்படங்கள் வௌ;வேறு பெண்கள், வௌ;வேறு சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு படத்தொகுப்பு. இதை ரசிக்கும் இராணுவ மனநிலையுடன் தான் இந்த யுத்தம் வெல்லப்பட்டது. முன்பு நாம் வெளியிட்ட வீடியோ காட்சி, இதை மேலும் உறுதி செய்கின்றது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்.
இந்த காட்சிகள் தெளிவாக பல விடையத்தை சொல்லுகின்றது. பெண்கள் உயிருடன் பாலியல் ரீதியாக அங்கு வதைக்கப்பட்டதையும், வதைக்கப்படுவதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஒரு இனத்தின் மேலும்;, பெண்கள் மேலும், பேரினவாத இனவழிப்பு யுத்தம் செய்யப்பட்டதையும், போர்க் குற்றங்கள் இப்படி பலவாக இருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.
இப் படங்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பல பாவித்திருப்பதை, எரிந்த கருகியுள்ள படங்கள் எடுத்துக் காட்டுகின்றது. யுத்தக்குற்றம் ஒருபுறம், மறுபக்கத்தில் இதை முன்னின்று செய்த குற்றவாளிகளே இன்று நாட்டை ஆளுவதையும், இது தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.
பி.இரயாகரன்
07.06.2009
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக