வெள்ளி, 22 பிப்ரவரி, 2008

சென்னை உண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு - கண்டனம்

உண்ணாப் போராட்டம் நடத்தத் தடை:
அராஜகம் செய்த காவல் ஆய்வாளரைப் பாதுகாக்க
மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோதச் செயல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்
 
பெ.மணியரசன் கண்டன அறிக்கை

             கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.

           தமிழக அரசின் ஆங்கில ஆதரவு – தமிழ்ப் புறக்கணிப்புப் போக்கைக் கண்டிக்கும் வகையில், முறைப்படி விளம்பரம் செய்து, அறிக்கை கொடுத்து அறிவித்துவிட்டு 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.,.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ, பயணிகளுக்கு ,டையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு ,டதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.

 சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையினர்; மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ,துவரை நடவடிக்கை ,ல்லை.

 ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை ,டைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடைத்துவதற்கு அனுமதி கோரும் மனு 4-02-2008 அன்று கொடுக்கப்பட்டது. அவ்வுண்ணாப் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து மாநகரக் காவல்துறை ஆணையர் திரு. நாஞ்சில் குமரன் அவர்கள் 21-02-2008 அன்று பிற்பகல் கடிதம் கொடுத்துள்ளார். 
 
        மாநகரக் காவல் ஆணையரின் இம்மறுப்பு திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கையாக உள்ளது. முதலில் நாங்கள் 19-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் நடத்த அனுமதி கோரி கடிதம் கொடுத்தோம். அதற்கு மாநகர ஒற்றுப்பிரிவு உயர் அதிகாரி திரு. ,ளங்கோ அவர்கள் 22-02-2008 அன்று உண்ணாப் போராட்டம் வைத்துக் கொள்ளுமாறு வாய்மொழி ஒப்புதல் கொடுத்து, தேதி மாற்றி மனு கொடுக்க சொன்னார். அதே போல தேதி மாற்றி மனு கொடுத்தோம். அவரை அவ்வப்போது அணுகி உண்ணாப் போராட்டத்திற்கான அனுமதிக் கடிதம் கேட்ட போது விரைவில் தருவோம் என்று கூறிவந்தார்.

அதை நம்பி உண்ணாப் போராட்டத்திற்கான விளம்;பரச் செலவுகள் உட்பட அனைத்துச் செலவுகளும் செய்து முடிக்கப்பட்டன. தமிழகமெங்கும் இருந்து இப்போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு வாடகை வாகனங்களில் வர எமது இயக்கத் தோழர்கள் பணம் கொடுத்து ஏற்பாடு செய்திருந்தனர். ,ந்த நிலையில் உண்ணாப் போராட்டம் நடைபெற வேண்டிய நாளுக்கு முதல் நாள் பிற்பகல் அனுமதி மறுத்ததன் மூலம் எங்களுக்கு ஏராளமான பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் உழைப்பும் விரையமாகியுள்ளது. உயர்நீதிமன்றத்தை அணுகி அனுமதி மறுப்புக்கு தடை வாங்கி உண்ணாப் போராட்டம் நடத்திட வாய்ப்பு தரக்கூடாது என்ற கெட்ட நோக்கத்துடன் மாநகரக் காவல் ஆணையர் 04-02-2008 அன்று கொடுக்கப்பட்ட அனுமதி கோரும் மனுவுக்கு 21-02-2008 அன்று மறுப்பு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளார். அனுமதி மறுப்புக் கடிதத்தை, நிகழ்ச்சி நடக்க வேண்டிய நாளுக்கு ஒரு வாரம் முன்பதாகக் கொடுக்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறியதாகும் ஆணையரின் இச்செயல்.
 
தன் கீழ் பணியாற்றும் கோயம்பேடு காவல் ஆய்வாளர் தேன்தமிழ்வளவனையும் மற்ற காவல்துறையினரையும் சட்டவிரோத வழிகளில் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையை அணுகி நிவராணம் தேடும் வாய்ப்பை வேண்டும் என்றே கெடுத்துள்ளார் மாநகரக் காவல் ஆணையர். இது பழிவாங்கும் செயலாகும். அமைதியான வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தக்கூட அனுமதி மறுத்துள்ள மாநகரக் காவல் ஆணையரின் சட்டவிரோத, சனநாயக விரோத செயலை தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

மாநகரக் காவல்துறையின் இந்த சட்டரோத, சனநாயக விரோத செயலை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நீதிகோரி வழக்குத் தொடுக்கவுள்ளோம். உயர்நீதிமன்ற ஆணை பெற்று இவ்வுண்ணாப் போராட்டம்
நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி

புதன், 20 பிப்ரவரி, 2008

சென்னையில் உண்ணாப் போராட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழ்காக்கப் போராடிய தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி
தோழர்களைத் தாக்கிக் காயப்படுத்தி, எலும்பு முறிவை ஏற்படுத்திய
ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் காவல்துறையினரை
இடைநீக்கம் செய்யக் கோரி
சென்னையில் உண்ணாப் போராட்டம்
 
பெ.மணியரசன் அறிக்கை
 
     கடந்த 25-1-2008 மொழிப் போர் தியாகிகள் வீரவணக்க நாள் அன்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்தி, ஆங்கில ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியது.
 
     தமிழக அரசு தனக்குள்ள அரசiமைப்புச் சட்ட அதிகாரத்தை பயன்படுத்தி தமிழை முழு அளவில் ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்தாமல் ஆங்கிலத்திற்கு முன்னுரிமையும் மேலாதிக்கமும் தருகிறது.
 
     தமிழக அரசின் ஆங்கில ஆதரவு-தமிழ்ப் புறக்கணிப்பு போக்கை; கண்டிக்கும் வகையில் 25-01-2008 அன்று சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'பாயின்ட் டு பாயி;ன்ட்', 'எஸ்.இ.டி.சி' போன்ற ஆங்கில எழுத்துகளை த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமையில் கருப்புமை பூசி தோழர்கள் அழித்தனர். அவர்கள் பேருந்துகளுக்கு வேறு சேதமோ பயணிகளுக்கு இடையூறோ செய்யவில்லை. அப்போது, கோயம்பேடு காவல்நிலைய ஆய்வாளர் தேன் தமிழ்வளவனும் மற்ற காவலர்களும், அவர்களைத் தடியால் கொடூரமாகத் தாக்கிப் படுகாயப்படுத்தினர். கோவைத் தோழர் பா.தனசேகர் என்பவருக்கு இடதுகை எலும்பு முறிந்தது. க.பாலகுமரன், ச.பிந்துசாரன், கோ.மாரிமுத்து, பா.சங்கர் உள்ளிட்டோர் படுகாயமுற்றனர்.
 
     சட்டவிரோதமாக வன்முறை ஏவிய காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடவடிக்கை இல்லை.
 
     ஆய்வாளர் தேன் தமிழ்வளவன் மற்றும் தொடர்புடைய காவல்துறையினரை இடைநீக்கம் செய்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசைக் கோரி சென்னை, சேப்பாக்கம், அரசினர் விருந்தினர் மாளிகை அருகே 22-02-2008 வெள்ளி காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் திரளானோர் கலந்து கொள்ளும் உண்ணாப் போராட்டம் (உண்ணாவிரதம்) நடை பெறுகிறது.
 
        விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தோழர் தியாகு(பொதுச் செயலர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), தோழர் இரா.பாவணன் (தலைவர், தமிழர் கழகம்), தோழர் நிலவன் (பொதுச் செயலர், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), கவிஞர் தமிழேந்தி (மார்க்சியப் பெரியாரியப் பொதுசுடைமைக் கட்சி) ஆகியோர் கண்டன உடையாற்றுகின்றனர். புலவர் கி.த.பச்சையப்பனார் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைக்கிறார்.
 
தஞ்சையில் போராட்ட வழக்கைத் திரும்பப் பெறக் கோருதல்

     இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து அதே நாளில் தஞ்சையில் தலைமை அஞ்சலகத்தில் இந்தி எழுத்துகளை த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் பழ.இராசேந்திரன் தலைமையில் அழித்த 23 பேர் கைது செய்யபட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துதல், ஊழியர்களைக் கடமையாற்ற விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிணை மறுப்புப் பிரிவுகளில் வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வழக்கைத் தமிழக அரசு திரும்பப் பெறுமாறு இவ்வுண்ணாப் போராட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 
 
       தமிழ் உணர்வாளர்கள் இவ்வுண்ணாப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 

புதன், 6 பிப்ரவரி, 2008

தமிழர் கண்ணோட்டம் - சனவரி 2008

வாசகர்களுக்கு வணக்கம்..

 
தமிழ்த் தேசியப் புரட்சிகர மாத இதழ்
"தமிழர் கண்ணோட்டம்"
சனவரி மாத இதழை இப்பதிவில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளவும்..




தமிழர் கண்ணோட்டம் - சனவரி 2008

நன்றி

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

திங்கள், 4 பிப்ரவரி, 2008

[muththamiz] தேவை ஒரு விவசாய புரட்சி



---------- Forwarded message ----------
From: மஞ்சூர் ராசா <manjoorrasa@gmail.com>
Date: Feb 3, 2008 2:45 PM
Subject: [muththamiz] தேவை ஒரு விவசாய புரட்சி
To: முத்தமிழ் <muththamiz@googlegroups.com>

அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பின்னர் தான், என்னை விட பலபேர் நல்ல முறையில் இதனை அணுகியிருப்பதை காண முடிந்தது.

அவர்களுடைய பதிவுகளிலிருந்து சில நல்ல தகவல்களை பெற முடிந்தது.

1. http://agmarknet.nic.in/ - இங்கு அனைத்து வித விவசாய விளைபொருட்கள் விற்பனை சம்பந்தப் பட்ட விசயங்களை பெற முடிகிறது.
இதனுடைய தமிழக பிரிவின் அலுவலகம், Commissioner, Agricultural Marketing & Agri Business Directorate, Thiru Vi Ka Industrial Estate, Chennai-600032.
இ-மெயில் : amdtn@tn.nic.in மற்றும் agmarkbusiness@rediffmail.com
தொலைபேசி எண்கள் -044-22347484 , 044-22347485, 044-22347454(Fax)

2. http://gis.nic.in/agmarknet/home.asp - அரசு சார்ந்த இந்த நிறுவனத்தின் தற்போதைய செயல் திட்டங்களின் நோக்கம் நிறைவாக இருக்கின்றது. இதனுடைய தற்போதைய நிலை என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இன்னும் பல தகவல்கள் உண்டு... என்னுடைய "களத்துமேடு" பகுதியை பார்வையிடுங்கள்...

"தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...
விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்..." - என்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப, முதல் கட்டமாக, தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளேன்.

1. பிப்ரவரி - தகவல் திரட்டுதல்
2. மார்ச் - இணைய தள ஒருங்கிணைப்பு மற்றும் "உழைப்பு - பலன் (Cost-Benefit Analysis)" அடிப்படையில் தகுதிப் படுத்தல்.
3. ஏப்ரல் - ஒருங்கிணைந்த திட்டமிடல் (Integrated Planning)
4. மே - நேர்காணல் மற்றும் முதல் கட்டப் பணி செயல்படுத்தல். (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
5. ஜூன் - மாதிரி பண்ணை அமைத்தல் - செல்லம்மாள் செந்தில்நாதனின் முதலீடு
6. ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர்-அக்டோபர்- மாதிரி பண்ணையின் செயல்பாடுகளும், பயன்களும், லாபமும்...
7. நவம்பர் - மாதிரிப் பண்ணையின் அடிப்படையில், ஒரு கிராமத்தை தத்து எடுத்தல் - (களப்பணி - செல்லம்மாள் செந்தில்நாதன்)
8. தை -1, 2009 - வெற்றிகரமான மாதிரி கிராம அடிப்படையில், மற்ற கிராமங்களுக்கும் விழிப்புணர்வு அளித்து, ஊக்குவித்தல்...
9. இதனை தொடர்ந்து செயல்படுத்த ஒரு அமைப்பை உருவாக்குதல்


உங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்ய தவறாதீர்கள்....

மேலும் விபரங்களுக்கு:
http://vellamai.blogspot.com/2008/02/blog-post.html


--~--~---------~--~----~------------~-------~--~----~
முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
-~----------~----~----~----~------~----~------~--~---



--
-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு"
- புரட்சியாளர் லெனின் -
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------