திங்கள், 29 ஜூன், 2009

சிறிலங்கா அரசின் சதித் திட்டத்துக்கு துணை போகும் இந்திய வேளான் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன்!

சிறீலங்கா அரசின் இன அழிப்பு சதிக்கு இந்திய வேளான் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் துணை போகிறார் என்று தமிழீழ ஆதரவாளரும் திரைப்பட இயக்குநருமான சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக 'ஜூனியர் விகடன்' வாரம் இருமுறை இதழில் அவர் எழுதியுள்ள சிறப்புக் கட்டுரை:

'ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!' மகிந்த ராஜபக்சவிடம், ஜூன் 9 ஆம் நாளன்று 'இந்திய வேளாண் விஞ்ஞானி' எம்.எஸ்.சுவாமிநாதனால் உதிர்க்கப்பட்ட வார்த்தைகளாம் இவை.

பசுமைப் புரட்சி என்ற பெயரில் இந்திய வேளாண் விளை நிலங்களை எதற்கும் உதவாத தரிசு நிலங்களாக மாற்றி, உலகுக்கு உணவளித்த இந்திய விவசாயிகளை இலட்சக்கணக்கில் தற்கொலைக்குத் தள்ளியவர் என்ற விமர்சனங்களுக்கு உள்ளான எம்.எஸ்.சுவாமிநாதன் இப்படிச் சொல்லி இருந்தால் அது மிகப் பெரிய அவலம்!

சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோமேயானால், ஏறத்தாழ எழுபது ஆண்டுகளுக்கு முன்னதாகவே மேற்கண்ட வார்த்தைகள் உதிர்க்கப்பட்டது உண்டு. அந்த 'அறிவார்த்தமான' வாக்கியத்தை முதன் முதலில் கூறியவர் டொக்டர் ஜோசப் மெங்கெல் ஜதுழளநிh ஆநபெநடநஸ என்ற ஜெர்மானியர்.

பல்வேறு நபர்களின் தாடை எலும்புகளின் வடிவத்தைப் பரிசோதிப்பதன் மூலம் அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறியும் ஆராய்ச்சியை மேதைமை படிப்புக்காக 1930-களின் இறுதியில் மேற்கொண்டவர் இவர்.

ஹிட்லரின் நாஜி இராணுவத்தின் மருத்துவராக 1940 இல் சேர்ந்தார். 1943 ஆம் ஆண்டு, மே 24 ஆம் நாளன்று ஆஸ்விட்ச் - பிர்கானாவ் சித்ரவதைக் கொட்டடியில் இருந்த 'நாடோடிகளுக்கான முகாமில்' ஜபுலிளல ஊயஅpஸ மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

உயிருள்ள மனிதர்களின் மீது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது அவருக்குப் பிடித்த ஒன்று. இரட்டைப் பிறப்புக்களின் மீது அவருக்குத் தனிப்பட்ட ஆர்வமிருந்தது. அதுபோல, குள்ள மனிதர்களும் அவருடைய பரிசோதனைகளுக்கு உவப்பான 'எலிகளாக'வே கணிக்கப்பட்டார்கள். அவருடைய ஆய்வுக்காக சுமார் 1,500 இரட்டை ஜோடிகள் பயன்படுத்தப்பட்டனர். தான் மேற்கொள்ளப்போகும் பரிசோதனைகளில் ஈடுபடுத்தப்படவிருக்கும் பல்வேறு இரட்டைக் குழந்தைகளுக்கு அவர் நல்ல துணிகளையும், உணவையும் கொடுப்பார்.

இதனைப் பல மாதங்கள் தொடர்வார்..  'மெங்கெல் மாமா... மெங்கெல் மாமா...!' என்று குழந்தைகள் அவரை வளைய வரும்.  திடீரென ஒரு நாளில், அவர்களைத் தன் பரிசோதனைக் கூடத்துக்கு அழைத்துச் செல்வார்.  மயக்கம் ஏற்படுத்தும் சாக்லெட்டைக் கொடுப்பார். மயங்கிக் கிடக்கும் குழந்தைகளின் இதயத்தில், அவர்களை உடனே கொல்லும் விஷத்தை ஊசி மூலம் செலுத்துவார்.

குழந்தைகள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு உட்படுத்தி, அவர்களின் அவயவங்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பொறுமையாகப் படித்தறிவார். இரட்டையர்களை ஒன்றாக வைத்துத் தைத்து, அவர்களால் உயிர்வாழ முடிகிறதா என்ற 'மகத்தான' ஆய்வையும் அவர் மேற்கொண்டார்.

குழந்தைகளின் கண்களின் நிறத்தை மாற்றுவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக பல்வேறு இரசாயனப் பொருட்களை ஊசி மூலம் அவர்களின் கண்களுக்குள் செலுத்திப் பார்த்தார். இப்படிப்பட்ட கொடூர ஆய்வுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புள்ள ஒரு இடமாக ஆஸ்விச் சித்ரவதைக் கொட்டடி உள்ளது என்பதை அறிந்தவுடன் பிறந்த உற்சாகத்தில், அவருடைய உதடுகளிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள்தான்... 'ஒவ்வொரு பேரழிவுமே வளர்ச்சிக்கானதொரு வாய்ப்பை அளிக்கிறது!' என்பது.

எம்.எஸ்.சுவாமிநாதன் துணையுடன் சிறீலங்கா அரசாங்கம் நடத்தவுள்ள 'பரிசோதனை'யும் யூத இனத்துக்கு மெங்கெல் செய்த கைங்கரியம் போன்றதுதானா... புதிய விவசாயப் பரிசோதனையில் வன்னிப் பெருநில மக்கள் எலிகளாகப் பயன்படப் போகிறார்களா என்ற அச்சம் எழுகிறது!

வட ஈழ மக்களும் அவர்களின் அவலமும்...

சிறீலங்கா இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நான்காம் ஈழப் போரினால் வன்னிப் பெருநில மக்கள் அனுபவித்த - அனுபவிக்கும் துன்பங்களைச் சொல்ல முயலும்போது மொழியும் நம்மைக் கைவிட்டு விடுகிறது. 2007 இறுதியில் வட ஈழத்தின் மீது இலங்கை அரசு போர் தொடுத்தது. 2008 ஏப்ரலில் அது மன்னார் பகுதியை அடைந்தது.

அப்போது வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 4 லட்சத்து 3 ஆயிரம் ஆகும். போர் முடிந்த இன்றைய நாளில், 2008 ஏப்ரலில் வன்னிப் பெருநிலத்தில் வாழ்ந்திருந்த 4 லட்சத்து 3 ஆயிரம் மக்களில் வெறும் 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 பேருக்கு மட்டுமே கணக்கு உள்ளது.

35 சதவிகிதத்துக்கும் மேலானவர்களுக்கு என்ன ஆயிற்று என்பதற்கு கணக்கு இல்லை. மே 27 ஆம் நாளன்று அளிக்கப்பட்ட ஐ.நா. சபையின் மனித உரிமை நிறுவனத்தின் கணக்கின்படி, அனைத்து அகதிகள் முகாம்களிலும் இருந்த வன்னிப் பெருநில மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 90 ஆயிரத்து 130 ஆகும். ஆனால், அந்த நிறுவனத்தால் மே 30 ஆம் நாளன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 77 ஆயிரம் ஆகக் குறைந்திருந்தது.

ஜூன் 15 ஆம் நாளன்று இலங்கை அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் அது 2 லட்சத்து 62 ஆயிரத்து 632 என மேலும் குறைந்திருந்தது. மே 27-க்கும் ஜூன் 15-க்கும் இடைப்பட்ட 19 நாட்களில் மட்டுமே முகாம்களில் இருந்த 27 ஆயிரத்து 498 பேர் காணாமல் போயுள்ளனர் என்பதுதானே பொருள்? மே 23 ஆம் நாளன்று வவுனியாவின் மெனிக் முகாமில் உள்ள மக்களை ஐ.நா. சபையின் தலைவர் பான் கீ மூன் சந்தித்தபோது, 'என் வாழ்வில் இதுவரை இப்படிப்பட்டதொரு பேரவலத்தை நான் கண்டதில்லை!' என்று பெரிதும் வருந்தினார்.

சில நாட்களுக்கு முன்னதாக இதே மக்களை சந்தித்த இலங்கையின் தலைமை நீதிபதி சரத் நந்தா சில்வா, 'இந்த மக்களுக்கு நாம் மிகப்பெரும் தீங்கினை இழைத்துக் கொண்டிருக்கிறோம்!' என்றார்.

'வடக்கின் வசந்தம்' என்ற வஞ்சகத் திட்டம்! இந்த நிலையில்...

மே 7 ஆம் நாளன்று இலங்கை அரசு வன்னிப் பெருநிலத்தினை மீட்டுருவாக்கம் செய்வதற்கான செயற்குழு ஒன்றை அமைத்தது. 19 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட அந்தக் குழுவுக்கு இலங்கை அதிபரின் ஆலோசகரும் சகோதரரும் இனவாத கருத்துகளை அள்ளி வீசுவதில் முன்னணியில் நிற்பவருமாகிய பசில் ராஜபக்ச தலைவராக நியமிக்கப்பட்டார்.

மீதமுள்ள 18 பேரில் அதிபரின் மற்றொரு சகோதரரும், 'மருத்துவமனைகளின் மீது குண்டு வீசுவது சரியான செயலே' என்று திருவாய் மலர்ந்தருளிய இலங்கை இராணுவத்தின் செயலாளரான கோத்தபாய ராஜபக்சவும் ஒருவராவார். உறுப்பினர்களில் 7 பேர் இராணுவம் மற்றும் காவற்துறையைச் சேர்ந்தவர்களாகவும் (இதில் இலங்கை ராணுவத்தின் தளபதியான சரத் பொன்சேகாவும் அடக்கம்) 10 பேர் இலங்கை அரசின் நிர்வாகத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளாகவும் இருந்தனர்.

இவர்களில் 18 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் இஸ்லாமியர் ஆவார். வன்னிப் பெரு நிலத்தை மீட்டுருவாக்கம் செய்வதற்கான தம் திட்டத்துக்கு இவர்கள் இட்டிருக்கும் பெயர்தான் 'வடக்கின் வசந்தம்'. ஒரு இஸ்லாமியரைத் தவிர்த்து, வேறு தமிழர்கள் யாருமற்ற இந்தக் குழுவினால் தமிழர்களுக்காக உருவாக்கப்படவிருக்கும் 'வசந்தம்' எத்தகைய மலர்ச்சியை யாருக்குக் கொண்டுவரும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.

'போல்போட்' திட்டம்...'

அகதிகள் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணியை 180 நாட்களுக்குள் முடிப்போம்' என்று ஜூன் மாதத் தொடக்கத்தில் இலங்கை அதிபர் முழங்கினார். அதை அவர் எவ்வாறு நிறைவேற்றப் போகிறாரோ என்று உலகம் பார்த்திருக்க... நம்மூர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இலங்கை அதிபரின் கண்ணுக்குத் தெரிந்தார்.

ஜூன் 9 ஆம் நாளன்று ராஜபக்சவை சந்தித்து ஆலோசித்தார் எம்.எஸ்.சுவாமிநாதன். அப்போது, 'வேளாண் மீட்டுருவாக்கத்தில் ஈடுபட இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஜூலை மாதத்திலேயே தம் கலந்துரையாடலைத் தொடங்க வேண்டும்' என ராஜபக்ச, சுவாமிநாதனிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து, 'வடக்கின் வசந்தம்' திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆண்களே இல்லாத ஈழத் தமிழினத்தை உருவாக்க சதி...

'போரில் உயிருக்கும், வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்ட சேதம் காரணமாக, வேலை செய்யக் கூடிய வலுவுடைய ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது. வேளாண் தொழிலுக்குப் பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். எனவே, வேளாண் ஆராய்ச்சியும் கல்வியும், அவற்றின் திட்டங்களும், பயிற்சி முறைகளும் பெண்களை மனதில் கொண்டே கட்டமைக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் சுவாமிநாதன்.

ஆண்கள் இல்லாத தமிழினத்தை ராஜபக்ச உருவாக்கியுள்ளார் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரத் தகவல் வேண்டும்? 'வவுனியாவில் உள்ள ஒரு ஆய்வு நிறுவன வளாகத்திலிருந்து இந்தியாவின் ஆராய்ச்சி நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் இலங்கையின் வேளான் விஞ்ஞானிகளுடனும், விவசாயிகளுடனும் இணைந்து செயல்பட வேண்டும். இதில் முகாம்களில் உள்ளவர்களும் கலந்துகொள்ளவேண்டும்.

அக்டோபர் மாதம் விதைப்புக் காலமாகும். எனவே வேளாண் பயிற்சி, திறன் மேம்படுத்துதலுக்கான செயல்களை ஆகஸ்டில் தொடங்கியாக வேண்டும். மண் பரிசோதனை ஊர்திகள், விதைகள், ஊட்டச் சத்துக்கள், கருவிகள் ஆகியவை அனைத்து ஊர்களுக்கும் செப்டம்பருக்குள் சென்றடைய வேண்டும்' என்றும் கூறியுள்ளார் சுவாமிநாதன்.

வேளாண் விஞ்ஞானியின் ஆர்வமும், அதன் பின்னாலிருக்கிற இலங்கை அரசின் அவசரமும் கம்போடியாவை ஆண்ட கொடுங்கோலன் போல்போட் காலம், இலங்கையில் மீண்டும் திரும்பிவிடுமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது.

கம்போடிய கண்ணீர்!

1975 ஆம் ஆண்டு ஏப்ரலில் கம்போடிய நாட்டின் அதிகாரத்தை போல்போட் (சலோத் சார்) தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. நகரங்களில் இருந்த அனைவரும் கிராமப்புறங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். அனைவரும் பொதுமையாக்கப்பட்ட பண்ணைகளில் கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாட்டின் வளர்ச்சிக்காக நிர்ப்பந்திக்கப்பட்டனர். இந்தப் பணிகளின்போது மட்டுமே சுமார் 17 லட்சம் மக்கள் மடிந்து போனார்கள். அதாவது, கம்போடியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 21மூ இல்லாமல் போய் விட்டார்கள்.

வன்னிப் பெருநில மக்களின் துன்பமோ இதை விடப் பெரிது. ஏற்கெனவே கடந்த 13 மாதங்களில் அவர்களில் 35மூ காணாமல் போயிருக்கிறார்கள். ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் முகாம்களில் உள்ள பெண்களையும், சிறுவர்களையும், வயோதிகர்களையும் கிராமப்புறங்களில் குடியமர்த்தி... எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரால் கடுமையாக வேலை வாங்குவதற்கு ராஜபக்ச திட்டம் வகுக்கிறார்.

உறவுகளை இழந்து பட்டினியாலும் நோயாலும் முகாம்களுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்தப் பெண்களால், ஆகஸ்ட் மாதம் வேளாண் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு செயல்களில் எப்படிக் கலந்து கொள்ள முடியும்? இழப்புகள், மன உளைச்சல்கள், இடப்பெயர்வுகளால் ஏறத்தாழ நடைபிணங்கள் ஆகிவிட்டிருக்கும், பெண்களின் எஞ்சிய உயிரையும் பறிப்பதற்கான மாற்று ஏற்பாடாக இதை ஏன் கருதக் கூடாது?

போருக்கு உதவி செய்து தமிழினத்தின் துன்பத்துக்குக் காரணமாக இருந்த இந்தியா... இன்று மிச்சமிருக்கும் தமிழர்களையும் தந்திரமான ஒரு திட்டத்தின் மூலம் கொன்று குவிக்க முயலும் இலங்கைக்கு 500 கோடி ரூபாயை அளிக்கப் போகிறதா?  'வடக்கின் வசந்தம் என்ற திட்டத்தின் நோக்கம் ஈழத்தில் பயிர் பண்ணுவது அல்ல... இன்னும் மிச்சம் இருக்கும் தமிழர்களின் உயிர்களை மௌ;ள மௌ;ளக் கொல்வதுதான்' என்ற அச்சத்தைப் போக்குவதற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் என்ன உத்தரவாதம் வைத்திருக்கிறார்? என கேள்வி எழுப்பினார் சீமான்.

சனி, 27 ஜூன், 2009

இந்தியத்தின் அடிமைகளே! இனியாவது விழித்தெழுங்கள்! – க.அருணபாரதி

நாகரீகம் வளர்ந்து விட்டதாகச் சொல்லப்படும் இன்றைய உலகில், வேறு எந்த இனத்திற்கும் நிகழாத அவலம் வன்னியில் நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. இறந்தவர்களின் எண்ணிக்கை இருபதாயிரமா நாற்பதாயிரமா என்று உலக நாடுகளுக்குள் பட்டிமன்றம் நடக்கிறதே தவிர, இந்த இறப்பிற்கு காரணமான சிங்கள பேரினவாத அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த எந்த நாடும் உறுதியான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, சிங்கள இனவெறி அரசுக்கு உடனிருந்து உதவுகின்றன. ஈழத்தமிழர்களின் இரத்தம் குடித்த இந்திய அரசோ, படுகொலைகளை கச்சிதமாக நடத்தி முடித்த திருப்தியில் மகிழ்ச்சிக் கூத்தாடுகின்றது.

Eelam tamils குண்டுகளால் செத்தவர்கள் போக உயிரை மட்டும் கையில் பிடித்த படி எஞ்சியிருக்கும், மிதம் உள்ள ஈழத்தமிழர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்தள்ளது, சிங்கள இராணுவம். உணவின்றி பசியால் துடித்து இறந்தவர்கள், மருத்துவம் கிடைக்காமல் இறந்தவர்கள் என முகாம்களில் உள்ள மக்களும் பிணமாகவே வெளியே வீசப்படுகின்றனர். தமிழ்ப் பெண்களை பாலியல் இச்சைக்காக இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறி நாய்களைக் கண்டிக்கவோ தடுக்கவோ அங்கு ஆளில்லை. தனது குடும்ப உறவுகளை விசாரணை என்ற பெயரில், தரதரவென இழுத்துச் செல்லும் சிங்கள இனவெறியனை தடுத்தி நிறுத்தினால் "புலி"யென்று அவனையும் விசாரணைக்கு இழுத்துச் செல்லும் நிலைமை தான் அங்குள்ள எதார்த்தம். அடையாளம் காண முடியாத பிணங்களாக புதர்களிலும், கடற்கரைகளிலும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறார்கள். ஒட்டு மொத்த இலங்கைத் தீவிற்கே உணவு வழங்கிய வன்னி மண்டலத்தில், ஒரு கைப்பிடி உணவிற்காக முகாமில், சுட்டெரிக்கும் வெயிலில் குடும்பத்துடன் தட்டேந்தி நிற்கிறான் தமிழன்.

வன்னியில் நடந்த தாக்குதல்களில் பல்லாயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் தமிழர்களின் பிணங்களை, தடயங்கள் ஏதுமின்றி அழிக்கும் பணியில் அதிவேகமாக ஈடுபட்டுள்ளது சிங்கள இனவெறி இராணுவம். இதனைக் கருத்தில் கொண்டு தான், ஐ.நா. மன்றத்தினர், செஞ்சிலுவை சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், பத்திரிக்கையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என யாருமே அப்பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்படாமல் தடுக்கப்படுகின்றனர். கனடா நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பு விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டார். உண்மைகளை ஓரளவு எழுதும் சிங்கள பத்திரிக்கையாளர்களும் தாக்கப்பட்டு மரண பயத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளனர். இவை அனைத்தும், நம்மை விட நன்கு தெரிந்த சர்வதேச சமூகமோ, இவற்றை வெட்கமின்றி வேடிக்கை மட்டுமே பார்க்கிறது.

தனது சொந்தங்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகின்ற நிலையிலும், அவர்களுக்காக எதையுமே செய்ய இயலாத நிலையில் தமிழகத் தமிழர்களின் கைகள் இந்தியத் தேசிய அடிமை விலங்குகளால், கட்டி வைக்கப்பட்டுள்ளன. அதனை கட்டி வைத்தது யார்? வெடிகுண்டுகளால் பிணங்களாகவும், வெளியேறினால் அகதிகளாகவும் மாற்றப்பட்டுள்ள ஈழத்தமிழினத்தின் இந்த அவல நிலைக்கு இட்டுச் சென்றது யார்? "எமக்காக பேசுங்களேன்" என்று நம்மை நோக்கி கேட்டார்கள். நாமும் பேசினோம். போராடினோம். தீக்குளித்துச் செத்தோம். என்ன நடந்தது? நமது தீக்குளிப்புகளையும் போராட்டங்களையும் மதித்தது யார்?

உலகிற்கே நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்த இனம், அரசு நிர்வாகம் ஏற்படுத்தி கடல் கடந்து வணிகத் தொடர்புகள் கொண்டிருந்த இனம், அணை கட்டி பாசனம் செய்து உலகிற்கே நீர் பயன்பாடு பற்றி போதித்த இனம் என்று பல்வேறு பெருமதிங்களைக் கொண்டிருக்கும் நமது தமிழினம், இன்று நாதியற்ற இனமாக தலை கவிழ்ந்து நிற்கிறது. உலகில் நமக்கு உதவுவதற்கு யாருமில்லை. ஒட்டு மொத்த தமிழர்களையும் குண்டு வீசி அழித்தாலும் கூட நமக்காக கண்ணீர் சிந்த ஆளில்லை. இன்றைய சூழ்நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

"இந்தியா எனது தாய் நாடு. இந்தியர்கள் அனைவரும் என் உடன் பிறந்தோர்" என்று நெஞ்சில் வைத்து நாம் பள்ளியிலிருந்து உறுதியேற்றோமே அந்தத் தாய் நாடு தான் எம் தொப்புள் கொடி உறவுகளை எம் கண்முன்னேயே கொத்துக் கொத்தாகக் கொன்றது என்பதை நாம் இன்னுமா உணரவில்லை? எமது "உடன் பிறந்தோர்"தாம் இந்தப் படுகொலைகளுக்கு மவுன சாட்சியாக இருந்து அங்கீகாரம் அளித்தார்கள் என்பதை இன்னுமா நாம் தெரிந்து கொள்ளவில்லை?

"கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எம் தமிழ்க்குடி" என்று தமிழினத்தின் பல்லாயிர வருட வரலாற்றை மறைத்து விட்டு வெறும் 60 வருட "இந்திய" அடையாளத்தை சுமந்து திரிந்ததற்காக நமக்கு அளிக்கப்பட்ட பரிசு ஈழத்தமிழர்களின் இரத்தமும் பிணங்களும் தான். "நான் இந்தியன்" என்று பெருமிதம் கொண்டதெல்லாம், இந்த படுகொலைகளை நிகழ்த்துவதற்காகத் தானா..?

வங்க தேசத்து மக்கள் மேற்கு வங்கத்திற்கு அகதியாக வந்த போது, அவர்களுக்காக திரட்டப்பட்ட நிதித்தொகையில், இந்தியாவிலேயே அதிகமாக அள்ளி வழங்கியது தமிழ்நாட்டு மக்களாகிய நாம் தான். ஆனால் இன்றைக்கு, பல்லாயிரக்கணக்கில் நம் மக்கள் ஈழத்தில் செத்து மடிந்த போதும், "அவர்களை காப்பாற்றுங்கள்" என தமிழகத்தில் நாம் தீக்குளித்துச் செத்துப் போராடிய போதும், நமக்கு ஆறுதல் வார்த்தைச் சொல்ல இந்தியாவில் யாரும் இல்லை. செத்தவர்கள் தமிழர்கள் என வேண்டாம், செத்தவர்கள் மனிதர்கள் என்ற பார்வையிலாவது இப்படுகொலைகளைக் கண்டித்து ஒரு சிறு அறிக்கையையாவது, வேற்று மாநிலத்தவரிடமிருந்து வரும் என எதிர்பார்த்தோம். ஆனால், இறுதி வரை வரவில்லை. இனியும் வராது. "இந்தியர்கள்" என்று தமிழர்களாகிய நாம், நம்மை நினைத்துக் கொண்டாலும், "தமிழர்கள்" இந்தியாவில் மட்டுமல்ல உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அநாதைகள் தான் என்பதை இவை தெளிவுபடுத்தி விட்டன.

தமிழின படுகொலைகளை தலைமையேற்று நிகழ்த்தி இரத்தக் கறையுடன் நிற்கும் "இந்தியா", கிரிக்கெட் போட்டியில் தோற்று விட்டதாக கவலை கொள்ளும், இரக்கமே இல்லாத வெட்கம் கெட்ட ஜென்மங்களும் இந்த தமிழ்நாட்டில் இருக்கின்றனர். தமிழர்கள் மீதான இந்திய அரசின் பகைமையை அவர்களுக்கெல்லாம் என்றைக்கு நாம் புரிய வைக்கப் போகின்றோம்? ஈழத்தமிழர்கள் மீது இந்தியா நடத்திய இரத்த வெறியாட்டத்தை கண்டும் கூட, இன்னும் இரக்கப்படாமல், "இந்தியன்" என்று பேசித் திரிபவர்களுக்கு இவற்றை என்று நாம் உணர வைப்பது?

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர், சேலம் ரயில்வே கோட்டம் என அண்டை தேசிய இனங்கள் நமது உரிமையை மறுதலித்த போதெல்லாம், அவர்களுடன் ஒன்று கூடி கூத்தடித்த இந்திய அரசுக்கு இதுவரை நாம் என்ன எதிர்வினை ஆற்றியிருக்கிறோம்? நமது தாயகப் பகுதியிலிருந்த கச்சத்தீவை நம்மைக் கேட்காமலேயே சிங்களனுக்கு வாரி வழங்கினானே தில்லிக்காரன், அவனுக்கு நாம் இதுவரை என்ன உணர்த்தியிருக்கிறோம்? நமக்கான உரிமை அளிக்கப்பட்டிருந்தும் கூட, இதுவரை காவிரி நீர் நமக்கு வந்ததில்லை. நாமே நமக்காக கட்டியது தான் என்றாலும், முல்லைப் பெரியாறு அணையை பார்வையிடக் கூட நமக்கு அனுமதியில்லை. நம் பகுதி மக்களுக்காக நாம் நடத்தவுள்ள கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கச் செல்லும் நமது மீனவர்களை குருவிகள் போல வேற்று நாட்டவன் சுட்டுக் கொல்வதை பற்றி இந்தியனுக்கு எந்த கவலையுமில்லை. நம் கண்முன்னேயே நமது இரத்த உறவுகள், குண்டு வீசிக் கொல்லப்படுகிறதே என வாய்விட்டு கண்ணீர் விடக் கூட நமக்கு உரிமையில்லை! ஈழத்தமிழர் விடுதலைக்கு மட்டுமல்ல உலகில் வேறு எந்த விடுதலைப் போராட்டத்திற்கும் உதவ முடியாத நிலையில் தான் தமிழகத் தமிழர்களாகிய நாம் இன்றும் இருக்கிறோம் என்றால் நாம் உண்மையில் யார்?

அடிமைகள். ஆம். இந்தியத்தின் அடிமைகள். காலம் இதனை நமக்கு நன்கு உணர்த்தியிருக்கிறது. ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழிக்கிறோம் என்ற இறுமாப்பில், தமிழகத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உந்து விசை கொடுத்திருக்கிறது இந்திய அரசு. இந்தியத்தின் அடிமைகளாக போலி சுதந்திரம் பேசிக் கொண்டிருக்கும் நாம் நமக்கான விடுதலைப் போராட்டத்தை தொடங்குவதற்கான கட்டளையை பிறப்பித்திருக்கிறது வரலாறு. நிறைவேற்ற வேண்டிய இடத்திலிருக்கும் நாம், இனி என்ன செய்யப் போகிறோம்..?

"தடுப்பு முகாம்களில் நடக்கும் கொடூரங்கள் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுக்கும்"

அனைத்துலக சமூகங்களினதும் நிறுவனங்களினதும் சாட்சியங்களும் நிவாரணங்களும் மக்களைச் சென்றடையாது தடுப்பதை சர்வதேச சமூகம் அனுமதிப்பதற்கு, நிகழ்காலத்தில் சிறீலங்கா ஒரு சிறந்த உதாரணமாகும் என்று கூறும் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனிதாபிமானச் செயற்பாடுகளின் துணைச் செயலாளராகவும் அவசரகால நிவாரண நிதிகளின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த ஜன் எகலாண்ட் (Jan Egeland), உலக அரசுகள் 2005இல் பிரமாணம் எடுத்துக்கொண்ட "பாதுகாப்பதற்கான கடமை" (R2P)யை நிறைவேற்றத் தவறியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 
இந்த முகாம்களுக்குள் பெண்கள் பெரும் கொடூரங்களை எதிர்நோக்குகின்றார்கள் எனக்கூறியுள்ள அவர், தனக்குப் பின் பொறுப்பேற்ற ஜோன் கோல்ம்ஸ் வவுனியா தடுப்பு முகாம் தொடர்பாக வெளியிட்ட அறிக்கையை சுட்டிக்காட்டியுள்ளார்.

 
2005 செப்டெம்பரில் ஐ.நாவின் உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு தயாராகிக்கொண்டிருந்த வேளையில் கொபி அனான் "பரந்த சுதந்திரம்" என்ற பெயரில் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்து உலகத் தலைவர்களால் பாராட்டுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாதுகாப்பதற்கான கடமையான (Responsibility To Protect - R2P) ஆனது உலகில் எங்கு நடக்கும் இனப்படுகொலைகளையும் இனச் சுத்திகரிப்புகளையும் எதிர்த்து மனிதாபிமானத்தையும் மனித உரிமைகளையும் நிலை நிறுத்துவோம் என உறுதியெடுக்கப்பட்டது.

 
இதுவே R சட்ட அமைவாகத் தோற்றம் கொண்டது.

 
சிறீலங்காத் தடுப்பு முகாம்களில் பெண்களுக்கு நடக்கும் கொடூரங்கள் வெளிவருவதில்லை. ஏனெனில் எங்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. எமது சாட்சியங்கள் அங்கு ஏற்பட்டுவிடாது தடுக்கப்பட்டுள்ளது.

 
ஆனாலும், அங்கு நடக்கும் கொடூரங்கள் உண்மையானவை. இங்கு இழைக்கப்படும் அநீதிகளும் கொடுமைகளும் மீண்டும் ஒரு போராட்டத்திற்கு வழிவகுக்கும் என நான் நம்புகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 
கடந்த வாரம் ஐ.நா. பணியாளர்கள் கூட நிழற்படக் கருவி, ஒளிப்படக் கருவிகளையோ கொண்டு செல்வது தடுக்கப்பட்டிருப்பது தொடர்பாகவும் மற்றும் 17 மனித உரிமைப் பணியாளர்களின் விசாரணைகளை நிறுத்தியுள்ளமை தொடர்பாகவும் "இன்ன சிற்றி பிரஸ்" ஊடகவியலாளர் ஜோன் கோல்ம்சை வினவியபோது அதற்குரிய பதில்கள் எதனையும் அவர்கள் வைக்கவில்லை.

 
இது இவ்வாறிருக்க, இலங்கையில் மோதலில் சிக்குண்ட தமிழ் மக்களின் விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்புச்சபை வரலாற்றுத் தவறை இழைத்துவிட்டது என சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

 
இலங்கையின் தற்போதைய மனிதாபிமான, மனித உரிமை நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாக முயல்வதன் மூலம் கடந்த காலத்தில் தனது பாராமுகத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை இனியாவது சரி செய்வதற்கு பாதுகாப்புச் சபை முன்வரவேண்டும் என்றும் மனித உரிமைக் கண்காணிப்பகம் கோரியுள்ளது.

 
முகாம்களில் உள்ள மக்களின் சுதந்திரத்திற்கான உரிமை மற்றும் நடமாட்ட சுதந்திரம் என்பவற்றை ஐ.நா. பாதுகாப்புச் சபை, வலியுறுத்த வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் என்ற சந்தேக நபர்களின் அடிப்படை மனித உரிமைப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது.

 
ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தூதுவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைக் கண்காணிப்பகம், இரு தரப்பினதும் மனித உரிமை, மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சர்வதேச விசாரணைக் குழுவொன்றை அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
அந்தக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

 
இலங்கையில் மோதலில் சிக்குண்ட மக்களின் நிலை குறித்து பாதுகாப்புச் சபை காட்டிய அலட்சியம் பாரிய வரலாற்றுத் தவறாகும். ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீடுகளின்படி இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

 
இரு தரப்பினரதும் மோசமான சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு மத்தியில் இது இடம்பெற்றது. எனினும் பாதுகாப்புச்சபை இந்த விடயம் குறித்து ஆராயக்கூடத் தவறியது. உத்தியோகப்பற்றற்ற பேச்சுகள் என்ற அடிப்படையில் மாத்திரம் இலங்கை விவகாரத்தை அணுகியதன் மூலம் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பதைப் பாதுகாப்புச்சபை தவிர்த்துக்கொண்டது.

 
பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஏழாவது அறிக்கை மோதலின் போதும் தற்போதும் பொதுமக்கள் அனுபவித்த, தொடர்ந்தும் அனுபவிக்கின்ற துயரங்களை வலியுறுத்தியது. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பும் மனித உயிர்கள் குறித்து வேண்டுமென்றே அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்ததன் மூலம் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை மீறியுள்ளன.

 
விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுடன் பொதுமக்கள் மோதல் நடைபெறும் பகுதிகளிலிருந்து வெளியேறுவதைத் தடுத்து வந்தனர். சிறீலங்கா அரசும் மோசமான தவறுகளை இழைத்தது. இவை எவற்றையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என சிறீலங்கா அரசு கூறுவதை மன்னிக்க முடியாது.

 
கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை எனப் பாதுகாப்புச் சபைக்கு மறுப்புத் தெரிவித்த போதிலும் அரச படைகள் தொடர்ச்சியாகப் பொதுமக்கள் அதிகமாகவுள்ள பகுதிகள், வைத்தியசாலைகள் மீது இந்தத் தாக்குதலை மேற்கொண்டன. எனினும் தொடரும் மனிதாபிமான, மனித உரிமை நெருக்கடிகளுக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய தேவை பாதுகாப்புச்சபைக்குள்ளது.

 
இதன்மூலம் தனது முந்தைய செயற்பாடின்மை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சிறிதளவுக்கு நிவர்த்தி செய்யலாம். சிறீலங்கா அரசாங்கம் நடத்தும் மூடப்பட்ட நலன்புரி முகாம்களில் 3 இலட்சம் தமிழ் மக்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 
முழுக் குடும்பங்களாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் தொழிலுக்கோ அல்லது உறவினர்களுடன் செல்வதற்கோ அனுமதிக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நன்றி: ஈழமுரசு (26.06.2009)
 


13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி.யின் தலைமையில் மக்கள் போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும்: ரில்வின் சில்வா

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை நீண்ட நாட்களுக்கு முகாம்களில் தங்கவைத்திருப்பது, இலங்கையைத் தோல்வியுற்ற ராஜ்ஜியமாக சர்வதேசம் பிரகடனப்படுத்த காரணமாக அமைந்துவிடும். அரசியல் இலாபத்திற்காக வடக்கில் தடுப்பு முகாம் வாழ் மக்களைப் பயன்படுத்திக் கொள்வதால் சிறீலங்கா அரசாங்கம், மனித உரிமைகள் மீறல் போன்ற கடுமையான சர்வதேச சட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் அபாயம் தோன்றியுள்ளது என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

 
13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கலின் ஊடாக மீண்டும் இலங்கையில் பிரிவினைவாத யுத்தமொன்றை உள்நாட்டில் தோற்றுவிக்க இடமளியோம். எனவே, 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜே.வி.பி.யின் தலைமையில் மக்கள் போராட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படுமெனவும் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

 
தீர்வுத்திட்டம் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை தெளிவுபடுத்துகையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது

பிரிகேடியர் தீபன் - 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது
 
 
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.
யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.
2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான 'L' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.
கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."
தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.
-சாணக்கியன்

 

நன்றி:- தமிழ்வின்.

வெள்ளி, 26 ஜூன், 2009

அறிக்கைகளின் அரசியல்:இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கம் விடுக்கும் அவசர வேண்டுகோள்!

அறிக்கைகளின் அரசியல்:இணையதளங்களுக்கு இளந்தமிழர் இயக்கம் விடுக்கும் அவசர வேண்டுகோள்!
24.06.2009, சென்னை, தமிழ்நாடு.

இன அழிப்பு உச்சத்தை எட்டிய 19/5 க்குப் பிறகு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களைப் பற்றியும் விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும் உலகத்தமிழர்கள் மத்தியில் பல்வேறு விதமான குழப்பங்களும் சந்தேகங்களும் உலா வருகின்றன.

பல்லாயிரக்கணக்கில் நடந்த படுகொலைகளை மறந்து விட்டு, தலைவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்ற விவாதத்திற்குள் நாம் ஆழ்ந்து போக வேண்டும் என்று சிங்கள அரசு விரும்பியவாறே தற்பொதைய நிலவரங்கள் உள்ளன.

மேலும், இயக்கத்தில் உள்ளதாக சொல்லப்படும் சில தலைவர்களின் அறிக்கைகள், “போராளிகள்” என அடையாளப்படுத்தப்படும் சிலரது கட்டுரைகள் சிங்கள அரசின் உளவுத்துறைக்கு நேரடியாகவே துணைபோவதாக நாம் கணிக்கிறோம். ஏற்கெனவே இது, இந்திய “றோ” உளவுத்துறையின் சதியாக இருக்கலாம் என்ற செய்தி “அதிர்வு”, “நெருடல்” இணையதளங்களால் எழுப்பப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

ஆயுதப் போராட்டம் நடத்தியது தவறு என்று சொல்வதும், இயக்கத்தின் கடந்த காலத் தவறுகள் குறித்து பட்டியலிடுவதுமாக சில கட்டுரைகள் கூட வெளிப்பட்டன. இயக்கத்திற்குள் நடைபெற வேண்டிய விவாதங்கள் பொது விவாதங்களாக்கப்பட்டுள்ளன. அதற்கு மிகச் சமீபத்திய உதாரணம், நெருடல் இணையதளத்தில் வெளியான “இன்னொரு இறைவன் வரமாட்டான் எங்களைக் காப்பாற்ற” என்ற கட்டுரை. இயக்கத்தின் மீது சேறடிக்கும் விமர்சனங்களை எழுப்பும் அக்கட்டுரை பொது விவாதத்தளத்திற்கு விடப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது. அக்கட்டுரையில்,

· தமிழீழ விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவு பலவீனப்பட்டிருந்தது,

· புலிகள் இயக்கத்தின் சகல மட்டங்களிலும் சிங்கள உளவுப்பிரிவினர் ஊடுருவியிருந்தனர்,

· சமாதானக் காலத்தில் இயக்கத்தின் உறுப்பினர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் வழி சொகுசு வாழ்க்கைப் பழக்கப்படுத்தப்பட்டது,

· இயக்கத்திற்குள் சிங்கள இராணுவம் ஊடுருவல்,

· கட்டாய ஆள் சேர்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவை குறித்து நேரடியாக எந்தக் கருத்தையும் வெளியிடுவதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தவிர வேறு யாருக்கும் உரிமையிருக்க முடியாது.

ஏனெனில் இவை அனைத்தும் இயக்கத்தின் நடவடிக்கைகள் குறித்த உள்ளரங்கத் திறனாய்வுச் செய்திகள். இவை உண்மையா பொய்யா என்பதல்ல எமது அக்கறை. தமிழீழ விடுதலைப்புலிகள் குறித்து எதிர் முகாம் மேற்கொள்ளும் வழமையான அவதூறு பரப்பலின் அனைத்து அம்சங்களும் இந்த ஒரேக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டும். எழுதியவர் நோக்கத்தைக் குறித்து நாம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதே வேளை, இக்கட்டுரை ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று சந்தித்திருக்கும் பின்னடைவு அவ்வியக்கம் கடந்த காலத்தில் செய்த தவறுகளின் விளைவு என்று பரவலாக பரப்புரை செய்யப்படுகின்றது. இப்படி செய்பவர்கள் அனைவரும் ஈழத்தில் இன அழிப்பு நடந்ததையோ இன்றும் முகாம்களில் விலங்குகளை போல அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சம் தமிழர்களின் வாழ்வை குறித்தோ அநியாயமாக திருப்பி அனுப்பப்பட்ட “வணங்காமண்” கப்பல் குறித்தோ எந்தப் போராட்டத்தையும் முன்னெடுக்காதவர்கள் என்பதும், இவர்கள் அனைவரும் இலங்கையிலும் தமிழகத்திலும் அரசதிகாரத்தின் ஒட்டுக் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் நாம் அறிந்த செய்திகள். இந்நிலையில் இயக்கத்தின் மீது போகிற போக்கில் விமர்சனங்களை வீசும் மேற்கண்ட கட்டுரை இயக்கத்தின் ஆதரவு முகாமிலிருந்தே வெளியிடப்பட்டிருப்பது ஒட்டுக் குழுக்களுக்கு ஊட்டமளிக்கும் செயலாக அமைந்து விடும்.

ஏசியன் ட்ரைபியுன்” இணையதளம் நேற்று(22.06.09), தலைவர் பிரபாகரனை படுகொலை செய்தது பொட்டு அம்மானாகவே இருக்க முடியும் என்ற பொருளில் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக புலிகளின் புலனாய்வுப் பிரிவு செயல்பட்டது என்று கட்டுரை வெளியிட்டுள்ளது. இச்செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டதாக “ஏசியன் ட்ரைபியுன்” குறிப்பிட்டுள்ளது. இந்தக் கட்டுரை தமிழகத்தில் தினத்தந்தி நாளிதழில் விரிவாகவே வெளியிடப்பட்டுள்ளது. ஆக, பொட்டு அம்மான் மீதும் புலிகளின் புலனாய்வுப்பிரிவின் மீதும் தமிழர்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி தொடங்கப்பட்டதை நாம் உணர முடிகின்றது.

இந்தப் பின்னணியில் நெருடல் இணையதளம் வெளியிட்ட கட்டுரை தெரிந்தோ தெரியாமலோ சிங்கள உளவுத்துறையின் சதியின் ஒரு பகுதியாக மாறும் ஆபத்திருக்கிறது.

இது போன்ற சூழல்களை தவிர்ப்பது போராடும் இனத்திற்கு தேவையான அடிப்படை ஒழுங்கு என்று நாம் கருதுகிறோம். எந்த இயக்கமும், தலைமையும் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது அல்ல. ஆனால், விமர்சனம் செய்யப்படுவதற்கென்று களமும் காலமும் இருக்கின்றது. இணையதளங்கள் அதற்கான களமல்ல. இது அதற்கான காலமும் அல்ல. இதை ஒரு தீவிர சிக்கலாகவே கணக்கில் எடுத்துக் கொண்டு தமிழர் இணையதளங்கள் செயல்பட வேண்டும் என்று வேண்டுகிறோம்.

தோழமையுடன்,

க.அருணபாரதி,

ஒருங்கிணைப்பாளர்,

இளந்தமிழர் இயக்கம்

செவ்வாய், 23 ஜூன், 2009

வணங்காமண் கப்பலை இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறு இந்தியா உத்தரவிட்டது!

வன்னித் தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன், இலங்கைக்குச் சென்று அங்கிருந்து திருப்பி விடப்பட்டு, சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு செல்லுமாறும் இந்தியா உத்தரவிட்டது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து சென்னை அருகே நின்று கொண்டிருந்த வணங்காமண் கப்பல் அங்கிருந்து கிளம்பிச் சென்றது.

ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்காக உணவு, மருந்து, குடிநீர் உள்ளிட்டவற்றை சேகரித்து கேப்டன் அலி என்ற சிரிய நாட்டுக் கப்பலில் அனுப்பி வைத்தனர். இந்தக் கப்பலுக்கு வணங்கா மண் என்று அவர்கள் பெயரிட்டிருந்தனர்.

ஆனால் இந்தக் கப்பலை வன்னிப் பகுதிக்குப் போக விடாமல் இடைமறித்து கொழும்புக்குக் கொண்டு சென்றது இலங்கை கடற்படை. அங்கு சோதனையிட்டனர். இதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் இல்லை என்று தெரிவித்த இலங்கை அரசு, இருப்பினும் நிவாரணப் பொருட்களை இறக்காமல் அப்படியே திரும்பிப் போய் விடுமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னை நோக்கி வந்தது வணங்காமண். சென்னை துறைமுகத்திற்கு 12 கடல் மைல் தொலைவில் நிலை கொண்டது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அதன் ஊழியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

வணங்காமண் கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கைத் தமிழர்களிடம் சேர்ப்பிக்க மத்திய அரசு உதவ வேண்டும் என முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கப்பலில் இருந்த ஊழியர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தண்ணீர் கேட்டு அவர்கள் சென்னை துறைமுகத்திற்குத் தகவல் அனுப்பினர். இதையடுத்து அவர்களுக்கு 200 லிட்டர் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் வணங்காமண் கப்பலை இந்திய கடற்படை அதிகாரிகள் திடீரென சோதனையிட்டனர். சோதனைக்குப் பின்னர் வணங்காமண் கப்பல் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், இந்திய கடல் எல்லையை விட்டு அது செல்ல வேண்டும் என கப்பல் கேப்டனிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து வேறு வழியின்றி வணங்காமண் கப்பல் சென்னை கடல் பகுதியிலிருந்து கிளம்பியுள்ளது. அனேகமாக அது மறுபடியும் ஐரோப்பாவுக்கே திரும்பிச் செல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

வணங்காமண் குறித்து சந்தேகமாக இருப்பதாக தெரிவித்துள்ள இந்திய தரப்பில், என்ன மாதிரியான சந்தேகம் என்பது குறித்து விரிவாக தெரிவிக்கப்படவில்லை.

-தமிழ்செய்தி

திங்கள், 22 ஜூன், 2009

மலையாள அதிகாரிகள் பிடியில் ‘இந்திய’ நிர்வகம்

மத்திய அமைச்சரவையில் கேரள அமைச்சர்களுக்கு முக்கிய பொறுப்புகளும், ஏராளமான மலையாள அதிகாரிகளுக்கு மத்திய அரசு பணியும் வழங்கப்பட்டுள்ளது. மத்தியில் மீண்டும் பதவி ஏற்றுள்ள காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது. அமைச்சரவை செயலாளர் கே.எம்.சந்திரசேகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரது பணி காலத்தை நீட்டிப்பதற்கு எடுத்துள்ள முடிவால், நாட்டின் உயர் பதவியில் முத்திரை பதிக்கும் பெருமை கேரளாவுக்கு கிடைத்துள்ளது. இவர்கள் தவிர வெளியுறவு செயலாளர் சிவ் சங்கர் மேனன், பிரதமரின் முதன்மை செயலாளர் டி.கே.ஏ.நாயர், நாடாளுமன்ற செயலாளர் ஜெனரல் பி.டி.ட்டி. ஆச்சாரி குடியரசு தலைவர் செயலாளர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், உள்துறை செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜி.கே.பிள்ளை ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அதேபோல், தொழிலாளர்கள் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக செயலாளர் திருமதி சுதா பிள்ளை மற்றும் வணிகத் துறை செயலாளரான அவரது கணவர் கோபால் கிருஷ்ண பிள்ளை ஆகியோரும் மலையாளிகள்தான். இது மட்டும் அல்லாமல், சமீபத்தில் தொடங்கப்பட்ட தேசிய விசாரணை ஆணையத்தின் (என்.ஐ.ஏ.) முதல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராதா டிவினோத் ராஜூவும் கேரளாவை சேர்ந்தவர்தான். அதோடு வேளாண்மை செயலாளர் டி.நந்தகுமார், சட்டத்துறை செயலாளர் டி.கே.விசுவநாதன், விமான போக்குவரத்துத் துறை செயலாளர் எம்.மாதவ நம்பியார், இஸ்ரோ தலைவரும், விண்வெளி ஆராய்ச்சித் துறை செயலாளருமான ஜி.மாதவன் நாயர் ஆகியோரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதேபோல், கனிம வளர்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயர், கடல் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு நிறுவன தலைவர் லீனா நாயர் ஆகியோரும் கேரளாவை சேர்ந்தவர்கள் . அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் அல்லாமல், அமைச்சர்கள் வட்டத்தை பார்த்தாலும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் இடம் பெற்றுள்ளனர். கேபினட் அமைச்சரவையில் 2-வது முறை ராணுவ அமைச்சராக ஏ.கே.அந்தோணி, வெளி நாட்டில் வாழும் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சராக வயலார் ரவி ஆகியோரும் இணை அமைச்சர் பதவிக்கு இரயில்வே துறையில் இ.அகமது, வேளாண்மை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறையில் கே.வி.தாமஸ், உள்துறையில் முல்லப் பள்ளி ராமச்சந்திரன், வெளி விவகாரத் துறையில் சஷி தரூர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தொடர்புடைய எம்.கே. நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி, விஜய் நம்பியார் (அய்.நா. அதிகாரி), அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் (இலங்கை ராணுவ ஆலோசகர்) ஆகிய அனைவருமே மலையாளிகள் தான்!

நன்றி:- பெரியார் முழக்கம்

அழிக்கப்பட வேண்டிய காங்கிரசு ஆட்சி அமைத்தது! அடிமைப்பட்ட சாதியினர் ஆதரவு இழந்தனர்!உண்மையை உணர்ந்து செயல்பட முந்துங்கள்!! -வே. ஆனைமுத்து

இந்திய தேசியக் காங்கிரசு 10ஆவது தடவையாகத் தலைமையேற்று இந்திய ஆட்சியை அமைத்துவிட்டது. இப்போது நடைபெற்றது, 15ஆவதுதடவை நாடாளு மன்றத்துக்கு உரிய தேர்தல். இந்தியாவில் 71.40 கோடி வாக்காளர்கள் உள்ளனர்; தமிழ்நாட்டில் 4.16 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இங்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. காவல்துறை, துணைப் படைத்துறை, படைத்துறை மற்றும் உள்ள எல்லாப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் 15ஆவது தடவையாக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது.

இதிலிருந்தே இங்கு மக்கள் நாயக உணர்வு மலரவில்லை என்பதை நாம் அறிய முடியம். அதற்கு மாறாகப் பணநாயகம், காலித்தனம், சாதி உணர்வு என்கிற கூறுகளும், தேர்தல் தில்லுமுல்லுகளும் மிக அதிகமாக வளர்ந்து விட்டன என்பதை எல்லோரும் அறிய முடியும். இதுபற்றிப் பொதுவில் உள்ள சில உண்மைகளை நாம் உணரவேண்டும். இந்தியாவில் உள்ள 6 இலக்கம் ஊர்களில் ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு உள்சாதியிலும் சில வாக்குகள் கட்டாயமாகக் காங்கிரசுக்கு உண்டு என்பது ஓர் உண்மை. இந்தத் தன்மை தேசியக் கட்சிகளில் பொதுவுடைமைக் கட்சிகளுக்கோ, பாரதிய சனதாவுக்கோ இல்லை. சாதி அடிப்படையிலான கட்சிகளுக்கும் இல்லை.

தமிழக மக்கள் 3 பகுதிகளாகப் பிரிந்து கிடக்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க. என்கிற இரண்டு கட்சிகளும் மூன்றில் இரண்டுபங்கு மக்களைத் தம் பிடியில் கொண்டுள்ளன. மற்றெல்லாக் கட்சிகளும் மீதியுள்ள மூன்றில் ஒரு பங்கு மக்களைக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றில் ஒருபங்கு வாக்குகளைப் பெற்றுள்ள கட்சிகள் தேர்தல்தோறும் இரண்டு அணிகளாகப் பிரிந்து, மாறி, மாறி ஏதாவது ஓர் அணியில் சேருவதையே 1971 முதல் ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இதை இவர்களால் ஒரு போதும் மாற்றிக் கொள்ளமுடியாது. அதற்கு மாறாக தி.மு.க., அ.தி.மு.க. தலைமையை ஏற்றுத் தீரவேண்டிய ஈன நிலையில்தான் இவர்கள் இருந்து தீரவேண்டும்.

இப்படிப்பட்ட இரண்டு அணிகளில் ஒன்று இந்திய மத்திய அரசில் ஆட்சியை அமைக்கிற ஒரு கட்சியோடு சேர்ந்து கொண்டே ஆகவேண்டும். எல்லா மாநிலங்களிலும் உள்ள மாநிலக் கட்சிகள் மற்றும் சாதிக் கட்சிகளின் நிலைமை இதுதான். அதாவது, மய்ய அரசை அமைப்பதிலோ, மாநில அரசை அமைப்பதிலோ அணி மாறாத கட்சி என்பதாக ஒன்றுமே இல்லை, இது ஏன்? ஏனெனில் தேசியக் கட்சிகளுள் பாரதிய சனதாக் கட்சி ஒன்றைத் தவிர மற்ற கட்சிகளுக்குத் தெளிவான அரசியல் நிலைப்பாடு இல்லை. பாரதிய சனதா வைத்துள்ள இராம ராஜ்யம் அமைப்பு, இராமர் கோயில் கட்டுதல் என்பதை எந்தத் தேசியக்கட்சியும், எந்த மாநிலக் கட்சியும் வெளிப்படையாக எதிர்ப்பது இல்லை. ஆனால் அந்தக் கட்சியின் தலைமையில் மத்திய ஆட்சியில் சேருவதற்கு வெட்கப்படுவதும் இல்லை.

அத்துடன்கூட இந்தியாவில் ஆட்சியை அமைக்கும் போது கூட்டணி சேருகிற கட்சிகள்-மதச் சார்பற்ற அணி, மதச்சார்புள்ள அணி என்று இருப்பதாக ஒரு பொய்யையே சொல்லுகிறார்கள், எப்படி இது பொய்? முதலில், இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே மதச் சார்பு அற்ற கோட்பாடு இடம்பெறவில்லை. “எல்லா மதங்களையும் ஒன்றுபோல் பாவிப்பது என்பதுதான் இந்திய அரசின் மதச்சார்பற்ற கொள்கை'' என்பதைத்தான்-மதச் சார்பு அற்ற தன்மை என்று எல்லா வாக்கு வேட்டைக் கட்சிக் காரர்களும் கூறுகின்றனர். அப்படிச் சொல்லுவது ஓர் ஏமாற்று-மதச் சார்பின்மைக்கு எதிரானது என்பதை தந்தை பெரியார் உறுதிபடக் கூறிவிட்டார்.

இதுபற்றித் திராவிட இயக்கத்தினரும் தெளிவாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது ஒரு பெரிய குறைபாடு ஆகும். அதனால்தான் தி.மு.க.-அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் 1971 முதல் இன்று வரையிலும்-மாறி, மாறி காங்கிரசுத் தலைமையிலான அணியையும், பாரதிய சனதா தலைமையிலான அணியையும், ஆளவிட்டார்கள்; அப்படிப்பட்ட ஆட்சியில் இவர்களும் பங்கேற்றார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் ஆட்சிக்கு வெளியில் இருந்து இரண்டு கட்சியின் ஆட்சிக்கும் ஆதரவு அளித்தன. மற்ற கட்சிகள் இதுபற்றிக் கவலைப்படுபவை அல்ல.

இந்நிலையில் தென்னாட்டில் செல்வாக்குப் பெற முடியாத நிலையில்-வடநாட்டில் உ.பி, பீகார், ம.பி, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், உத்தர்கண்ட் முதலான இந்தி பேசும் மாநிலங்களில் போதிய எண்ணிக்கையில் இடங்களைப் பெற முடியாத நிலையில்-தென்னாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத்தான் 2004 தேர்தல் வரையில் காங்கிரசு வென்றது. 2004 தேர்தலில்-தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையில் திரண்ட காங்கிரசு அணி, தி.மு.க. ஆதரவைப் பெற்று மத்தியில் காங்கிரசுத் தலைமையிலான ஆட்சியை அமைத்தது.

ஆனால் 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென்னாட்டில் ஆந்திரம், கேரளம், முதலான மாநிலங்களில் அதிக மாநிலங்களில் காங்கிரசு பெற்றுள்ளது. தமிழகத்திலும் புதுவையிலும் காங்கிரசுக் கூட்டணி 40இல் 28 இடங்களைப் பெற்றதுடன் மேற்கு வங்கம், பஞ்சாப், உ.பி.முதலான மாநிலங்களில் நல்ல அளவில் புதிய வரவுகளைப் பெற்றுவிட்டது. 2004 தேர்தலில் இந்திய அளவில் வெறும் 145 இடங்களைப் பெற்ற காங்கிரசு, 2009இல் இந்திய அளவில் 206 இடங்களைப் பெற்றுவிட்டது. தன் அணிக்கு 268 இடங்களைப் பெற்றுவிட்டது. இது எப்படி முடிந்தது?

எல்லா மாநிலங்களிலும் பணக்கரர்கள், தொழில் முதலைகள் அளித்த நிதி ஆதரவுடன்-ஒருவாக்குக்கு ரூ.50, ரூ.100, ரூ.200, ரூ.500 எனத் தந்தே வாக்குப் பெறப்பட்டுள்ளது. எல்லாக் கட்சிகளும் வாக்குக்குப் பணம் தந்தாலும்-நேரு குடும்பக் கட்சி பெற்றுள்ள மேல்சாதி ஆதரவுக் கட்சி, பணக்காரர் பாதுகாப்புக் கட்சி என்கிற கூறுகள் காங்கிரசுக்கு ஆதரவாக அமைந்துவிட்டன. இந்த நிலைமை மிகவும் கேடானது. ஏன்? ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும், கொலைகாரர்களின் பாதுகாப்பு அரணாகவும், தேசிய இன எழுச்சிகளை ஒடுக்கும் கட்சியாகவும் விளங்குவது காங்கிரசு. அத்துடன் குடும்ப வாரிசு அரசியலுக்கு இந்தியாவில் வித்திட்டது காங்கிரசு. ஊழலையும் மக்கள் நாயகத்துக்கு எதிரான தன்மைகளை யும் வளர்த்தெடுத்தது காங்கிரசு. எப்படி?

1. இந்திராகாந்தி, 2.2.1959இல்-நேருவின் காலத்திலேயே, அனைத்திந்தியக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். நேருவுக்கு ஒப்பான ஜெயப்பிரகாஷ் நாராயண், ஜே.பி.கிருபளானி முதலானவர்கள் திட்டமிட்டு முன்கூட்டியே காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

2. 15.1.1966இல், நேருவின் மகள் என்பதால் இந்திரா காந்தியே பிரதமராக்கப்பட்டார். நகர்வாலா வங்கி ஊழலைத் தொடங்கி வைத்தவர் இந்திராகாந்திதான்.

3. 1969இல் கட்சியில் தானே முன்மொழிந்த என். சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக, தன் விருப்பத்துக்கு வி.வி. கிரியைக் குடிஅரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தி, காங்கிரசு உள்கட்சி மக்கள் நாயகத்தைத் கொன்றவர் இந்திராகாந்தி. அதன்மூலம் பெருந்தலைவர் காமராசரை வீழ்த்தியவர் இந்திராகாந்தி.

4. காமராசரை வீழ்த்திடக் கை கொடுத்த கலைஞர் கருணாநிதியை, 31.1.76இல் பதவி நீக்கம் செய்த சர்வாதிகாரி இந்திராகாந்தி.

5. நீதிமன்ற ஆணைக்குக் கட்டுப்படாமல், இந்தியாவில் அவசரகால ஆட்சியை அமல்படுத்தி-குமரி முதல் காஷ்மீர் வரை பல்லாயிரவரை வெஞ்சிறைக்கு அனுப்பிக் கொடுமை செய்தவர், இந்திராகாந்தி. இவ்வளவு நெடிய காலத்தில் இவர் செய்த ஒரே நன்மை வங்கிகளைத் தேசிய மயம் ஆக்கியது மட்டுமே. நிற்க.

6. அவசரகால ஆட்சியின்போதே ஜெயில்சிங் ஆதரவுடன், பஞ்சாபில் காங்கிரசை வளர்க்க வேண்டி, பிந்தரன் வாலே என்கிற சீக்கியக் கொலைகாரனை வளர்த்தெடுத்து, அகாலிதளத்தை அழிக்க முயன்றவர், இந்திரா. அவனோ சீக்கிய மதத் தேசியவாதியாக மாறி, இந்திராவின் ஆட்சியை எதிர்த்தபோது, அவனைக் கொல்லுவது என்கிற பேரால் அமிர்தசரஸ் பொற்கோயில் வளாகத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சீக்கியரைக் குருவிகள்போல் கொன்றுகுவித்த வன்னெஞ்சர், இந்திராகாந்தி.

7. வடகிழக்கில் அசாமில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான ‘அஹோம்' என்கிற பெரிய வகுப்பினரின் செல்வாக்கை ஒழிக்க வேண்டி பார்ப்பனர் காயஸ்தர், கொலிதா என்கிற மேல்சாதிகளைச் சார்ந்த மாணவர்களைத் தூண்டிவிட்டு, இஸ்லாமியர் மற்றும் பழங்குடியினரை ‘அந்நியர்' என்று பெயரிட்டு வெளியேற்ற எல்லாம் செய்து, அவர்கள் ஆட்சிக்கு வர வழி அமைத்தவர், இந்திராகாந்தி. டி.கே. பருவாவின், “இந்தியாவே இந்திரா-இந்திராவே இந்தியா'' என்கிற முழக்கத்தை வரவேற்றுத் தன்னை சர்வாதிகாரியாக மாற்றிக் கொண்டிருந்த இந்திராகாந்தி, கொலை செய்யப்பட்டவுடன்-அவருடைய மகன் என்பதால் மட்டுமே இராஜீவ் காந்தி பிரதமராக்கப்பட்டார். இரண்டாவது தலைமுறையின் வாரிசு அரசு 1984இலேயே தொடங்கி விட்டது.

கற்றுக் குட்டியான இராஜீவ் காந்தி, தன் அன்னையின் கொலையை முன்வைத்து, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரோடு கொல்லப்பட எல்லாம் செய்தார்.

1. 1984இல் நடந்த அந்தப் படுகொலைக்கு, இன்றுவரை-25 ஆண்டுகளாக நீதி வழங்கப்படவில்லை.

2. இராஜீவ் காந்தி செய்த போபர்ஸ் தரகு ஊழல் இன்றளவும் ஊர்முழுதும் நாறுகிறது. இதை அவரே மறைத்தார். அவர் இறந்தபிறகு பி.வி. நரசிம்மராவ் மறைத்தார். அவருடைய அன்புத் துணைவியார் சோனியா காந்தி இப்பொழுது அதை மறைக்கிறார்.

3. 1986இல் தமிழ்நாட்டில் வன்னியர்கள் நடத்திய இட ஒதுக்கீட்டுக் கிளர்ச்சியைப் புறந்தள்ளினார்; மண்டல் குழு பரிந்துரைகளைத் துச்சமாக மதித்தார்.

4. எல்லாவற்றுக்கும் மேலாக, 23.7.1987இல் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, அவருடைய விருப்பத்தை நிறைவேற்றிடவேண்டி, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வற் புறுத்தினார்; மிரட்டினார். அவர் அதற்கு அடிபணியவில்லை என்றவுடன்-இந்திய அமைதிப் படை என்கிற பேரால் 20,000 இந்தியப் படை வீரர்களையும், ஆயுதங்களையும் இலங்கைக்கு அனுப்பி, ஈழத் தமிழர் பல்லாயிரவரைக் கொன்று குவித்தார்; விடுதலைப் புலிகள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படச் செய்தார்; தமிழ்த் தாய்மார்கள் கற்பழிக்கப்படக் காரணரானார். இலங்கையின் இந்தியத் தூதர் டிக்சித் என்பவர்மூலம், இந்திய இராணுவத் தளபதிக்கு, பிரபாகரன் கொல்லப்பட ஆணை பிறப்பித்தார், இராஜீவ் காந்தி.

படையினர்க்கு உள்ள நெடுங்கால மரபு காரணமாக, அதைச் செய்திட முடியாது என, இராணுவத் தளபதி மறுத்துவிட்டார். எனவே பிரபாகரன் அன்று உயிர் தப்பினார். இராஜீவ் காந்தி 21.1.1991இல் கொலையுண்டார்.

1. அடுத்துவந்த நரசிம்மராவ் இராஜீவ் பேரிலான போபர்ஸ் ஊழலை மிக இலாவகமாக மறைத்தார்.

2. இராஜீவ் கொலைவழக்கில் பலருக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத் தர எல்லாம் செய்தார்.

3. 6.12.1992இல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்படத் துணிந்து வழி அமைத்துத் தந்தார். மும்பை, சூரத் முதலான நகரங்களில்-அதன் காரணமாகப் பல ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்படத் துணை போனார்.

4. மும்பை கலவரம் மற்றும் கொலை, கொள்ளை காவல்துறை அத்துமீறல் இவற்றைப் பற்றி ஆய்வுசெய்து நீதிபதி கிருஷ்ணா தந்த அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் போட்டார்.

5. வி.பி.சிங் காலத்தில் மத்திய அரசு வேலையில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன் முதலாக அளிக்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டைத் தரும்போது, பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் வளர்ந்த பிரிவினரை நீக்கவேண்டும் என்கிற ஒரு திருத்தத்தை, வி.பி. சிங் காலத்திய ஆணையில் திணித்தார். அதை அப்படியே உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டதால், அது, சட்ட வலிமையைப் பெற்றுவிட்டது.

இடையில் 1996, 1998, 2004 வரை பாரதிய சனதா, ஆட்சி நடைபெற்றது. 2004 தேர்தலில் இராஜீவ் காந்தியின் துணைவியார் சோனியா காந்தியின் தலைமையில் காங்கிரசு வெற்றிபெற்றது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற கேடுகளை டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு ஆட்சி செய்தது. தமிழ்நாடு-புதுவை உள்ளிட்ட 40 தமிழ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களும் காங்கிரசு அணியைச் சேர்ந்தவர்கள். சோனியா காங்கிரசு செய்த எல்லாத் தீய செயல்களுக்கும் இவர்கள்-உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் உறுதுணையாக நின்றார்கள்.

1. போபர்ஸ் ஊழலில் முதன்மையான குற்றவாளியான இத்தாலிய குவத்ரோச்சி என்கிற தன் உறவினர் குற்றம் அற்ற-அப்பாவி என்று கூறி, மேற்படி வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட எல்லாம் செய்துவிட்டார், சோனியா. அதன் மூலம் தன் கணவர் இராஜீவும் குற்றம் அற்றவர் என்று எண்பிக்க வழிகண்டு விட்டார்.

2. 13.5.2004இல் காங்கிரசு பதவியேற்ற நாள் முதல் திட்டம் தீட்டி, 2006 முதல் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சாவுடன் அரசு ரீதியான உறவை வலுப்படுத்திக் கொண்டு, தன் கணவர் இராஜீவைப் படுகொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிரபாகரனைப் பிடித்தே தீரவேண்டும்-அவரைத் தூக்கில் போட்டே தீர வேண்டும் என உறுதி பூண்டு,-ஆயுதங்கள், வானூர்திகள், படைத் தளபதிகள், வானூர்தி ஓட்டுநர்கள், ராடார்கள், பணக் கடன் இலவச நிதி உதவி என எல்லாம் வெளிப்படையாகவே இலங்கை அரசுக்குத் தந்து விடுதலைப் புலிகள் கொல்லப்படவும்; இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போலியான ஒரு மாகாண அரசு அமைக்கப்படவும், புலிகள் கட்டுப்பாட்டிலிருந்த 15,000 சதுர கிலோ மீட்டர் பரப்புப் பகுதியைக் கைப்பற்றிப் புலிகளை அழிக்கவும் எல்லாம் செய்தது இன்றைய கேடுகெட்ட-சோனியா தலைமையிலான தமிழின அழிப்புக் காங்கிரசு அரசுதான்!

3. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு உயர் கல்வியில் 27% தருவதை முடமாக்கி ஒரு சட்டம் செய்தது சோனியா காங்கிரசு அரசு.

4. அமெரிக்க அணுப் பெருக்க ஒப்பந்தத்துக்கு ஒப்புதலளித்து, இந்தியாவின் தன்னாதிபத்திய உரிமைக்குக் கேடு தேடியது சோனியாவின் காங்கிரசு அரசு.

5. மக்களால் தேர்வுசெய்யப்படும் அவைகளில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை அளித்திடச் சட்டம் செய்வதில், வகுப்புவாரி உரிமையை ஏற்க மறுத்து அதனாலேயே இன்றளவும் அதற்கான சட்டம் இயற்றாமல் ஏமாற்றுவது காங்கிரசு அரசு.

6. மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் எவரும் ஆசிரியப் பணியில் அமர்த்தப்படத் தகுதி அற்றவர்கள் என, 23.12.2008இல் தனிச் சட்டத்தை மாநிலங்கள் அவையில் நிறைவேற்றியது சோனியா காங்கிரசு அரசு!

இவ்வளவு கேடுகளையும், காங்கிரசின் பேரால்-நேருவின் குடும்ப வாரிசுகள் தத்தம் ஆட்சிக் காலத்தில் வன்னெஞ்சத்தோடு செய்தனர். இந்தக் கேடர்களின் தலைமையை ஏற்றுக்கொண்டும், அதை எதிர்த்தும் தமிழகத்தில் போட்டியிட்ட எல்லாக் கட்சிகளும் வாக்காளர்களுக்குப் பணத்தை வாரி இறைத்தன. தமிழ்நாடு ஆளுங்கட்சியான தி.மு.க. கடந்த 5 ஆண்டுக்கால மத்திய அரசின் சாதனைகளையும், தமிழ்நாட்டு அரசின் சாதனைகளையும் விளக்கிக் கூறி, வாக்குக் கேட்டது. ஈழத் தமிழர்கள் இலங்கையில் சம உரிமை பெற்றுத் திகழ எல்லாம் செய்வோம் என்று மட்டும் உரத்துக் கூறி வாக்குக் கோரியது.

தேர்தல் நெருங்கும் முன்னரே தமிழக மக்கள் நெஞ்சில் ஈழ விடுதலை ஆதரவுக் கோரிக்கை மகத்தான செல்வாக்குப் பெற்றிருப்பதைக் கண்ட அ.இ.அ.தி.மு.க. தலைவி செயலலிதா திடீரென ஒரு பொய் வேடம் பூண்டு, “தனிச் சுதந்தர ஈழ நாட்டை அமைத்துத் தரப் பாடுபடுவேன்'' என 29.4.2009 முதல் மேடைதோறும் விண்ணதிர முழங்கினார். இவற்றையயல்லாம் தமிழ்நாட்டு வாக்காளப் பெரு மக்கள் புறந்தள்ளிவிட்டது போல்-இங்கு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தமிழ்நாட்டுத் தேர்தல் முடிவுகளில்-தி.மு.க அணி, அ.இ.அ.தி.மு.க. அணி இரண்டினுடைய எதிர்பார்ப்பை-குறிப்பாக அ.இ.அ.தி.மு.க அணியின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிய கூறுகள் மூன்று ஆகும்.

1. தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்கிற தே.மு.தி.க.-40 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிட்டு, 25 தொகுதிகளில் நல்ல அளவில் வாக்கைப் பெற்றுவிட்டது.

8 தொகுதிகளில் அ.தி.மு.க.வும், 7 தொகுதிகளில் காங்கிரசும், 3 தொகுதிகளில் தி.மு.க.வும், 2 தொகுதிகளில் பா.ம.க.வும், 2 தொகுதிகளில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், தலா ஒரு தொகுதியில் பாரதிய சனதா, ம.தி.மு.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் என மொத்தம் 25 தொகுதிகளில் இக்கட்சிகள் தோல்வியடைய தே.மு.தி.க. கணிசமான வாக்கைப் பிரித்தது முக்கியக் காரணம் ஆயிற்று.

2. ஜெயலலிதாவின் புதிய பொய் வேடத்து முழக்கத்தைவிட, தமிழீழ விடுதலை ஆதரவு மாணவ இளைஞர்கள் தெருத் தெருவாக-வீடு வீடாகச் சென்று, “ஈழ விடுதலைக்கு ஊறு விளைத்த காங்கிரசுக்கு வாக்குப் போடாதீர்கள்!'' என வாக்காளர்களிடம் பணிந்து கேட்டு, காங்கிரசுக்காரர்கள், பல இடங்களில்-குறிப்பாக ஈரோடு, சேலம் தொகுதிகளில் தோல்வி பெறக் காரணம் ஆயினர். சிவகங்கையில் ப. சிதம்பரம் குறைந்த வாக்குப் பெறக் காரணம் ஆயினர்.

3. இத் தேர்தலில் பணம் தராத நல்ல கட்சி என்று எதுவும் இல்லை. அதிகப் பணம் தர வக்கு இல்லாத-மனம் இல்லாத கட்சியை நடத்துபவர்கள்-”தேர்தலில் பணம் விளையாடியது'' என்று கூறுவது போக்கிலித்தனமாகும். சில கட்சிக்காரர்கள்-கட்சிப் பொறுப்பாளர்களிடம் தந்த பணம் வாக்காளர்களுக்குப் போய்ச் சேரவில்லை என்பதும் ஓர் உண்மையாகும்.

இது மட்டுமா? இன்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 206 காங்கிரசுக் கட்சி மக்களவை உறுப்பினர்களுள் 41 பேர் குற்றவியல் வழக்குகள் சாற்றப்பட்டவர்கள்; இதில் 12 பேர் கொடிய குற்றங்களைச் செய்தவர்கள். அதேபோல் பாரதிய சனதாவைச் சேர்ந்தவர்களுள் 42 பேர் குற்றவியல் பின்புலம் கொண்டவர்கள்; 17 பேர் கொடிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள். மாநில அளவில் உ.பி.யில் 80 பேர்களுள் 32 பேர் குற்றம் சாற்றப் பெற்றோர்; தமிழ் நாட்டில் 23 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள்; இதில் 9 பேர் கொடுங் குற்றங்கள் செய்தவர்கள். ஆந்திராவில் 17 பேர், பீகாரில் 17 பேர், கொடிய குற்றப் பின்னணி உள்ளவர்கள்.

இவர்களும் நம்மை ஆளப்போகிற மக்களவையில் இன்று உறுப்பினர்கள் ஆகிவிட்டனர். ஒட்டு மொத்தத்தில், இந்தியாவில் உள்ள எந்தத் தேர்தல் கட்சிக்கும் எந்தக் கொள்கையும் இல்லை என்பதையும், கொள்கை இருப்பதாகச் சொல்வோரும் மக்கள் நாயகத்தை வளர்த்தெடுக்க அடிப்படையான கல்வி, இங்கு, எல்லோருக்கும் அளிக்கப்படவில்லை என்பதையும்; வாக்குரிமையின் மதிப்பை உணராமல் அரசு தரும் இலவசங்களை எதிர்நோக்கி ஏங்கும் ஈனப் புத்தியை வளர்த்துவிட்டு-பணத்துக்கும், துணி மணிக்கும், சாராயத்துக்கும், சோற்றுப் பொட்டலத்துக்கும் வாக்குப் போடும் இழிந்த தன்மையை எல்லாக் கட்சிகளும் இங்கே வளர்த்துவிட்டன என்பதையும்; சாதியை மய்யமாக வைத்துத்தான் கட்சிகளால் வேட்பாளர்கள் தேர்வு செய்யப் படுகிறார்கள் என்பதையும், சமூக அக்கறையும் எந்தப் பொறுப்பும் இல்லாத செய்தித் தாள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் வாக்காளர்களைத் தரங் கெட்டவர்களாக ஆக்கிட எல்லாம் செய்தன-செய்கின்றன என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

இந்த இழிந்த சூழலில் தமிழ்நாட்டுத் தமிழர் இப்போது செய்யத்தக்கவை யாவை?

1. தமிழ்நாட்டில் எல்லாவிதப் பள்ளிகளிலும் தமிழில் மட்டுமே எல்லாக் கல்வியையும் கொடு!

2. ஆங்கில மொழியை 3ஆம் வகுப்பு முதல் ஒரு பாடமாகமட்டுமே கற்றுக்கொடு!

3. எல்லாக் கல்வியையும் எல்லா மக்களுக்கும் இலவசமாகக் கொடு!

4. வேளாண் துறைக்கு முதலிடம் கொடு!

5. இலவசங்களைக் கைவிடு! வேலைக்கு உறுதி கொடு!

6. தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சி பெற்றிடத், தமிழகத் தமிழர்கள் ஒருமித்த கருத்துடன் இங்கே பணிபுரிய எல்லா அமைப்புகளையும் அநுமதித்திடு!

என்கிற கோரிக்கைகளை முன்வைத்து, 2009, 2010, 2011 முழுவதும் தமிழகமெங்கும் இக்கோரிக்கைகளைத் தூக்கிப் பிடித்திடத் தமிழ் உணர்வாளர்கள் முன்வர வேண்டும். ஊர் தோறும், தெருத்தோறும் சென்று இக் கோரிக்கைகளை முழங்கி, பெரும் எண்ணிக்கையிலுள்ள மக்களுக்கு மொழி-நாட்டு-இன உரிமை உணர்வை ஊட்டிட வேண்டும். தேர்தலைப் பொறுத்து, நாம் காண வேண்டிய செய்திகள் இவை. நம்மளவில் நாம் செய்ய வேண்டிய பணிகள் மேலே காணப்பட்டவை. இவற்றைக் காணுங்கள்! யாதொன்றையும் சரியயனக் காண்போர், அதைச் செயல்படுத்திட முந்துங்கள்!

1.6.2009 வே. ஆனைமுத்து

வியாழன், 18 ஜூன், 2009

புலிகள் தோற்கவில்லை; இந்தியாவின் இராஜதந்திரம் தான் படுதோல்வி அடைந்திருக்கிறது

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த போர் முடிவடைந்துவிட்டது. விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடித்து விட்டோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்திய அரசும் அதற்குப் பாராட்டுத் தெரிவித்துவிட்டது. ஆனால் இலங்கைப் போரில் புலிகள் தோற்றார்களா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை விட இந்தியாவின் இராஜதந்திரம் வெற்றி பெற்றதா இல்லையா என்ற கேள்விக்குரிய விடையை அறிவதுதான் முக்கியமானதாகும்.

1980-களில் தொடங்கி இன்று வரை இலங்கையில் தங்களது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், இந்துமாக்கடலின் முக்கிய கடல், வான் பாதைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வந்த ஆதிக்கப் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது.

1977-ம் ஆண்டு ஜயவர்த்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபோது இந்தியாவின் மேலாதிக்கத்தில் இருந்து விடுபட விரும்பியது. அதற்கு ஒரே வழி அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடன் உள்ள உறவுகளை வலுப்படுத்துவதேயாகும் எனத் திட்டமிட்டு செயல்பட்டது. இலங்கையின் பொருளாதாரம் மேற்கு நாடுகளுக்கு திறந்துவிடப்பட்டது. இதன் விளைவாகத் தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு மேற்கு நாடுகள் உதவத் தொடங்கின.

1983-ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா உதவியுடன் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் சின்பெத் உளவுப்படையான மொசாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் இலங்கைக்கு வந்து சிங்கள இராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த சிறப்பு விமானப் படையின் நிபுணர்கள் சிங்கள விமானப் படை விமானிகளுக்கு தமிழர் பகுதிகளில் குண்டு வீசப் பயிற்சி அளித்தனர். பிரிட்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கீனி மீனி சர்வீசஸ், சிங்கள இராணுவத்தில் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்க பயிற்சி அளித்தது. தென்னாபிரிக்க அரசு மூலம் இங்கிலாந்து சிங்கள இராணுவத்துக்குத் தேவையான தளபாடங்களை அனுப்பியது.

இலங்கையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் வளர்ந்தோங்கிய நிலையில் இந்திய அரசின் கருத்துகள் எதற்கும் சிங்கள அரசு மதிப்புக் கொடுக்கவில்லை. எனவே அதற்கு எதிராக சிங்கள அரசை மிரட்டுவதற்காக பிரதமர் ராஜீவ் காந்தி காலத்தில் அதாவது 1987-ம் ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி இந்திய இராணுவ விமானங்கள் முற்றுகைக்கு ஆளாகியிருந்த யாழ்ப்பாணத்தின் மீது பறந்து சென்று உணவுப் பொதிகளை வீசின. இதைக் கண்டு சிங்கள அரசு அச்சம் அடைந்தது.

1987-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி இந்திய-இலங்கை உடன்பாட்டில் கையெழுத்து இட்டாக வேண்டிய நெருக்கடி ஜயவர்த்தனவுக்கு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின் சாரம் பின் வருமாறு அமைந்தது:

இலங்கைக்கு இந்தியா தனது படையை அனுப்பி தமிழ்ப் போராளிகளின் ஆயுதங்களைக் களைய உதவும். இலங்கையில் அமைதிக்கான சூழ்நிலையை உருவாக்கித் தரும். இதற்குப் பிரதிபலனாக இலங்கையில் உள்ள அனைத்து வேற்றுநாட்டு இராணுவக் குழுக்களை இலங்கை அரசு வெளியேற்ற வேண்டும் என்பதே இந்த உடன்பாட்டின் அடிப்படையாகும்.
இதன் மூலம் ஜயவர்த்தன இரண்டு உண்மைகளைப் புரிந்து கொண்டார்.

1. இந்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக இருக்க முடியாது.

2. மேற்கு நாடுகளை நட்பு சக்திகளாகப் பெற்றால் இந்தியாவின் தயவு இல்லாமல் தமிழ்ப் போராளிகளை முறியடித்துவிட முடியும்

என்ற அவரின் திட்டம் வெற்றி பெறவில்லை. இந்திய அரசு அவரை மிரட்டியபோது மேற்கத்திய நாடுகள் ஒன்றுகூட அவருக்கு உதவ முன்வரவில்லை. சின்னஞ்சிறிய இலங்கைக்காகத் தங்கள் பொருள்களின் விற்பனைக்கான மிகப் பெரிய சந்தை நாடான இந்தியாவுடன் முரண்பட மேற்கு நாடுகள் தயாராகவில்லை என்பதே உண்மையாகும்.

மேற்கண்ட இரு கசப்பான உண்மைகளை உணர்ந்து கொண்ட சிங்கள அரசு இந்தியாவிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கிழக்கு நோக்கித் திரும்பிற்று. மேற்கு நாடுகள் அவரைக் கைவிட்ட பிறகு இந்தியாவின் பகை நாடான சீனாவின் உதவியை நாட அது முடிவு செய்தது. அதிலிருந்து தொடங்கி சீனாவின் சார்பு நாடாக இலங்கை படிப்படியாக உருவெடுத்தது.

1993-ம் ஆண்டு இலங்கையில் உள்ள காலி துறைமுகத்தில் சீனாவின் நோரிங்கோ நிறுவனம் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கு ஒன்றைத் திறப்பதற்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்டது. இந்த உடன்பாட்டின்படி சிங்கள அரசு தனக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தையும் இந்தக் கிடங்கிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால் வேறு எந்த நாட்டிடமிருந்தும் ஆயுதங்களை வாங்கக் கூடாது. அப்படி வாங்குவதற்கு நோரிங்கோவின் அனுமதி தேவை.

இலங்கையில் சீனாவின் ஆயுதக்கிடங்கு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, தென் ஆசியப் பகுதிக்கே ஆபத்தானதாகும். இப்பகுதியில் உள்ள நாடுகளுக்குத் தேவைப்படும் போது உடனுக்குடன் ஆயுத உதவிகளைச் சீனா செய்யமுடியும்.

தென் இலங்கையில் உள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை விரிவுபடுத்துவதற்கும் அங்கு இராட்சத எண்ணெய்க் கலன்களை அமைப்பதற்கும் புத்தளத்துக்கு அருகே நுரைச்சோலையில் 9000 மொகாவாட் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை அமைப்பதற்கும் உதவும்படி இலங்கை அதிபர் சந்திரிகா 2005-ம் ஆண்டில் வேண்டிக் கொண்டார். சீனா பெரும் மகிழ்ச்சியுடன் இக் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.

ஏனெனில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்போது இந்துமாக்கடலில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சீனா நோக்கிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யமுடியும். நுரைச்சோலையில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணியில் ஈடுபட்டால் அதற்கு 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேதுக் கால்வாயை தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர முடியும்.

2006-ஆம் ஆண்டு இறுதியில் மன்னார் வளைகுடாவில் பெட்ரோலியம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கான துரப்பணி அனுமதியை எவ்வித டெண்டரும் இல்லாமல் சீனாவுக்கு இலங்கை அளித்தது. இதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சேதுக் கால்வாயிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சேதுக்கால்வாயில் செல்லும் அனைத்து நாட்டு சரக்குக் கப்பல்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல் ஆகியவற்றை சீனா தொடர்ந்து கண்காணிக்க முடியும்.

1974 ஜூலை 8-ம் தேதி இந்திரா காந்தி காலத்தில் செய்து கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை உடன்பாட்டின்படி இந்தத் துரப்பணப்பணியை இந்தியாவும் இலங்கையும் கூட்டாக மேற்கொள்ள வேண்டும். ஆனால் அந்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்தப் பணி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

வான்புலிகளின் விமானத் தாக்குதலை இந்தியா அளித்த ரேடார்களினால் கண்டறிய இயலவில்லை எனக் கூறி சீனாவிடம் ரேடார்களை இலங்கை அரசு பெற்றுக் கொண்டது. அதிக சக்தி வாய்ந்த இந்த ரேடார்கள் மூலம் இந்திய விமானப் படையின் நடமாட்டங்களையும் உளவறிய சீனாவுக்கு வழிவகுக்கப்பட்டது.

2008-ம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு சீனா ரூ. 500 கோடி உதவி அளித்துள்ளது. இந்தியாவையும் ஜப்பானையும் விட பன்மடங்கு அதிக நிதி வழங்கிய நாடாக சீனா திகழ்கிறது. கடந்த காலத்தில் சீனாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கிய வகையில் இலங்கை அரசு 100 கோடி ரூபாய் கடன்பட்டிருந்தது. அந்தக் கடனையும் சீனா தள்ளுபடி செய்தது.
சீனா மட்டுமல்ல, சீனாவின் நட்பு நாடுகளான பாகிஸ்தான், ஈரான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு ராணுவ ரீதியான உதவிகளை அளிக்க முன்வந்தன. இதற்குப் பின்னணியில் சீனா இருந்தது என்பது வெளிப்படையானது.

2006-ம் ஆண்டு பாகிஸ்தான் அரசு இலங்கைக்கு ரூ. 300 கோடி மதிப்புள்ள ஆயுத உதவிகளை அளித்தது. இதற்குப் பதில் உதவியாக இலங்கை அரசு இந்தியாவுடன் செய்து கொண்டதைப் போல பாகிஸ்தானுடனும் சுதந்திர வணிக உடன்பாடு ஒன்றைச் செய்து கொண்டது.

தென் இலங்கையில் உள்ள உமா ஆற்றில் 100 மெகாவாட் திறனுக்கான நீர்மின் நிலையம் அமைப்பதற்காகவும் கொழும்புக்கு அருகே உள்ள சபுஸ்கந்தா பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தை விரிவாக்குவதற்கும் உரிய உரிமங்களை ஈரானுக்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தது. பதிலுக்குப் பெருந்தொகை ஒன்றை ஈரான் உதவி நிதியாக வழங்கியது. சீனாவின் ஆதரவு நாடான ஈரானை நட்பு நாடாக்கிக் கொண்டால் சீனா தன்னுடன் இன்னும் நெருக்கமாக வருமென இலங்கை அரசு கருதியது.

சீனாவுடனும் அதன் கூட்டாளிகளுடனும் கூட்டு வைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றிகளை அடைய முடியும் என இலங்கையை உணரச் செய்வதே சீன அரசின் நோக்கம் என்பதையும் அந்த நோக்கத்தில் அது வெற்றி பெற்றுவிட்டது என்பதையும் இந்தியா உணரவே இல்லை.

இதன் விளைவாக நான்காம் ஈழப்போர் தொடங்கிய 2006ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதியிலிருந்து இலங்கை மண்ணுக்குள் சீனாவின் காலடித்தடங்கள் ஆழமாகப் பதிந்துவிட்டன. சீனாவின் நண்பர்களுக்காகவும் இந்தியாவைப் பகைத்துக் கொள்ள இலங்கை தயாராகிவிட்டது. இலங்கையரசின் சீன உறவின் விளைவாக இந்தியாவிற்கு இராணுவ ரீதியாக பெரும் அச்சுறுத்தல்கள் உருவாகிவிட்டன. பாகிஸ்தானுடன் சீனா கொண்டுள்ள நெருக்கமான உறவு வட இந்தியாவுக்கு பெரும் அபாயமாக விளங்குகிறது. அதே அளவுக்கு இப்போது உருவாகியிருக்கும் இலங்கை-சீன உறவு எதிர்காலத்தில் தென்னிந்தியாவிற்குப் பெரும் சவாலாக விளங்கும் என்பதில் ஐயம் இல்லை.

இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்சாலைகள், ஏவுகணைத் தளங்கள், அணு உலைகள் ஆகியவற்றை வட இந்தியாவில் அமைத்தால் பாகிஸ்தான், சீனா ஆகியவற்றின் தாக்குதலுக்கு ஆளாகி அழியும் அபாயம் இருப்பதால் அத்தகைய தொழிற்சாலைகளைத் தென்னிந்தியாவில் அமைப்பது பாதுகாப்பானதென பிரதமர் நேரு கருதி அவ்விதம் செய்தார். தொடர்ந்து வந்த இந்தியப் பிரதமர்களும் இக்கொள்கையைப் பின்பற்றினார்கள். ஆனால் அதற்கும் இப்போது இலங்கை -சீனா -பாகிஸ்தான் அரசின் மூலம் அபாயம் தோன்றிவிட்டது.

இலங்கையரசுக்கு சீன அரசு இராணுவ ரீதியில் உதவி வருவது எதிர்காலத்தில் வணிக நலன்களை கருதி அல்ல. இந்தியா அமெரிக்காவுடன் கொண்டுள்ள கூட்டணியின் விளைவாக இந்துமாக்கடல் பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளிலும் தான் தனிமைப்பட்டுவிடக்கூடாது எனக் கருதுவதனாலேயேயாகும்.

இராணுவம் மற்றும் பொருளாதார ரீதியில் இப்பகுதியில் உள்ள இலங்கை, நேபாளம், வங்கதேசம், மியான்மர், மலேசியா ஆகிய நாடுகளுடன் மிக நெருக்கமான உறவை சீனா வளர்த்து வருகிறது. ஏற்கெனவே பாகிஸ்தான், ஈரான் ஆகியவை சீனாவின் கூட்டாளிகளாகிவிட்டன.

20 வருடங்களுக்கு முன்பாக இப்பகுதியில் இந்தியா மட்டுமே ஒரே ஒரு மேலாதிக்க நாடாக விளங்கியது ஆனால் இப்போது இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குட்பட்ட பகுதிகளில் சீனா நுழைந்துவிட்டது.

இந்துமாக்கடலில் இயற்கையாக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இலங்கை உள்ளது. நிலவியல் அடிப்படையில் அது நடுமையமான இடத்தில் அமைந்துள்ளது. இந்துமாக்கடல் வழியே செல்லும் விமானத் தடங்களுக்கும், கப்பல் தடங்களுக்கும் இலங்கையே நடுமையமாக உள்ளது. எனவே இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையைப் பொறுத்து அமைந்துள்ளது. ஆனால் இதுகுறித்து இலங்கை கவலைப்பட்டதில்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் மற்ற நாடுகளுடன் உறவாடவும், உடன்பாடுகள் செய்துகொள்வதற்கும் இலங்கை ஒருபோதும் தயங்கியதில்லை.

இலங்கையின் இந்தப் போக்கினை கண்ட இந்தியக் கடற்படையின் முன்னாள் தளபதியான ரவி கவுல் என்பவர் "இந்துமாக்கடலும் இந்தியாவின் முக்கியத்துவம் வாய்ந்த நிலையும்' என்னும் தலைப்பில் எழுதியுள்ள நூலில் பின்வருமாறு கூறியுள்ளார்.

பிரிட்டனின் பாதுகாப்புக்கு அயர்லாந்து எவ்வளவு முக்கியமானதோ, சீனாவின் பாதுகாப்புக்கு தைவான் எவ்வளவு இன்றியமையாததோ அதைப்போல இந்தியாவின் பாதுகாப்புக்கு இலங்கை மிக முக்கியமானதாகும். இந்தியாவின் நட்பு நாடாக அல்லது நடுநிலை நாடாக இலங்கை இருக்கும் வரை இந்தியா கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இந்தியாவுக்கு எதிரான நாடுகளின் வசத்தில் இலங்கை சிக்குமானால் அந்த நிலைமையை இந்தியா ஒருபோதும் சகித்துக் கொள்ளமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அதனால் அபாயம் நேரிடும்'.

அமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்ட அணுசக்தி உடன்பாட்டின் விளைவாக விரிவடையப்போகும் இந்தியாவின் பிராந்திய ஆதிக்க வலிமையானது எதிர்காலத்தில் தனக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்ற கலக்கம் சீனாவுக்கு உள்ளது. இந்தியாவில் இராணுவ, பொருளாதார முக்கியத்துவம்மிக்க பகுதியாக மாறிவரும் தென்னிந்தியாவின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கு இலங்கை தனது முழுமையான கட்டுபாட்டிற்குள் வரவேண்டும் என்பது இந்தியாவின் அவசியத் தேவை என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளது.

இலங்கையில் தமிழர் பகுதிகளை சிங்கள இராணுவம் தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவருவதற்கும், விடுதலைப்புலிகளை ஓரங்கட்டுவதற்கும், தான் அளித்த உதவியினால் எதிர்காலத்தில் இலங்கை தனது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட ஒரு நாடாக இருக்கும் என இந்தியா கருதியது குறுகிய காலத்திலேயே பகற்கனவாய் போய்விட்டது. தனது நோக்கம் நிறைவேறியவுடன் இந்தியாவைத் தூக்கியெறிய இலங்கை தயங்கவில்லை. இந்தியாவின் தயவு இனி இலங்கைக்குத் தேவையில்லை. இரு அணு ஆயுத வல்லரசுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கின்றன.

இலங்கை அதிபர் ராஜபட்சவின் தம்பியும், பாதுகாப்பு ஆலோசகருமான கோத்தபாய ராஜபட்ச கட்டுப்பாட்டில் உள்ள இணையதளத்தில் அவரின் நண்பர் ஜெயசூரிய என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இந்தியாவைப் பற்றி மிகவும் கடுமையான விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கவேண்டுமென்று எங்களுக்கு ஆணையிட இந்தியாவுக்கு உரிமையில்லை. இந்தியாவிலுள்ள அனைத்து தலைவர்களும், அரச அதிகாரிகளும் இலங்கைக்கு ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் தமிழர்கள் உள்பட அனைத்து சமூகத்தினருக்கும் அதிகாரம் அளிப்பதன் மூலமே இனப்பிரச்னைக்கான அடிப்படைக் காரணங்களை சரிசெய்திட முடியும் என்று கூறியிருக்கிறார்.

அவரிடம் நாங்கள் கேட்பது என்னவென்றால் இந்த அறிவுரையைக் கூற நீங்கள் யார்? உங்களுக்கு என்ன தகுதி உள்ளது? இறையாண்மை மிக்க நாடான இலங்கைக்கு எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியும். நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

தமிழர்களுக்கு எவ்வித அதிகாரங்களையும் வழங்கமாட்டோம். ஏனெனில் அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுவதற்கு அதுவே வாய்ப்பாகிவிடும். அதுமட்டுமல்லாது இந்தியாவால் எங்கள் மீது திணிக்கப்பட்ட உடன்பாட்டையும் தூக்கியெறிவோம். அதன் மூலம் இந்திய ஆதிக்கத்தின் கடைசி அடையாளங்களையும் துடைத்தெறிவோம்.

எங்கள் நாட்டை இந்தியாவுடன் இணைத்துக்கொள்ளும் நோக்கத்துடன் நீங்கள் விடுதலைப்புலிகளை உருவாக்கினீர்கள். நீங்கள் உருவாக்கியதை நாங்கள் அழித்துவிட்டோம்.

கோத்தபாய ராஜபட்சவின் இணையதளத்தில் வெளிவந்துள்ள இந்தக் கட்டுரை, அதிபர் ராஜபட்சவின் சம்மதம் இல்லாமல் வெளிவந்திருக்க முடியாது. இலங்கை அரசின் அதிகாரப்பூர்வமான கருத்தையே இந்தக் கட்டுரை எதிரொலிக்கிறது.

இலங்கையில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று குவிக்கவும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மின்வேலி முகாம்களுக்குள் அடைத்துச் சித்திரவதை செய்யவும், சிங்கள இனவெறி அரசுக்கு எல்லாவகையிலும் துணை நின்ற இந்திய அரசுக்கு கிடைத்த கைமாறு இதுதான். இத்துடன் நிற்கப்போவதில்லை.

இந்தியாவின் பகை நாடுகளான சீனாவும், பாகிஸ்தானும் இலங்கையில் வலுவாகக் காலூன்றிவிட்ட நிலையில் தென்னிந்தியாவிற்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் அபாயத்திலிருந்து இந்தியா மீள்வதற்கு வழி உண்டா? என்ற கேள்விக்குரிய விடை இந்தியாவிடம் இல்லை.

இலங்கையில் சிங்கள இனவெறிக்கெதிராக நடைபெற்ற போரில் ஈழத் தமிழர்களோ, புலிகளோ தோற்கவில்லை. மாறாக இந்தியாவின் ராஜதந்திரம்தான் படுதோல்வியடைந்திருக்கிறது!

பழ. நெடுமாறன்

புதன், 17 ஜூன், 2009

ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் - அதிரடியான்

ஈழத்தமிழினம் இன்று மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஈழத்தமிழர்களின் விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் இராணுவ ரீதியான பின்னடைவை சந்தித்திருக்கின்றது. கைதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஈழத்தமிழ் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி மகிழ்ச்சி கொள்ளும் சிங்கள இனவெறிக் கும்பலுடனும், இந்திய ஆரிய இனவெறிக் கும்பலுடனும் கள்ள உறவு கொண்ட அரசியல் அயோக்கியர்கள் நாங்களே என்று பறைசாற்றியிருக்கிறது பு.ஜ. - ம.க.இ.க. கும்பல். தமிழீழ தேசியத் தலைவரை பாசிஸ்ட் என்றும் விடுதலைப்புலிகளை பாசிச இயக்கமென்றும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கிகள் போல முழங்கி வந்த இவர்கள், திடீரென ‘புலிகளுக்கு வீரவணக்கம்’ என்று காவடி எடுத்துள்ளார்கள். ’நீங்களே பாசிஸ்ட் என வரையறுத்தவர்களுக்கு ஏன் வீரவணக்கம் செலுத்துகிறீர்கள்?’ என்று விசாரித்தால் ‘இல்லை. தோழர்.. அதான் இப்ப டிரண்ட்.. அதனால் தான்..’ என்று ஆரம்பித்து லெனின், மாவோ உட்பட பல தலைவர்களை மேற்கோள் காட்டி விளக்கம் பேசுவார்கள். பார்ப்பனர்கள் - இந்தியத் தேசிய வெறியர்களுக்கு நிகராக தமிழ்நாட்டில், தேசியத் தலைவர் பிரபாகரனின் மரணம் குறித்த செய்தி கேட்டு மகிழ்ச்சியில் திக்குமுக்காடித் துள்ளிக் குதித்த ஒரே கும்பல் ம.க.இ.க. - பு.ஜ. பு.க. கும்பலாகத் தான் இருக்கும்.

என்ன தான் இவர்களது அரசியல்? இவர்கள் உண்மையில் யார்? ஈழப்பிரச்சினையில் இவர்களது நிலைபாடு என்ன? இவர்கள் உண்மையிலேயே ‘புரட்சி’யாளர்களா? இவர்களது அரசியல் உள்நோக்கம் தான் என்ன? இவர்களை இயக்குகின்ற சக்தி எது?

யார் இந்த ம.கஇ.க. ?

‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ (ம.க.இ.க.) என்கிற அமைப்பை சார்ந்தவர்கள் தான் இவர்கள். ‘புதிய ஜனநாயகம்’, ‘புதிய கலாச்சாரம்’ என்ற இரு மாத இதழ்களை இவர்கள் நடத்தி வருகிறார்கள். இவர்களை இவர்களே புரட்சிகர அமைப்புகள் என்று அட்டைப் படத்தில் போட்டு விற்பனை செய்வார்கள்.

ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., வி.வி.மு.(அப்பாடா..!) என இவர்களது அமைப்புப் பெயரை இப்படித்தான் இவர்கள் பட்டியலிட்டு எழுதுவார்கள். ஏகலைவன், ட்ராட்ஸ்கி என பல பெயர்களில் பதிவுகள் எழுதி ம.க.இ.க.வின் கருத்துகளை வெவ்வேறு பெயர்களில் எழுதி இணையதளங்களில் மட்டுமே ‘புரட்சி’யாளர்கள் போல் நடிக்கும் கைதேர்ந்த ஆள்பிடிக்கும் கும்பல் இவர்கள். ஆயுதப்புரட்சி பற்றி இவர்கள் பேசாத பேச்சில்லை. ஆனால், இதுவரை அட்டைக் கத்தியைக் கூட இவர்கள் காட்டியதில்லை. ‘இந்திய முழுமைக்கும் புரட்சி நடத்த வேண்டும்’ என்று கூச்சல் போடுவார்கள் ஆனால் தமிழக எல்லையைத் தாண்டினால் இவர்களை சீண்ட ஆளில்லை. இவர்கள் வசைமாரிப் பொழிந்து அவதூறு பேசாத தலைவர்கள் உலகத்திலே யாருமே இல்லை எனலாம்.

பி.இரயாகரன் என்ற புலம் பெயர்ந்த ‘கீபோர்டு புரட்சி’யாளரின், சிங்களத்தின் பாதம் பிடித்துக் கொண்டு, புலிகளுக்கு எதிராக அனல் கக்கும் ‘தமிழ் அரங்கம்’ இணையதளத்தில் ம.க.இ.க.வினரின் கட்டுரைகள் அதிகமாக பிரசுரிக்கப்படும். ‘வினவு’ என்ற ம.க.இ.க.வின் சொந்த இணையதளம் ஒன்றும் உள்ளது. நாளடைவில் சிங்கள இராணுவத்தின் இணையளங்களில் கூட ம.க.இ.க.வின் கட்டுரைகள் பதிவு செய்யப்படலாம். ஏனெனில், அந்தளவிற்கு தான் இவர்களது கருத்தும் செயல்பாடும் இருக்கிறது. ‘துக்ளக்’ சோ, ‘தினமலர்’, சிங்கள இரத்னா ‘இந்து’ என்.ராம் ஆகியோருக்குப் பிறகு விடுதலைப்புலிகளை கடுமையாக எதிர்க்கும் இவர்களையும் இனி நாம் பட்டியலிட்டாக வேண்டும். ஏனெனில், இவர்கள் அவர்களுக்கு சளைத்தவர்களல்ல என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார்கள்.

சற்று விரிவாகவே பார்ப்போம் இவர்களது ‘சாகசங்களை’....

இட ஒதுக்கீடு - பார்ப்பனர்களுடன் கைக்கோர்க்கும் ‘ராஜதந்திரம்’

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு உரிமையை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை என்ற மூன்றாவது நிலையை ‘ராஜதந்திரமாக’ ம.க.இ.க. எடுத்து, தான் யாரென அம்பலப்பட்டது. இட ஒதுக்கீட்டை நேரடியாக எதிர்க்கும் பார்ப்பனர்களுடன் முற்போக்கு வேடங்கட்டிக் கொண்டு கைக்கோர்த்தல் நெருடலாக இருந்ததால், மறைமுகமாக இட ஒதுக்கீட்டை ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் எல்லை என்று புருடா விட்டார்கள். இவர்களை அம்பலப்படுத்தி தமிழ்த் தேசிய பொதுவுடைமைக் கட்சி ஐயா. மணியரசன் ‘ம.க.இ.க.வின் மறைமுகப் பார்ப்பனியமும் மனங்கவர்ந்த இந்தியத் தேசியமும்’ என்று தனியொரு நூலே எழுதியுள்ளார். மேலும் ‘தாழ்த்தப்பட்டவர்களை இந்து மதத்தை விட்டு வெளியேறுங்கள்’ என்று கூறி தாழ்த்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை மறைமுகமாக பறித்திட அறைகூவல் விடுத்தது, இதே ம.க.இ.க. தான். இதனை மணியரசன் நடத்தும் தமிழர் கண்ணோட்டம் இதழ் அம்பலப்படுத்தியது.

இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்ளும் பார்ப்பனியக் கும்பல்

இந்தியா என்கிற ஆரிய இனவெறி பார்ப்பனியப் புனைவுக் கட்டமைப்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் படுபிற்போக்கு அதிமேதாவிகள் தான் இவர்கள். ஆனால், இந்தியாவை பற்றி வாய்கிழிய பேசுவார்கள். பேசி முடித்ததும், ‘இந்தியா நமது நாடு’ என்று நம்மையே நச்சரித்து நக்கித் திரியும் பிரணிகளாக மாறிப்போவர்கள். தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா என்பதை பரிசீலிக்காத அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசியல் ‘நடிகர்கள்’. இவர்களது இலக்கு என்னவென்று கேட்டால் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’ என்பார்கள். ‘ஒ.. அப்படினா என்னங்க..’ என்று யாராவது கேட்டால், ‘இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இந்தியாவை கைப்பற்றுவது’ என்பார்கள்.

இந்தியா முழுமைக்கும் புரட்சி என்று வாய்ச்சவடால் பேசும் இவர்களுக்கு தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டினால் கட்சியோ, அமைப்போ கிடையாது. ஆனால், ஏதோ இந்தியா முழுமைக்கும் இவர்களுக்கு அமைப்பு உள்ளது என்பது போல நன்றாக வேடம் கட்டுவார்கள். இந்தியா என்பது பல்தேசிய இன நாடு என்பதால் அந்தந்த இனத்து மக்கள், அவரவர் வழியில் தனித்தனியே தான் புரட்சியில் ஈடுபட இயலும் என்ற மார்க்சியப் பார்வை சிறிதும் இல்லாத போலி மார்க்சிஸ்டுகளின் திருட்டுக் குழந்தையே ம.க.இ.க. கும்பல் எனலாம். மார்க்சியத்தை வறட்டுச் சூத்திரமாக பாவிக்கும் இவர்களைப் போன்றவர்களால் மார்க்சியத்தின் மீதான அவதூறுகள் அவ்வப்போது வலுவடைவது இவர்களது மார்க்சிய சேவையை உணர்த்தும்.

ஈழம்: சோ, இந்து ராம், சு.சாமி, செயலலிதா அணிவரிசையில் ம.க.இ.க.

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை நசுக்க சிங்கள இனவெறி அரசு என்ன உத்திகளையெல்லாம் கையாண்டதோ அதே உத்திகளை கையாளும் இயக்கம் தான், ம.க.இ.க.வாகும். விடுதலைப்புலிகளை ‘பாசிஸ்ட்’கள் என்பது முதல் புலம் பெயர்ந்த தமிழர்கள் போராட்டங்களை இழிவுபடுத்துவது வரை சிங்கள இனவெறி அரசுக்கு நன்கு உதவிய ம.க.இ.க.விற்கு சிங்கள அரசு பாராட்டு விழா நடத்தினாலும் நாம் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

ஈழத்தமிழர்களின் எதிரிகளான பார்ப்பனிய ஜெயலலிதா, இந்து ராம், சு.சாமி, துக்ளக் சோ உள்ளிட்டவர்களின் அறிக்கைக்கும் ம.க.இ.க.வின் நிலைப்பாட்டிற்கும் என்ன வித்தியாசம் என்று ம.க.இ.க.வில் உள்ள அப்பாவித் தோழர்கள் என்றாவது யோசித்ததுண்டா..?

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாகவும் தான் செயலலிதா இன்று வரை கூறி வருகிறார். இது தானே ம.க.இ.க.வின் நிலைப்பாடு...!?

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு என்று ஊளையிடும் பார்ப்பனக் கம்யுனிஸ்டு தலைவர் வரதராஜனின் நிலைபாடு தானே ம.கஇ.க.வின் ஈழப்பிரச்சினைக்கான தீர்வு...!?

ஈழத்தமிழர்களுக்கு உயிர் நீத்த மாவீரன் முத்துக்குமார் ஊர்வலத்தில் தமிழ் உணர்வுடன் எல்லோரும் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் கூடி நிற்க, அங்கு ‘பேனர்’ பிடித்து ஆள்பிடித்த ஒரு கும்பல் இவர்கள் தான். தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரையும் ‘பிழைப்புவாதிகள்’ என்று முத்திரை குத்தும் இவர்கள், புத்தக விற்பனை செய்வதற்கும், ஆள்பிடிக்கும் வேலை செய்வதற்கும் இந்த ‘பிழைப்புவாதிகள்’ நடத்தும் கூட்டங்களுக்குத் தான் வெட்கமின்றி செல்வார்கள். அக்கூட்டங்களுக்கு சென்று தமிழின உணர்வுடன் கூடியுள்ள தோழர்களிடம் ‘வர்க்கப் பிரச்சினையே ஈழப்பிரச்சினைக்கு காரணம்’ என்று மூளைச் சலவை செய்வது தான் இவர்களது ஒரே களப்பணி.

தனக்கென ஒரு தேசம் இல்லாத பாட்டாளி வர்க்கம் வர்க்கப் போராட்டத்தை நடத்த இயலாது என்பது தான் மார்க்சியம். தமிழினம் தனக்கென ஒரு தேசம் இல்லாத இனம். ஆக, தமிழ்நாட்டு தமிழன் எப்படி வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்று ம.க.இ.க.வின் தலைமையிடம் கேள்வி கேட்க, மார்க்சியம் தெரிந்த ஆட்கள் அங்கு இல்லை என்பதால் தான் அவர்கள் இன்னும் அமைப்பாக இருக்கிறார்கள். மார்க்சியத்தை வாந்தி எடுப்பதும், காப்பி அடிப்பதும் தான் மார்சிஸ்டுகளின் வேலை என்று செயல்படும் இது போன்ற போலி மார்க்சிய திரிபுவாதிகளால் மார்க்சியத் தத்துவத்திற்கு அவமானமே மிஞ்சுகின்றது.

தமிழ்த் தேசிய எழுச்சியை கண்டு நடுங்கும் ம.க.இ.க.

ஈழத்தமிழினம் இவ்வளவு பெரிய அழிவை சந்திப்பதற்கு காரணமான சிங்கள - இந்திய அரசின் இனவெறியைப் பற்றி பேச வக்கில்லாத ம.க.இ.கவினர், இவ்வளவிற்கும் காரணம் பிரபாகரன் தான் என்று உளறுவார்கள். இந்த கம்பெனிக்கு ஈழத்தமிழர்களை பற்றி பேச என்ன யோக்கியதை உள்ளதென்று கேட்டால் கூட நாம் ‘பாசிஸ்ட்’ அல்லது ‘தமிழின பிழைப்புவாதி’ ஆகிவிடுவோம்.

ஈழப்போராட்டம் பற்றி தொடர்ந்து இழிவுபடுத்துவதும், போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் விடுதலை இயக்கத்தைக் கொச்சைப்படுத்துவதும் என இவர்களது அரசியல் பாதை இன்று வரை தொடர்கிறது. இவர்களைப் பொறுத்தவரை ‘தமிழன்’ என்று இவர்களைத் தவிர வேறு யார் சொன்னாலும் ‘தமிழின பிழைப்புவாதிகள்’. ஆனால் இவர்கள் ‘தமிழர்களே சிந்தியுங்கள்’ என்று துண்டறிக்கை அடிப்பார்கள்; சுவரொட்டி ஒட்டுவார்கள். ஆனால் இவர்களை நம்பி தமிழின உணர்வுடன் இவர்களை அணுகினால் மாவோ முதல் மார்க்ஸ் வரை பேசிவிட்டு, ‘தமிழ் உணர்வு என்பதெல்லாம் இனவெறி’ என்று கூறுவார்கள்.

‘தமிழ்த் தேசியர்கள்’ யார்?

வாய்க்கு வந்தபடி வாந்தி எடுப்பதை வழக்கமாகக் கொண்ட இந்தக் கும்பல், அண்மையில் தமிழ்த் தேசியர்களுக்கு மறுப்புரை என்ற பெயரில் ஒரு குறுநூலை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்த் தேசியர்கள் என்று இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. கூறவுமில்லை. ஆனால் விமர்சனம் மட்டும் செய்கின்றார்கள். அறிவு நாணயமோ, மார்க்சியத் தெளிவோ, இல்லாத இவர்கள் விவாதத்திற்குத் தான் அழைக்கிறர்கள் என்று யாரும் ஏமாந்து விட வேண்டாம். வழக்கம் போல எல்லோரையும் கண்டபடி திட்டிவிட்டு கடைசியில் நாங்கள் தான் உண்மையான ‘புரட்சி’யாளர்கள் என்று தனக்குத் தானே துதிபாடல் பாடிக் கொண்டார்கள்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் தான் தமிழ்த் தேசிய அமைப்பா?

தேர்தல் கட்சிகளான பா.ம.க., ம.தி.மு.க., வி.சி., இ.கம்ய., மா.கம்யு., உள்ளிட்ட கட்சிகள் ‘இலங்கை’த் தமிழர் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கினர். இக்கூட்டமைப்பு வெறும் பதவிக்காக ஈழத்தமிழர்களை பேசும் அமைப்பு என்பதும், இவர்களில் நெடுமாறனைத் தவிர வேறு யாரையும் ‘தமிழ்த் தேசியவாதி’ என அடையாளப்படுத்த முடியாது என்பதும் சிறுபிள்ளைக்குக் கூடத் தெரியும்.

அவற்றுள், பா.ம.க., வி.சி., ம.திமு.க. போன்ற கட்சிகள் நேரடியாக புலிகளை ஆதரித்து வருவதால் மட்டும் இவர்கள் பேசுவது ’தமிழ்த் தேசியம்’ ஆகிவிடாது. இந்தியத் தேசியம் என்ற பார்ப்பனிய புனைவுக்குள் நின்று கொண்டு ஈழவிடுதலையை மட்டுமே முன்னிறுத்தும் போலித்தனமான தமிழ்த் தேசியவாதத்தை தேர்தலுக்காக மட்டுமே இவர்கள் முன்னிறுத்துகின்றனர். இவர்களது நோக்கம் பதவியைத் தவிர வேறல்ல என்பதும் இவர்கள் பேசுவது போலித்தனம் என்பதும் இவர்களை உண்மையான ‘தமிழ்த் தேசியவாதிகள்’ என்று ம.க.இ.க.வைத் தவிர வேறு எந்த அடிமுட்டாளும் வரையறுக்கமாட்டான் என்பதும் வெட்ட வெளிச்சமான உண்மையாகும்.

அதே போல், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசுகின்ற ‘தமிழ்த் தேசியம்’ என்பது இந்தியத் தேசியத்தின் வரையறைக்கு உட்பட்ட ஒரு சில உரிமைகளுடன் கூடிய ஒரு தமிழர் மாகாணத்தை ஏற்படுத்த வலியுறுத்துவதாகும். காங்கிரஸ் மரபு வழி வந்த அய்யா நெடுமாறன், ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப்புலிகளின் இந்திய ஆதரவு நிலைபாட்டை அப்படியே ஏற்றுக் கொள்கிறார். மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா ஆனைமுத்து அவர்களும் இதே போன்றதொரு தீர்வை, ‘தமிழ்த் தேசியத்’தை ஏற்கிறார் எனலாம்.

இவர்கள் இருவரும் நேரடியாக தேர்தலில் பங்கேற்கவில்லை என்றாலும் அவ்வப்போது தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு அல்லது ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பது வழக்கமாகும். இவர்கள் பேசும் ‘தமிழ்த்தேசிய’த்திற்கான போராட்டங்களும் செயல் திட்டங்களும் இன்றுவரை வகுக்கப்படாமல் வெறும் கருத்தியல் வடிவம் மட்டுமே உள்ளது என்பதால் இதனை யாரும் கருத்தில் கொள்வது கிடையாது.

மேற்கண்ட உண்மைகளை ம.க.இ.க.வை போல் அரைவேக்காட்டுத் தனமாக பார்க்காமல், நன்கு அவதானிப்பவர்களால் கூட எளிதாக உணர்ந்திட முடியும். இருந்தாலும், ம.க.இ.க.வினர் இவர்கள் பேசுவது தான் ‘தமிழ்த் தேசியம்’ என்று குட்டைக் குழப்பம் வேளையில் ஈடுபடுவார்கள்.

அந்நூலில், ம.க.இ.க. நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக குறிப்பிட்டுள்ள தமிழ்த் தேசியர்களும் உண்டு.

தமிழர் ஒருங்கிணைப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தோழர் கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம், தோழர் மணியரசன் தலைமையிலான தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தோழர் தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ‘தமிழர் ஒருங்கிணைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி ஈழப்பிரச்சினையை முன்னிறுத்தி போராடி வருகின்றனர். இக்கூட்டமைப்பு விடுதலைப்புலிகளை நேரடியாக ஆதரிக்கும் கூட்டமைப்பாகும். இந்திய அரசை எந்த சமரசமும் இன்றி எதிர்க்கும் ஒரே கூட்டமைப்பாக இக்கூட்டமைப்புச் செயல்பட்டு வருகின்றது.

பெரியார் தி.க.

தமிழ்த் தேசியத்தின் தந்தையாக விளங்கும் ஈ.வெ.ரா.பெரியார் தனது உயிர் மூச்சு போகும் வரை இந்தியத் தேசியத்தை துளியும் ஏற்காமல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று சமரசமின்றி முழங்கி வந்தாலும் கூட, இந்தியத் தேசிய அரசுக் கட்டமைபில் நடைபெற்று வந்த தேர்தலை அவர் ஏற்றுக் கொண்டார். அவர்கள் வழிவந்த பெரியார் தி.க. அமைப்பு தற்பொழுதும், தனித்தமிழ் நாட்டை தனது கொள்கையாகக் கொண்டிருந்தும் கூட இன்றளவும் தேர்தலில் நம்பிக்கை வைத்துள்ள அமைப்பாகும். தேர்தலில் நேரடியாக பங்கேற்கவில்லை என்ற போதும் ஒவ்வொரு தேர்தலிலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலைபாட்டை இவர்கள் எடுப்பது வழக்கம். நடந்து முடிந்தத் தேர்தலில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரசைத் தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக செயலலிதாவை ஆதரித்தனர்.

‘செத்து விழும் சவங்களில் ஒன்றிரண்டாவது குறையட்டும். அதற்காக தற்காலிகமாக யாருடனும் சேருவது தவறல்ல’ என்ற மனித நேயச் சிந்தனையுடன் பெரியார் தி.க. செயலலிதாவை ஆதரித்தது தெரிந்தும் கூட, ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்கும் காங்கிரஸ் - தி.மு.க கைக்கூலிகளிடம் ஆதாயம் பெற்ற பேட்டை ரவுடி போலவே பெரியார் தி.க.வின் இந்நிலைபாட்டை தீவிரமாக எதிர்த்தது ம.க.இ.க.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

தமிழ்த் தேசப் பொது உடைமைக் கட்சி - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இருகட்சிகளும் பார்ப்பனியப் புனைவான இந்தியத் தேசியத்தின் கட்டமைப்பிற்குள் நடத்தப்படும் தேர்தல்களை ஏற்பதற்கில்லை என தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பை நடத்தும் இயக்கங்களாகும். நேரடியாக ஒரு தேர்தல் கட்சியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ளாத இவ்விரு கட்சிகளும் பெரியார் தி.க.வுடன் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்காமல் ‘வாக்களிக்க விரும்பும் தமிழர்கள், காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம்’ என்று மட்டும் பரப்புரை செய்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பு தேர்தல் அரசியலில் பங்கு கொள்ளாமல் இருந்தாலும், இந்திய வருமானவரித் துறை முற்றுகை, தஞ்சை இந்திய விமானப்படைத் தளம் முற்றுகை என போராட்டக் களத்தில் இந்தியத் தேசிய அரசை மட்டுமே எதிரியாக்கி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி செயல்பட்டு வந்தது.

உண்மையான ‘தமிழ்த் தேசியம்’ எது?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கமும் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது, எந்தவொரு சமரசமும் இன்றி தமிழ்த் தேசிய இனத்தின் தாயகம் அங்கீகரிக்கப்பட்டு, முழுமையான இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு என்ற தனித்தமிழ்நாட்டை கட்டியெழுப்புவது தான். இவ்விருக்கட்சிகள் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தியலை பெரியார் தி.க. விமர்சனத்திற்கு அவ்வப்போது உட்படுத்திய போதும், ஈழத்தமிழர் நலனைக் கருத்தில் கொண்டு விமர்சனங்களை மறந்து கூட்டமைப்பாக தற்பொழுது இவர்கள் உருவெடுத்துள்ளனர்.

பெரியார் தி.க. தவிர, மற்று இவ்விருக் கட்சிகளும் விடுதலைப்புலிகளின் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனரே தவிர, இந்தியாவை ஆதரிக்கும் விடுதலைப்புலிகளின் வெளியுறவுக் கொள்கையை இவர்கள் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை.

ம.க.இ.க. எழுதியிருக்கும் அக்குறுநூலில் இவர்களில் யாரைக் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று குறிப்பிடுகின்றது?

‘இந்தியாவிற்கு அடியாள் வேலை செய்வோம் என்று புலிகள் அறிவித்துள்ளனர். ஒருவேளை, இந்தியா இதனை ஏற்குமானால், தமிழகத் தமிழர்களின் விடுதலைக்கு எதிராகவே புலிகள் திரும்புவார்கள். எனவே தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை கைவிட்டு விடுவீர்களா?’ என்று பொருளில் அந்நூலின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளது ம.க.இ.க.

தமிழ்நாட்டு தன்னுரிமைப் போராட்டத்தை வலியுறுத்திப் போராடி வரும் அமைப்புகள், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆகிய இரு அமைப்புகளை மட்டுமே. இக்கேள்வியின்படி, ம.க.இ.க. குறிப்பிடுவது போல பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ‘தமிழ்த் தேசியர்கள்’ வரையறைக்குள் வரமுடியாது எனில், இவ்விருக்கட்சிகளை மட்டும் தான் ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் இக்கேள்வி எழுப்பப்பட்டுள்ளதா என்று தோன்றுகிறது.

இவ்வமைப்புகள் புலிகளின் வெளியுறவுக் கோரிக்கையை ஏற்கவில்லை என்றே நிலைப்பாடு கொண்டுள்ளவை என்பதை நான் அறிந்து கொண்டேன். இது ம.கஇ.க.விற்கு தெரியாதா? என்றாவது இவ்விரு அமைப்புகளும் புலிகளின் வெளியுறவுக் கொள்கையான ‘இந்திய ஆதரவு நிலையை நாங்களும் ஆதரிக்கிறோம்’ என்று எழுதியிருக்கிறார்களா பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை. ம.க.இ.க.வினர் தான் சுட்டிக் காட்டி பதிலெழுத வேண்டும்.

பழ.நெடுமாறன் அவர்கள், தமிழ்த் தேசியர்களின் அடையாளமாக ஊடகங்களில் முன்னிறுத்தப்பட்டாலும், அவர் கூறும் ‘தமிழ்த் தேசியம்’ என்பது என்னவென்று ம.க.இ.க.வினருக்கு நன்கு தெரியும். ஈழவிடுதலைக்கு முதன்மை கொடுத்து செயல்படும் பழ.நெடுமாறன் அவர்களது பலவீனத்தை பயன்படுத்திக் கொண்டு, ஒட்டு மொத்தமாக ‘தமிழ்த் தேசியர்கள்’ என்று பொத்தாம் பொதுவில் குறிப்பிட்டு அவதூறுகளை பரப்ப வேண்டும் என்ற உள்நோக்கத்துடனும் வக்கிர வன்மத்துடனும் எழுப்பப்பட்டுள்ள கேள்வி இது என்றே தோன்றுகிறது.

வெறும் பொருளாதார சிக்கலே இந்திய அரசின் சிங்கள ஆதரவு நிலைப்பாட்டிற்கான காரணம் என்று முழங்கிவருகின்றது ம.க.இ.க.

இந்திய முதலாளிகள் இலங்கை என்ற ஒரேச் சந்தையில் கொள்ளையடிக்க விரும்புகிறார்களாம். இந்த ஒரே காரணத்திற்காகத் தான் இந்திய அரசு, அதனை ஆளும் முதலாளிகளின் நலனுக்காக சிங்களத்துடன் கைக்கோர்த்துக் கொண்டு ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயல்படுகின்றது என்று கூறுகிறது ம.க.இ.க. மேலும், இந்தியா தனது மேலாதிக்க வெறி காரணமாக தமிழர்களை அழித்தொழிக்க உதவுகின்றது என்றும் ம.க.இ.க. கூறுகின்றது. ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் இந்தியாவிற்கு இவை இரண்டு மட்டும் தான் முக்கிய காரணங்களாம்.

இந்திய அரசு ஆரியப் பார்ப்பனிய அரசு. இந்தியத் தேசியம் என்பது ஆரியர்களின் தேசியம். பார்ப்பனியம் கட்டியெழுப்பியக் கோட்டை இந்தியத் தேசியம். இந்தியத் தேசியத்தை ஆதரிப்பது என்பது நேரடியாக பார்ப்பனியத்தை ஆதரிப்பதற்குச் சமம். ஆரியர்களுக்கு தமிழர்கள் மீதும் தமிழினம் மீதும் நீண்ட நெடுங்காலமாக நீடித்து வரும் பகை, அதன் அரசாங்க வடிவமான இந்தியத் தேசியம் மூலம் வெளிப்படுகின்றது. அதனால் தான் இந்திய அரசு தமிழர்களுக்கு என்றுமே எதிராக உள்ளது.

தமிழகத்தின் உரிமைப் பிரச்சினைகளான காவிரி பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினை, பாலாறு பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளிலும் இந்திய அரசு, தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டிற்கு ஆதரவாக என்றுமே செயல்பட்டது இல்லை. மாறாக, மலையாளி, கன்னடர் உள்ளிட்ட அயல் தேசிய இனங்களுக்கு ஆதரவாகவே தொடர்ந்து இருந்து வருவது கண்கூடு. மேலும், தமிழ்நாட்டுத் தமிழ் மீனவர்கள் நடுக்கடலில் சிங்கள வெறிநாய்களால் சுட்டுக் கொல்லப்படும் பொழுதெல்லாம், அதனை கண்டு கொள்ளாமல் மகிழ்ச்சியில் திளைத்த இந்திய அரசை, தமிழக மீனவர்கள் செத்தால் நிம்மதி என்று திரியும் இந்திய அரசை, ஆரிய இனவெறி அரசு என்று குறிப்பிடாமல் வேறு எப்படி குறிப்பிட முடியும்?

பார்ப்பனிய இந்திய அரசு பல்வேறு வடிவங்களில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற போதும், இந்த சிறு அரசியலை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது புரிந்து கொண்டும் புரியாதது போல் நடிக்கும் ம.க.இ.க.விற்கு இதனை அம்பலப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தான் என்ன?

தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும், ஈழத்தில் இருந்தாலும் ஆரியர்களுக்கு எதிரிகளே. இந்திய அரசு இந்த ஒரே அடிப்படையில் தான் ஈழத்தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் ஒடுக்கவும், அழிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றது. இந்திய அரசின் இந்த ஆரிய இனவெறிப் போக்கைக் கண்டிக்க வக்கில்லாத ம.க.இ.க. கூலிக்கும்பல், இந்திய அரசின் இந்த இனவெறிப் போக்கை மறைப்பதன் மூலம், தாங்களும் அந்த ஆரியக் கும்பலின் அங்கத்தினரே என்று பறைசாற்றுகின்றது.

‘இந்திய அரசின் மேலாதிக்க நோக்கமே காரணம்’ என்று திரும்பத் திரும்ப வாந்தி எடுக்கும் ம.க.இ.க. கும்பல், சிங்களக் கூலிகள் தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லப்படுவதால் இந்திய முதலாளிகளுக்கு ஏற்படும் ‘லாபம்’ பற்றி விளக்கத் துப்பிருக்கிறதா? தமிழ்நாட்டு தமிழனைக் கொல்லப்படுகின்றனரே, அதற்கும் இந்திய அரசின் ‘மேலாதிக்கவெறி’ தானா காரணம் என்று விளக்குமா?

தனித் தமிழீழமே தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்பதை வலியுறுத்தி விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்ட தமது நூலின் தலைப்பே ‘சோசலிசத் தமிழீழம்’ என்பதாகும். தொடக்கத்தில் புலிகளுக்கு மார்க்சியத்தின் மேல் இருந்த ஈர்ப்பு, காலப் போக்கில் மாறியது எனலாம். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் ஏகாதிபத்திய வல்லரசுகளுடன் நல்லுறவு பேணினால் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு அது உதவியாக இருக்கும் என்ற கருத்தியல் ஈழத்தமிழர்களுக்கு இருந்தது. தமிழீழத்தின் அங்கீகாரத்திற்கு இது உதவும் என்றும் நம்பப்பட்டது.

ம.க.இ.க. கூறுவதைப் போல, இவ்வாறு ஏகாதிபத்தியத்துடனும், முதலாளிகளுடனும் சமரசம் செய்து கொண்ட ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க இந்திய முதலாளிவர்க்கம் ஏன் ஆசைப்பட வேண்டும..? இப்போராட்டத்தை வளர்த்தெடுத்து ஈழத்தை உருவாக்கினால், அது இந்திய முதலாளிகளுக்குத் தானே ‘லாபம்’ ?! இவை தெரிந்தும் கூட இவ்விடுதலைப் போராட்டத்தை நசுக்க சிங்கள அரசுக்கு அளப்பரிய ஆதரவை இந்திய அரசு நல்கியது ஏன்..?

முதலாளிகளுக்கு இலங்கை பிளவுண்டாலும் லாபம். ஒன்றுபட்ட இலங்கையும் லாபம் தான். முதலாளிகளின் லாபவெறி ஒரு சந்தையை உருவாக்கும் அல்லது தேடும் மாறாக, ஒரு சந்தையை (தமிழர்கள்) முற்றிலும் அழித்தொழிக்க விரும்ப மாட்டார்கள். அப்படியெனில், இந்திய முதலாளிகள் ஈழத்தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்க வேண்டியதன் காரணம், அவசியம் என்ன..? ம.கஇ.க. ‘தத்துவ’ புருடர்கள் விளக்குவார்களா..?

இது போன்ற பல்வேறு கேள்விகளைக் இவர்களிடம் சிக்கிக் கொண்டுள்ள அப்பாவி இளைஞர்கள் கேட்கும் நிலை வந்தால் என்ன செய்வது என்று, ம.க.இ.க.வின் தலைமைக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்நேரம் இவற்றுக்கொரு பதிலையும் அவர்கள் தயார் செய்திருக்கக் கூடும். ஏனெனில், ம.க.இ.க.வினர் இக்கேள்விகளை எதிர்பார்க்காமல் தங்கள் செயல் திட்டங்களை செய்வதில்லை.

எப்பொழுதும் இல்லாத வகையில், மிகவும் அம்பலப்பட்டு நிற்கும் ம.க.இ.கவை இயக்குகின்ற சக்தி எது என்று பலத்த சந்தேகங்கள் இன்றைக்கு எழும்பியுள்ளது.

தமிழ்நாட்டில் தமிழர்கள் மத்தியில் தமிழின உணர்வு மேலொங்கியுள்ள நிலையில், அதனை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இந்திய அரசின் உளவுப்பிரிவினருக்கும் தமிழக ஆளும் வர்க்கத்திற்கும் ம.க.இ.க.விற்கும் மறைமுக மற்றும் நேரடி தொடர்புகளே இருக்கலாம். உணர்வுடன் எழுகின்ற தமிழ் இளைஞர்களை, வாய் கிழிய பேசியும், எழுதியும் மயக்கி ‘நாங்கள் தான் புரட்சியாளர்கள்’ மற்றவர்கள் அனைவரும் துரோகிகள் அல்லது எதிரிகள் என்று அவதூறு பரப்பி ம.க.இ.க.வில் சேர்க்கிறார்கள். உண்மையான புரட்சிகர சக்திகளிடம் தமிழக இளைஞர்கள் சேருவதை விரும்பாத ஆளும் வர்க்கத்தின் உளவுத்துறையே ம.க.இ.க. போன்ற ‘வாய்ச்சவடால்’ ’புரட்சி’க் குழுக்களை உருவாக்கிவிட்டிருக்கலாம்.

தமிழக இளைஞர்களே எச்சரிக்கையாக இருங்கள்! எதிரிகளைவிட உடனிருந்தே உளவு பார்க்கும் துரோகிககள் மிகவும் ஆபத்தானவர்கள்...!

- அதிரடியான் (athiradiyaan@gmail.com)

இறுமாப்பு வேண்டாம் இந்தியாவே! இனி எதுவும் நடக்கலாம்; அப்போது உனக்கு தாங்கும் சக்தியை தரவல்லவர் யார் வருவர்?

கொடிதான இனப்படுகொலைகள் நடத்தப்பட்டு இப்போது அந்த மண் இரத்தம் படிந்த மேற்தரைகளோடு அமைதியாக இருக்கின்றது. அந்த மண்ணின் மக்கள் மட்டுமல்ல இலை, செடி, கொடி மரம் மிருகங்கள் என்று அனைத்துமே கருகிப்போயுள்ள அந்த பிரதேசம் இப்போது பேய்கள் உலாவும் மயானங்களாகவே உள்ளன.

பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று நீங்கள் அதற்கு பெயர் சூட்டி அழைத்தாலும் அங்கு பெருமளவில் இடம்பெற்றது இனப்படுகொலைகளே.

மிகுந்த மூர்க்கத்தனத்தோடு நடத்தப்பட்ட மேற்படி படுகொலைகளைச் செய்ய நீங்கள் எத்தனை பேர் அந்த மண்ணில் நின்றீர்கள்? சுமார் 30 நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு அல்ல கூடாத பங்களிப்பு அது. அதிலும் வேடிக்கை என்னவென்றால் எதிரிகளாக தங்களுக்குள் மோதிக்கொண்ட பல நாடுகளே அங்கு மறைமுகமாக கைகோர்த்து நின்றன. நாங்கள் நன்றாகவே பார்த்தோம். உங்கள் பகைமைகளை மறைத்தபடியும் தற்காலிகமாக மறந்த படியும் அந்த மண்ணில் வந்து நின்று கொடிய சங்காரத்தை நடத்த வேண்டிய அவசியம் என்னதான் உங்கள் அனைவருக்கும் இருந்தது. காரணம் இருந்தது. அந்த சிறியதொரு தீவுக்குள் பெரியதொரு விடுதலை இயக்கம். முப்பது ஆண்டுகளாக முப்பதாயிரத்தை நெருங்கும் மாவீரர்களை மண்ணுக்கு விதையாகக் கொடுத்திருந்தாலும் இன்னும் பின்னடைவையே மனதாலும் எண்ணிப்பார்க்காத துணிவு. மூன்று படைகளையும் தங்களால் முடிந்த அளவிற்கு ஆரம்பித்து அவற்றின் வெற்றிகளை பல தடவைகள் பரீட்சித்துப் பார்த்த இராணுவ பலம். தென்கிழக்கு ஆசியாவின் நிலப்பரப்பிற்குள் இன்னுமொரு புதிய நாடு உருவாகுவதா? அதுவும் ஆயுதப் புரட்சியின் மூலம் அது சாத்தியமாவதா? ஆபத்தான விடயம் இது என்ற தவறான கணிப்பு. இவைதான் உங்கள் சங்காரத்திற்கு நீங்கள் கற்பித்துக் கொண்ட காரணங்கள்.

இந்தியாவே உன்னை நோக்கிய எத்தனை கோரிக்கைகளை நீ உதாசீனம் செய்தாய். உலகின் பலமான ஒரு விடுதலை அமைப்பை அழிப்பது என்ற உன் தீர்மானத்திலிருந்து சற்றும் விலகவில்லை. ஆனால் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பது போல பாசாங்கு செய்தாய். தமிழ் நாட்டில் தமிழ்த் தலைவர்களுக்கிடையே நீண்ட பகையை ஏற்படுத்த தீவிரமாகச் செயற்பட்டாய். மேற்குலக நாடுகளிலிருந்து வீதிகளில் இறங்கி மன்றாட்டமாக கேட்டுக் கொண்ட தமிழர்களின் அவலக் குரல்கள் கேட்டும் கேட்காத செவிடன் போல உன் செயற்பாடுகள் இருந்தன.

தீங்கு செய்ய முயன்ற உனக்கு நீ தவறுகள் செய்வதை உணர முடியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா ஆகியவை இரண்டும் உன் பரம விரோதிகள். உன்னை அழித்து உன் வளர்ச்சியை சிதைக்க எந்த நாட்டோடும் கூட்டுச் சேர்வதற்கு தயாரான நாச நாடுகள் அவை. இது உனக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழர்களின் கண்ணீருக்கும் செந்நீருக்கும் காரணமாக அமைந்து விட்டது உன் கபடநாடகம்.

இந்தியாவிற்காக யுத்தத்தைதான் நாம் நடத்தினோம் என்று இலங்கை கூறியபோது உன் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் அதை ஆமோதித்துள்ளார். ஆமாம் இந்தியாவிற்குரிய யுத்தத்தைத்தான் இலங்கைப் படைகள் நடத்தின என்று இலங்கையின் கூற்றை அவர் ஆமோதித்தார். நான் நடத்த வேண்டிய யுத்தத்தை எனக்காக எனது நண்பன் இலங்கை செய்தான் என்று நீ இன்று கூறுகின்றாய். இறுமாப்புக் கொள்கின்றாய். ஆனால் எங்கோ மேற்குலக நாடொன்றின் உனக்கெதிரான யுத்தத்தை உனது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் நாளையோ அன்றி மறுநாளோ செய்கின்ற ஒரு காட்சியை நாம் மனக் கண் கொண்டு பார்க்கின்றோம். அந்த கொடிய யுத்தம் தொடங்கி உனது மக்களும் படைகளும் வளங்களும் அழிக்கப்படுகின்றபோது உனக்காக அனுதாபம் காட்ட ஒருவருமே இருக்கமாட்டார்கள்.

இன்று வன்னி மக்களின் வளத்தையும் உயிர்களையும் அழிக்க உன்னோடு ஒன்றாய் நின்ற அந்த 30 நாடுகளும் மறுபுறத்தே நின்று உன்னை அழித்து நிற்கப்போகின்றன. அப்போது ஈழத்தமிழகத்தில் அழுவதற்கு தமிழர் இல்லாவிடினும் உனக்காக உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து உனக்காக குரல் கொடுப்பார்கள்.

உலகெங்கும் புலனாய்வு வேலைகளை செய்யும் உனது றோவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இந்த விடயம். சீனாவும் பாகிஸ்தானும் உனது எல்லையை நோக்கிய பிரதேசங்களில் தங்கள் படைகளையும் பயங்கர ஆயுதங்களையும் குவித்துள்ளன. இன்னும் எத்தனை மாதங்களோ அன்றி எத்தனை ஆண்டுகளோ அந்த இரண்டு கொடியவர்களாலும் நீ குறிவைக்கப்படுவாய். குதறப்படுவாய். பல துறைகளில் முன்னேற்றம் கண்ட உன் வளங்கள் உன் கண் முன்னால் அழிக்கப்படும். அப்போதுதான் நீ உணர்வாய். அந்த கொடுமைகளை தாங்கும் சக்தியை உனக்கு தரவல்லவர்கள் யார் உள்ளார்கள் என்று நீ நிச்சயம் ஏங்கித் தவிப்பாய். நேற்று நீ செய்த நாச வேலைகளுக்கு உடனேயே தண்டனை கிடைத்து விட்டது என்று உன் தேச மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஈழத்தமிழர்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செங்குருதியும் உன் கண்களின் முன்பாக தோன்றி மறையும் நமது மக்களின் சடலங்களின் தடயங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன உன் நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்தியா என்ற நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.

(கனடா உதயன் வார இதழின் கடந்த வார ஆசிரியர் தலையங்கம்)

புதன், 10 ஜூன், 2009

பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)


பெண்கள் மேலான பாரிய பாலியல் போர் குற்றங்கள் (படங்கள் இணைப்பு)

 

பேரினவாதம் தன் போர்க்குற்றத்தை மூடிமறைக்க எடுக்கும் பாரிய முயற்சிகள் ஒருபுறம். இதற்கு மறுபுறம் இந்தியா முதல் பல நாடுகள் இன்று துணை நிற்கின்றது.

 மறுபக்கத்தில் இவை ஒவ்வொன்றாக அம்பலமாகின்றது. பெண்கள் மேல் இராணுவம் நடத்திய பாலியல் யுத்தம் மூலம், யுத்தம் வெல்லப்பட்டுள்ளது. இராணுவத்தின் ஆணாதிக்க பண்பின் ஊடாக, யுத்தம் உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் தலைவர்கள் தான், சிங்கள மேலாதிக்க பாசிச திமிருடன் இன்று நாட்டை ஆளுகின்றனர். பெண்களை நிர்வாணப்படுத்தி ரசித்த ஆணாதிக்க படைக்கு, நன்றி தெரிவித்து கொண்டாட்டங்கள் வேறு. கம்யூனிசத்தின் பெயரில்  இனவாதம் பேசும் ஜே.வி.பியும் அதன் தலைவரும், இந்தக் குற்றத்தை விசாரித்தால் தங்கள் பிணத்தின் மேலாகத்தான் இது நடக்கும் என்று கொக்கரிக்கின்றனர்.

 இனவழிப்பு யுத்தம் மூலம் தமிழ் பெண்கள் மேல் இழைத்த குற்றக் காட்சிகளே இவை. அதிரடி இணையம் இப்படத்தை தம் அரசியல் உள்ளடக்கத்தில் மூடிமறைக்காது, பொறுப்புடன் வெளியிட்டமைக்கு இந்த இடத்தில் நாம் நன்றி கூற வேண்டும்; 

 பெண்களையே நிர்வாணப்படுத்தி காட்சிப்படுத்தியது இந்த இராணுவ நடவடிக்கை.  ஆயுதங்களை காட்டியவர்கள், தலைவர்களின் பிணத்தைக் அலமானப்படுத்தி காட்டியவர்கள், வென்ற பிரதேசத்தைக் காட்டியவர்கள், இதைக் காட்சியாக காட்டவில்லை. இதற்கு மாறாக படம் படமாக, இராணுவ இணையத்தளங்கள் பலவற்றை வெளியிட்டன. ஆனால் யுத்தத்தின் உண்மையான, கேவலமான, இழிவான பக்கங்கள் அனைத்தும் மூடிமறைக்கப்பட்டன. புலியெதிர்ப்பு அரசசார்பு தமிழ் ஊடகங்கள் அரசை நக்கினவே ஒழிய, மக்களுக்கு நடந்ததைக் வெளிக்கொண்டு வர முனையவில்லை. இப்படி இவர்கள் ஜனநாயகமோ, ஆணாதிக்க வகைப்பட்டது. பெண்களுக்கு எதிரானது. 

 இந்தக் காட்சி மக்கள் மேல் இழைத்த யுத்த எதார்த்தத்தை காட்டுகின்றது. இப்படங்கள் வௌ;வேறு பெண்கள், வௌ;வேறு சம்பவங்களை உள்ளடக்கிய ஒரு படத்தொகுப்பு. இதை ரசிக்கும் இராணுவ மனநிலையுடன் தான் இந்த யுத்தம் வெல்லப்பட்டது. முன்பு நாம் வெளியிட்ட வீடியோ காட்சி, இதை மேலும் உறுதி செய்கின்றது.  ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்.

 இந்த காட்சிகள் தெளிவாக பல விடையத்தை சொல்லுகின்றது. பெண்கள் உயிருடன் பாலியல் ரீதியாக அங்கு வதைக்கப்பட்டதையும், வதைக்கப்படுவதையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. ஒரு இனத்தின் மேலும்;, பெண்கள் மேலும், பேரினவாத இனவழிப்பு யுத்தம் செய்யப்பட்டதையும், போர்க் குற்றங்கள் இப்படி பலவாக இருப்பதையும் எடுத்துக் காட்டுகின்றது.

rdsc00023.jpg

 

 

 rdsc00024.jpg

 

rpicturs2.jpg

 

 rdsc00036.jpg

 

 

 rdsc00090.jpg

 

 

rdsc00636.jpg

 rimage0001.jpg

 

 rimage0971.jpg

 

 

 rpictures1.jpg

 

 

 

 

 

 

 

 

 

 

 இப் படங்கள் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பல பாவித்திருப்பதை, எரிந்த கருகியுள்ள படங்கள் எடுத்துக் காட்டுகின்றது. யுத்தக்குற்றம் ஒருபுறம், மறுபக்கத்தில் இதை முன்னின்று செய்த  குற்றவாளிகளே இன்று நாட்டை ஆளுவதையும், இது தெளிவாக அம்பலப்படுத்துகின்றது.

 பி.இரயாகரன்
07.06.2009