வெள்ளி, 22 மே, 2009

இராணுவ முகாம்களில் பெண்கள் கற்பழிப்பு, ஆண்கள் காணாமற் போகிறார்கள்: பிரித்தானியா ஸ்கை (SKY News Video) செய்திகள்



சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கப்படும் தமிழ்ப் பெண்களை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக பிரித்தானியா ஊடகமான ஸ்கை செய்திகளுக்குச் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
சிறிலங்கா அரசினது இவ் முகாம்களில் பெண்கள் பலர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், இளைஞர்கள் பலர் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதாகவும் பல அறிக்கைகள் கூறுகின்றன என்று ஸ்கைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.
40க்கும் மேற்பட்ட முகாம்களில் 200,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவற்றிற்குள் செல்ல பல உதவி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென்றும், ஆனால் இவ்முகாம்களுக்குள் சுதந்திரமாகச் சென்று மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான வசதிகளை, அராசங்கம் செய்யவேணடும் எனக் கோருவதற்காக, ஐ.நா. பாதுகாப்பு குழுவின் செயலாளர் நாயகம், பான் கி முன் அவர்கள், சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அச்செய்தி தெரிவித்துள்ளது.
ஸ்கைச் செய்திகளோடு கதைத்த, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு பெண் ‘முகாம்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் மற்றும் இளைஞர்கள் பலர் காணாமற்போவதாகவும், அவர்களின் விபரங்கள் பின்பு கிடைக்காமலே போகிறது’ எனவும் கூறியுள்ளார்.
“எங்களை ஆதரிக்கவும் தற்காப்புத் தருவதற்கும் யாருமே இல்லையென்றே நாங்கள் வருந்துகிறோம் என்றும், தனிமைப்பட்டுள்ளதாகவே நாம் உணருகின்றோம்” எனவும் பெண் ஒருவர் ஸ்கைச் செய்திளோடு கதைக்கும் போது தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: