தேவையான ஒரு இடத்தில் தேவையற்ற ஒரு செடி முளைத்தாள் அது களை எனப்படும். பயிர்களுடன் முளைத்து, பயிர்களுடன் வளர்ந்து, பயிர்களுக்கான சத்தை சுரண்டி பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை(எழுச்சியை) தடுக்கக்கூடிய வல்லமை படைத்தது களை!. இப்படிப்பட்ட களையை வயலிளிருந்து அகற்றுவதே களையெடுத்தள் எனப்படும்.
களையென்பது பயிர்வகைகளில் மட்டுமே இருக்குமென்பதல்ல, அவை விளங்குகளிடமும், மனிதர்களிடமும் உண்டு. பூச்சிகள்(அந்நியர்கள்) 18 சதவிகிதமும், களைகள் 33 சதவிகிதம் வரையும் பயிகளின் எழுச்சியை நீர்த்துப்போக வைக்கின்றன, அதாவது சேதத்தை உண்டாக்குகின்றன. களைகலை கட்டுப்படுத்துதல் என்பதும் களையெடுத்தல் என்பதும் வெவ்வேறானது.
களைகலை கட்டுப்படுத்துதல் என்றால் தற்காலிகமாக களைகளின் வளர்ச்சியை தடுப்பதாகும். இதனால் அக்களைகள் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் களையெடுத்தல் என்றால் களையை அவ்விடத்திலிருந்து அடியோடு எடுத்து அப்புறப்படுத்தல் எனப்படும். இதனால் அங்கு மீண்டும் அக்களை வராது(ஏற்கனவே அங்கு அதன் விதைகள் இல்லாதபட்சத்தில்).
பூச்சிகள் பயிர்களின் எதிரிகள், ஆனால் களைகள் பயிர்களின் துரோகிகள். பயிர்களுடன் முளைத்து, பயிர்களுடன் வளர்ந்து பயிர்களுக்கான சத்தையே உறிஞ்சி பயிர்களை அழிக்கும் துரோகிகள் களைகள். அதனால்தான் பூச்சிகளை அழிப்பதைவிட களைகளை ஒழிப்பதற்க்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
மேற்கூறிய யாவும் பயிர்களின் வளர்ச்சிக்கும் பயிர்களின் பாதுகாப்புக்கும் மட்டுமல்ல மனிதகுல வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பொருந்தும்.
" ஒரு துரோகி ஆயிரம் எதிரிகளுக்கு சமம்"
ஒரு இனத்தில் பெரும்பான்மையான மக்கள் ஒரு நியாயமானக் கோரிக்கைக்காக போராடிக்கொண்டிருக்கையில் அதே இனத்தில் ஒருசிலர்,அக்கோரிக்கையை மூடத்தனமாக மறுத்தும், அதற்கு எதிராகவும் செயல்பட்டால் அவர்களை களையெனலாம் அல்லது துரோகிகள் எனலாம். இது நம் தமிழகத்திற்கு மிகவும் பொருந்தும்.
இன்று ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இன்று கட்டாயத் தேவையாக ஈழம் இருக்கிறது.ஆனால் இதை உணர்ந்தும் உணராமலிருக்கும் ஒரு சில களைகள் மட்டும் அதிகார வர்க்கத்துடனும் அந்நியர்களுடனும் சேர்ந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்க்கும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.
அவ்வாறான களைகளின் பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது காங்கிரஸ் கட்சி, அதற்கடுத்து திராவிட முன்னேற்றக் கழகம், பின்னர் தி.க போன்ற எடுபிடிகள்.
பயிர்களில் காணப்படும் களையான அருகம் புல்லை சேற்றிலேயே மிதித்து புதைப்பது அக்களையிலிருந்து தற்காலிக தீர்வே தவிர நிரந்தரத் தீர்வல்ல.ஆனால் அதே அருகம் புல்லை வேருடன் பிடிங்கி அப்புறப்படுத்துவது மீண்டும் அதன் தொல்லை இருக்காது. அதேபோல்தான் இந்தக் கட்சிகளுக்கும் சனநாயகத்தின்படி தீர்வுக் கொடுத்தால் அது நிரந்தரத் தீர்வாக இருக்காது ஏனெனில் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து மீண்டும் முளைத்துவிடும் அதனால் இவைகளுக்கு நிரந்தரத் தீர்வு எழுதப்படவேண்டும்.
அன்று கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தான் எட்டப்பன். ஆனால் இன்றோ பல
எட்டப்பன்கள்(காங்கிரஸ், தி.மு.க., தி.க., காரர்கள்) பணத்திற்காகவும், பதவிக்காகவும், புகழுக்காகவும் நம் இனத்தையே காட்டிமட்டுமல்லாமல் கூட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்திய இராணுவ இரகசியங்களை வெளியில் சொன்னால் இராஜதுரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்படும், இத்தண்டனை இரகசியங்களை வெளியில் சொன்னதற்காக அல்ல துரோகம் புரிந்ததற்காக! இந்திய தண்டனைச் சட்டமே சொல்கிறது துரோகத்திற்க்கு மரணதண்டனையென்று.
ஐம்பதாண்டு காலம் துரோகம் மட்டுமே செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கும், பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழ்மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த, செய்கின்ற தி.மு.க விற்கும் ஏன் மரணதண்டனைக் கொடுக்கக்கூடாது?
அதிகார வர்க்கத்தையும் அரசையும் கையில் வைத்திருக்கும் இவர்களுக்கு நீதி மன்றம் தண்டனை வழங்காது. நாம் தான் வழங்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
ஏற்கனவே காலந் தாழ்ந்ததால்தான் காவேரி, முல்லைப் பெரியார், பாலாறு பிரச்சனைகளில் உரிமையிழந்தோம், மீனவர்கள் பிரச்சனையில் உயிர்களை இழந்தோம், தொப்புள்கொடி உறவுகள் என்ற காரணத்திற்காக ஈழசொந்தங்களை இழந்தோம். இனியும் காலம் தாழ்த்தினால் தீர்ப்பு எழுதவேண்டிய நம்மையும் தீர்த்து விடுவார்கள், எனவே தீர்ப்பு எழுதுங்கள் களையெடுப்போம்!
களையெடுப்போம்! தமிழினம் காப்போம்!
வியாழன், 28 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக