இளந்தமிழர் இயக்கத்தினர் கைது
ஈரோடு: பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்றும், சீமான் பெரியார் சிறு வயதில் செய்த தவறுகளால் பிறந்திருக்கலாம் என்றும் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வீட்டை முற்றுகையிட முயன்ற இளந்தமிழர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக இதற்காக 48 மணி நேரத்தில் இளங்கோவன் மன்னி்ப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம் என அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.
இந் நிலையில் இன்று காலை இளங்கோவனின் வீட்டை இளந்தமிழர் இயக்கத்தினர் 50 பேர் முற்றுகையிடச் சென்றனர்.
இந்த இயக்கத்தினர் பெரியார் சிலைக்கு மாலையிட்டுவிட்டு இளங்கோவன் வீட்டை நோக்கிச் செல்ல இருந்த நிலையில் மாலையிடுவதற்கு அனுமதி மறுத்த போலீசார் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ம.செந்தமிழன் உட்பட 10 பேரை கைது செய்தனர்.
சனி, 9 மே, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக