வியாழன், 28 மே, 2009

களையெடுப்போம்! - புதுவை ஆனந்த்

தேவையான ஒரு இடத்தில் தேவையற்ற ஒரு செடி முளைத்தாள் அது களை எனப்படும். பயிர்களுடன் முளைத்து, பயிர்களுடன் வளர்ந்து, பயிர்களுக்கான சத்தை சுரண்டி பயிர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை(எழுச்சியை) தடுக்கக்கூடிய வல்லமை படைத்தது களை!. இப்படிப்பட்ட களையை வயலிளிருந்து அகற்றுவதே களையெடுத்தள் எனப்படும்.

களையென்பது பயிர்வகைகளில் மட்டுமே இருக்குமென்பதல்ல, அவை விளங்குகளிடமும், மனிதர்களிடமும் உண்டு. பூச்சிகள்(அந்நியர்கள்) 18 சதவிகிதமும், களைகள் 33 சதவிகிதம் வரையும் பயிகளின் எழுச்சியை நீர்த்துப்போக வைக்கின்றன, அதாவது சேதத்தை உண்டாக்குகின்றன. களைகலை கட்டுப்படுத்துதல் என்பதும் களையெடுத்தல் என்பதும் வெவ்வேறானது.

களைகலை கட்டுப்படுத்துதல் என்றால் தற்காலிகமாக களைகளின் வளர்ச்சியை தடுப்பதாகும். இதனால் அக்களைகள் மீண்டும் வளர்ந்துவிடும். ஆனால் களையெடுத்தல் என்றால் களையை அவ்விடத்திலிருந்து அடியோடு எடுத்து அப்புறப்படுத்தல் எனப்படும். இதனால் அங்கு மீண்டும் அக்களை வராது(ஏற்கனவே அங்கு அதன் விதைகள் இல்லாதபட்சத்தில்).

பூச்சிகள் பயிர்களின் எதிரிகள், ஆனால் களைகள் பயிர்களின் துரோகிகள். பயிர்களுடன் முளைத்து, பயிர்களுடன் வளர்ந்து பயிர்களுக்கான சத்தையே உறிஞ்சி பயிர்களை அழிக்கும் துரோகிகள் களைகள். அதனால்தான் பூச்சிகளை அழிப்பதைவிட களைகளை ஒழிப்பதற்க்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

மேற்கூறிய யாவும் பயிர்களின் வளர்ச்சிக்கும் பயிர்களின் பாதுகாப்புக்கும் மட்டுமல்ல மனிதகுல வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் பொருந்தும்.

" ஒரு துரோகி ஆயிரம் எதிரிகளுக்கு சமம்"

ஒரு இனத்தில் பெரும்பான்மையான மக்கள் ஒரு நியாயமானக் கோரிக்கைக்காக போராடிக்கொண்டிருக்கையில் அதே இனத்தில் ஒருசிலர்,அக்கோரிக்கையை மூடத்தனமாக மறுத்தும், அதற்கு எதிராகவும் செயல்பட்டால் அவர்களை களையெனலாம் அல்லது துரோகிகள் எனலாம். இது நம் தமிழகத்திற்கு மிகவும் பொருந்தும்.

இன்று ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இன்று கட்டாயத் தேவையாக ஈழம் இருக்கிறது.ஆனால் இதை உணர்ந்தும் உணராமலிருக்கும் ஒரு சில களைகள் மட்டும் அதிகார வர்க்கத்துடனும் அந்நியர்களுடனும் சேர்ந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்க்கும் தீங்கு விளைவித்துக் கொண்டிருக்கின்றன.

அவ்வாறான களைகளின் பட்டியலில் முதலில் இடம்பிடிப்பது காங்கிரஸ் கட்சி, அதற்கடுத்து திராவிட முன்னேற்றக் கழகம், பின்னர் தி.க போன்ற எடுபிடிகள்.

பயிர்களில் காணப்படும் களையான அருகம் புல்லை சேற்றிலேயே மிதித்து புதைப்பது அக்களையிலிருந்து தற்காலிக தீர்வே தவிர நிரந்தரத் தீர்வல்ல.ஆனால் அதே அருகம் புல்லை வேருடன் பிடிங்கி அப்புறப்படுத்துவது மீண்டும் அதன் தொல்லை இருக்காது. அதேபோல்தான் இந்தக் கட்சிகளுக்கும் சனநாயகத்தின்படி தீர்வுக் கொடுத்தால் அது நிரந்தரத் தீர்வாக இருக்காது ஏனெனில் பணத்தையும் அதிகாரத்தையும் வைத்து மீண்டும் முளைத்துவிடும் அதனால் இவைகளுக்கு நிரந்தரத் தீர்வு எழுதப்படவேண்டும்.

அன்று கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தான் எட்டப்பன். ஆனால் இன்றோ பல
எட்டப்பன்கள்(காங்கிரஸ், தி.மு.க., தி.க., காரர்கள்) பணத்திற்காகவும், பதவிக்காகவும், புகழுக்காகவும் நம் இனத்தையே காட்டிமட்டுமல்லாமல் கூட்டியும் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய இராணுவ இரகசியங்களை வெளியில் சொன்னால் இராஜதுரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்படும், இத்தண்டனை இரகசியங்களை வெளியில் சொன்னதற்காக அல்ல துரோகம் புரிந்ததற்காக! இந்திய தண்டனைச் சட்டமே சொல்கிறது துரோகத்திற்க்கு மரணதண்டனையென்று.

ஐம்பதாண்டு காலம் துரோகம் மட்டுமே செய்து வரும் காங்கிரஸ் கட்சிக்கும், பணத்திற்காகவும் பதவிக்காகவும் தமிழ்மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்த, செய்கின்ற தி.மு.க விற்கும் ஏன் மரணதண்டனைக் கொடுக்கக்கூடாது?

அதிகார வர்க்கத்தையும் அரசையும் கையில் வைத்திருக்கும் இவர்களுக்கு நீதி மன்றம் தண்டனை வழங்காது. நாம் தான் வழங்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

ஏற்கனவே காலந் தாழ்ந்ததால்தான் காவேரி, முல்லைப் பெரியார், பாலாறு பிரச்சனைகளில் உரிமையிழந்தோம், மீனவர்கள் பிரச்சனையில் உயிர்களை இழந்தோம், தொப்புள்கொடி உறவுகள் என்ற காரணத்திற்காக ஈழசொந்தங்களை இழந்தோம். இனியும் காலம் தாழ்த்தினால் தீர்ப்பு எழுதவேண்டிய நம்மையும் தீர்த்து விடுவார்கள், எனவே தீர்ப்பு எழுதுங்கள் களையெடுப்போம்!

களையெடுப்போம்! தமிழினம் காப்போம்!

வெள்ளி, 22 மே, 2009

பிரபாகரன் இல்லாவிட்டால் தமிழர்கள் அடிமைகளே: ஆந்திரா தப்பி வந்த ஈழத்தமிழர்கள் பேட்டி

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆந்திரா வந்தடைந்த தமிழர்கள் கூறும் பொழுது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் இல்லையென்றால் சிறிலங்காவில் தமிழர்கள் அடிமைகளாக்கப்படுவார்கள் என்றனர்.
இலங்கையில் சிங்கள ராணுவம் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகள், விஷக்குண்டுகள் வீசியது. இதில் பச்சிளம் குழந்தைகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் பலியானார்கள். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கை-கால்களை இழந்து உயிருக்கு போராடிக் கொண் டிருக்கிறார்கள். இந்த போரின்போது இலங்கையின் வடபகுதியில் உள்ள சவுதாலாவை சேர்ந்த கிருஷ்ணவேணி, சுகன்யா உள்ளிட்ட 15 பேர் படகு மூலம் ஆந்திரா தப்பி வந்தனர். அவர்கள் கூறியதாவது:-

இலங்கையில் நடந்த போரில் சிங்களர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சுட்டுக்கொன்று விட்டதாக சொல்கிறார்கள். இதை நாங்கள் நம்பமாட்டோம். பிரபாகரன் இலங்கை தமிழர்களின் கடவுள். அந்த கடவுளுக்கு மரணமே கிடையாது. காரணம் என்னைப் போன்ற பெண்கள் இலங்கை மண்ணில் பாதுகாப்பாக வாழ வழி ஏற்படுத்தியது அவர்தான்.

நாங்கள் பள்ளியில் படிக்கும்போது கூட சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களை மிகவும் கேவலமாக நடத்துவார்கள். தமிழர்கள் வசிக்கும் கிராமங்களுக்குள் சிங்கள ரவுடிகள் புகுந்து பெண்களை கற்பழிப்பார்கள். வீடு, வீடாக வந்து ஆயுதங்களை காட்டி பணம் - நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விடுவார்கள்.

அவர்கள் மீது சிங்கள போலீசாரிடம் புகார் செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். மாறாக புகார் கொடுத்த தமிழர்களை எங்கள் இனத்தவர் மீதான புகார் கொடுக்கிறாய். உனக்கு எவ்வளவு தைரியம்? என்று அடித்து உதைத்து விரட்டி விடுவார்கள். இல்லையென்றால் புகார் கொடுத்தவர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் தள்ளி விடுவார்கள்.

இதனால் சிங்கள ரவுடிகள் கற்பழிப்பு, கொலை, கொள்ளை குற்றங்களில் ஈடுபட்டால்கூட அங்குள்ள போலீஸ் நிலையங்களில் எங்களால் புகார் கொடுக்க முடியாது. சிங்களர்களின் இந்த தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தவர் பிரபாகரன். அவர் இருக்கும் வரைதான் அங்கு தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியும். அவர் இல்லாவிட்டால் சிங்கள அரசு தமிழர்களை மீண்டும் அடிமைகளாக மாற்றிவிடும்.

பிரபாகரன் இறந்து விட்டார் என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. அவர் இறந்து விட்டதாக சிங்கள ராணுவம் பொய் பிரசாரம் செய்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களின் கடவுள் பிரபாகரன். அவரது படத்தை வைத்துதான் நாங்கள் வழிபாடு நடத்தி வருகிறோம். தமிழர்களின் காவல் தெய்வமான அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம்.

இவ்வாறு அவர்கள் கண்ணீருடன் கூறினர்.

இராணுவ முகாம்களில் பெண்கள் கற்பழிப்பு, ஆண்கள் காணாமற் போகிறார்கள்: பிரித்தானியா ஸ்கை (SKY News Video) செய்திகள்



சிறிலங்கா இராணுவத்தின் தடுப்பு முகாம்களில் வைத்திருக்கப்படும் தமிழ்ப் பெண்களை இராணுவம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துவதாக பிரித்தானியா ஊடகமான ஸ்கை செய்திகளுக்குச் தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன.
சிறிலங்கா அரசினது இவ் முகாம்களில் பெண்கள் பலர் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், இளைஞர்கள் பலர் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்படுவதாகவும் பல அறிக்கைகள் கூறுகின்றன என்று ஸ்கைச் செய்திகள் குறிப்பிட்டுள்ளது.
40க்கும் மேற்பட்ட முகாம்களில் 200,000க்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவற்றிற்குள் செல்ல பல உதவி அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லையென்றும், ஆனால் இவ்முகாம்களுக்குள் சுதந்திரமாகச் சென்று மக்களுக்கு உதவி வழங்கத் தேவையான வசதிகளை, அராசங்கம் செய்யவேணடும் எனக் கோருவதற்காக, ஐ.நா. பாதுகாப்பு குழுவின் செயலாளர் நாயகம், பான் கி முன் அவர்கள், சிறிலங்காவுக்கு பயணம் செய்துள்ளதாகவும், அச்செய்தி தெரிவித்துள்ளது.
ஸ்கைச் செய்திகளோடு கதைத்த, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரு பெண் ‘முகாம்களில் பல பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும் மற்றும் இளைஞர்கள் பலர் காணாமற்போவதாகவும், அவர்களின் விபரங்கள் பின்பு கிடைக்காமலே போகிறது’ எனவும் கூறியுள்ளார்.
“எங்களை ஆதரிக்கவும் தற்காப்புத் தருவதற்கும் யாருமே இல்லையென்றே நாங்கள் வருந்துகிறோம் என்றும், தனிமைப்பட்டுள்ளதாகவே நாம் உணருகின்றோம்” எனவும் பெண் ஒருவர் ஸ்கைச் செய்திளோடு கதைக்கும் போது தெரிவித்துள்ளார்.

Adhikaalai

மரணம் அடைந்தது யார்? பிரபாகரன் போலவே இன்னொருவர்-புதிய தகவல்கள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14639&lang=ta&Itemid=52

ராஜீவ் காந்தி கொலைக்காக சோனியா காந்தியிடம் மன்னிப்பு கேட்பேன்:கருணா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14641&lang=ta&Itemid=52

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும்:ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14618〈=ta&Itemid=52

மத்திய அரசிடம் இலங்கை தமிழருக்காக கருணாநிதி பேச வேண்டும்:ஜெயலலிதா
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14619〈=ta&Itemid=52

ராஜீவ் நினைவுதினம் : நிதியமைச்சர் அன்பழகன் தலைமையில் உறுதிமொழி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14620〈=ta&Itemid=52

LTTE அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசனின் மனைவியும் சுட்டுக்கொலை
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14621〈=ta&Itemid=52

வவுனியா முகாம்களில் துணை இராணுவக் குழுக்களால் சிறுவர்கள் கடத்தல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14622〈=ta&Itemid=52

மத்திய அரசுக்கான புதிய அமைச்சரவை பட்டியல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14623〈=ta&Itemid=52

நெதர்லாந்தில் மே 22 துயரநாளாக அனுஷ்டிப்பு
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14624〈=ta&Itemid=52

LTTE கைதிகளை சட்டரீதியான முறையில் நடத்த வேண்டும்:ஜப்பான்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14625〈=ta&Itemid=52

உலகை ஏமாற்றிக்கொண்டு தமிழ் மக்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14613〈=ta&Itemid=52

--
வாழ்த்துக்களுடன்
அதிகாலை நண்பர்கள்
www.adhikaalai.com

புதன், 20 மே, 2009

Adhikaalai

பிளாஸ்டிக் சர்ஜரி பிரபாகரன் மாண்டார்:தேவைப்படும்போது வெளியில் வருவார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14510&lang=ta&Itemid=185

ஈழமக்களுக்கு கேட்பாரில்லையா? இளம்பெண்கள் இனி சிங்களருக்கு விருந்தா?
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14532&lang=ta&Itemid=163

இலங்கை இராணுவத்தால் பிரபாகரனைத் தொடக்கூட முடியாது:மண்டபம் அகதிகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14528&lang=ta&Itemid=52

இலங்கையின் பொய் பரப்புரைகளை கண்டித்து 3 பஸ்கள் அடித்து சேதம்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14530&lang=ta&Itemid=55

உரக்கச் சொல்லுங்கள் "புலிகள் தீவிரவாதிகள்!" : மித்ரா நேசமித்ரன்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14544&lang=ta&Itemid=164

நமீதா ஹாட் கேலரி : Namitha Hot Gallery
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14551&lang=ta&Itemid=67

கட்சி வளர்ச்சிக்காக ராகுல் காந்தி இலாகா இல்லாத மந்திரி ஆகிறார்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14543&lang=ta&Itemid=52

The Real Culprits behind Sri Lankan War by Richard Dixon, telegraph
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14546&lang=ta&Itemid=62

எம்மக்களுக்கான உரிமை கிடைக்கும்வரை போராடுவோம்:விடுதலைப்புலிகள்
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14526&lang=ta&Itemid=52

பிரபாகரன் இறப்பு உறுதியானால் மட்டுமே அறிக்கை விடமுடியும்:கருணாநிதி
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=14508&lang=ta&Itemid=52


--
வாழ்த்துக்களுடன்
அதிகாலை நண்பர்கள்
www.adhikaalai.com

செவ்வாய், 19 மே, 2009

புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல சிறீலங்கா தேசிய கொடிகளில் தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படவில்லை ‐ சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நி


இலங்கையின் வடக்கில் நடைபெற்று வந்த யுத்தம் முடிவையெட்டியுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.
இதன் மூலம் தோற்கடிக்கப்பட முடியாது என பலராலும் கூறப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தோல்வி கண்டுள்ளதாகவும் அரச தரப்பு தெரிவிக்கின்றது.

இந்த யுத்த வெற்றியை கொண்டாடும் வகையில் சகலரும் வீடுகளிலும் வாகனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் இலங்கை தேசிய கொடியை பறக்கவிடவேண்டுமென படையினரும் காவற்துறையினரும் ஏன் அரசாங்கமும் கேட்டுக் கொண்டது.

இதற்காக பல இலட்சக்கணக்கில் இலங்கைத் தேசிய கொடிகள் புதிதாக அச்சிடப்பட்டன. இவ்வாறு அச்சிடப்பட்ட தேசிய கொடிகள் இலங்கையின் பெரும்பாலான இடங்களில் விற்பனை செய்யப்பட்டும் வருகின்றது.

எனினும் புதிதாக அச்சிடப்பட்டுள்ள பல தேசிய கொடிகளில் சிறும்பான்மையினத்தவரான தமிழரைக் குறிக்கும் செம்மஞ்சள் நிறம் அச்சிடப்படாமல் அதற்கு பதிலாக பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரை பிரதிபலிக்கும் கடுஞ்சிவப்பு நிறமே அச்சிடப்பட்டுள்ளது.

இலங்கை தேசியக் கொடியில் வாளேந்திய சிங்கத்தை சுற்றி காணப்படும் கடுஞ்சிவப்பு நிறமானது பெரும்பான்மை இனத்தவரான சிங்களவரையும், பச்சை நிறமானது சிறும்பான்மை இன முஸ்லிம் இனத்தவரையும், செம்மஞ்சள் நிறம் சிறும்பான்மை தமிழினத்தையும் குறிக்கும்.

ஆனால் தற்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள புதிய தேசிய கொடிகளில் பெரும்பாலும் தமிழ் மக்களை பிரதிபலிக்கும் செம்மஞ்சளுக்கு பதிலாக கடுஞ்சிவப்பு நிறம் அச்சிடப்பட்டுள்ளது.

மூவின மக்களும் சமமாகவும் சமத்துவமாகவும், சகோதர உணர்வுடனும் வாழும் நாடு இது என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கம் இதில் எவ்வாறு கவனம் செலுத்தாது போனது ஏன் என பலராலும் கேள்வி எழுப்பப்படுகின்றன.

இதனை அச்சகத்தில் ஏற்பட்ட தவறு என உதாசீனதாக எடுத்துக் கொள்ளமுடியாது எனவும் இது அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு எனவும் கொழும்பில் வசிக்கும் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உட்பட சகல தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் இந்த தேசிய கொடி விவகாரமானது இந்த நாட்டில் வாழும் தமிழர்களின் நிலைமையினை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ளது.

இவ்வாறு தேசிய கொடியிலிருந்து தமிழினத்தை பிரதிபலிக்கும் செம்மஞ்சள் நிறம் சிங்களவர்களின் நிறமாக மாறியது போன்று தமிழ் கிராமங்களும் சிங்கள கிராமங்களாக மாற்றமடையப் போகுதோ என்று எண்ணத் தோன்றுவதாகவும் மற்றுமொருவர் தெரிவித்தார்.

அரசாங்கம் மிகவும் நேர்த்தியாகவும், நாட்டு மக்கள் தொடர்பில் பாரிய பொறுப்புணர்ச்சியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றுவதாக தெரிவிக்கையில், ஒரு நாட்டின் தேசிய கொடியில் இவ்வாறான தவறு இடம்பெறுவதை எவ்வாறு அனுமதித்தது என்றும் பலர் கேள்வி எழுப்புகின்றனர்

நன்றி:-வியப்பு

வெடிக்கும் பட்டாசுகளும் கொதிக்கும் எம் மனங்களும்!



வெடித்துச் சிதறும் பட்டாசுகள் எங்கள் மனங்களில் எரிமலையாக வெடிக்கின்றன. நாங்கள் இப்பொழுது செய்வதறியாதிருக்கின்றோம்.

தலைநகர் எங்கும் பட்டாசுகள் வெடியோசை ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தேசியத் தொலைக்காட்சிகளில் இராணுவ வெற்றிகள் பகிரங்கப்படுத்தப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பட்டாசு வெடிச்சத்தங்கள் காதைப் பிளக்கின்றன.

கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. அதற்கென்றே ஒவ்வொரு பாகங்களிலும் சிங்களவர்கள் கூட்டமாக நின்று அறிவிப்புகளுக்காக ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பெண்கள் கூட்டமாக சேர்ந்து வீதிகளில் பாற்சோறு சமைத்து பாதசாரிகளுக்கும் வாகனங்களில் பயணிப்போருக்கும் இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

வாகனங்களில் சிங்கக் கொடிகளுடன் கத்தி ஆரவாரமிட்டுக் கொண்டு கூட்டமாக செல்பவர்களின் கூச்சல்களும், ஊளையிடும் சத்தங்களும் வீதியெங்கும் நிறைந்திருக்கின்றன.

வீதிகளில் சத்தமாக பாடல்களை இசைக்கச் செய்து சிங்கக் கொடியுடன் ஆண்களும் பெண்களும் சேர்;ந்து ஆடி மகிழ்கின்றனர். அதைப் பார்க்கவென கொழும்புச் சந்திக்கு சந்தி ஒரு பெரும் கூட்டம்.

எங்கும் ஜயவேவா கோஷம். அப்பே ஹமுதாவட்ட ஜயவேவா அப்பே ஜனாதிபதித்துமாட்ட ஜயவேவா என்ற கோஷங்கள் ஓயாது ஒலித்துக் கொண்டிருந்தன.

தொலைக்காட்சிகளில் மக்களின் பேட்டிகள். புலிகள் கொல்லப்பட்டமையை வரவேற்றும், நாடு விடுவிக்கப்பட்டது தொடர்பான மகிழ்ச்சியையும் அவர்கள் அனைவரும் வெளியிட்டனர். இடையில் ரணில் விக்கிரமசிங்கவை திட்டித் தீர்க்கவும் அவர்கள் மறக்கவில்லை. அவர் இருந்திருந்தால் பிரபாகரனுக்கு தமிழ் ஈழம் கிடைத்திருக்குமாம். நாடு ஒன்றுப்பட்டு விட்டதாகவும், இனி சிங்கள பறங்கியர் முஸ்லிம்கள் சுதந்திரமாக தடையின்றி வாழலாம் என்று தேசியத் தொலைக்காட்சியில் சிங்கக் கொடியை ஏந்தி வெற்றிக்களிப்பில் இருக்கும் ஒருவர் குறிப்பிடுகின்றார். எங்கே அதில் தமிழ் என்ற இனம்? அந்த நபர் மறந்து விட்டாரா அல்லது அறிந்தே அந்த சொல்லை கூற மறந்தாரா?

இவை அனைத்தும் நாடு புலிகளிடமிருந்து மீட்கப்பட்டமையை கொண்டாடும் நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஏன் வாகனத்தில் சிங்கக் கொடியினை பறக்கவிட மறந்து விட்டாயா? என்ற அதட்டலுடன் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருக்கும் படைச் சிப்பாய் வினவுகின்றான். நாங்கள் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்கும் தோரணையில் அவரைப் பார்க்கின்றோம்.

திகைப்பும், அச்சமும், நடந்தவற்றை ஏற்கவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கின்றது இங்கு தலைநகர தமிழினம்.

அடுத்து என்ன நடக்குமோ என்ற பீதியும் ஆட்கொள்கின்றது. வெற்றிக்களிப்பில் மமதையில் சுற்றித்திரிகின்ற சிங்கள மக்கள் மத்தியில் அமைதியாக இருப்பதனை விட வேறு என்ன தான் வழி தற்பொழுது எமக்கு இருக்கின்றது? என்ற கேள்வியினை ஆளுக்காள் மாறி கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.

கேட்பாரற்று அட்டகாசங்கள் தொடர்கின்றன. நாடு பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு வாரத்திற்கு அதனை கொண்டாடும் முகமாக வீடுகளில் வாகனங்களில் சிங்கக் கொடிகளை பறக்கவிடப்பட வேண்டும். அரச அலுவலகங்களில் கட்டாயம் ஒரு வாரத்திற்கு சிங்கக் கொடி பறக்கவிடப்பட வேண்டும். இது அரசாங்கத்தின் கட்டளை. கட்டளை மற்ற ஒரு இனத்தின் தன்மானத்தினை வெகுவாகப் பாதிக்கின்றது. வெற்றிக்களிப்பில் நிகழும் இந்த செயற்பாடுகள் யாவும் சகோதர இனத்தினைப் பாதிக்கும் என்ற கவலை துளியும் இன்றி வெறியாட்டமாக மாறியுள்ளது என்பது பெரும் கொடுமையாகும்.

இன்று கொழும்பில் நிகழும் இந்த வெற்றிக்களியாட்டங்கள் ஒரு இனத்திற்கு எதிரான வன்மத்தினை விதைக்கும் செயல்களாகி விட்டன என்பதே உண்மை.

தமிழர் கடைகள் முன் திரண்ட சிங்களவர்கள் புலிகளுக்கு எதிரான வெற்றியினைக் கொண்டாட பட்டாசுகளை வெடிக்க, பாற்சோறு உண்டு மகிழ வலுக்கட்டாயமாக நிதி திரட்டியிருக்கின்றனர் என்ற செய்தி தமிழர்களுக்கு நல்ல செய்தி அல்ல.

தமிழ் அடையாளங்களுடன் சென்றவர்கள் கேலிக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் செறிந்திருக்கும் பகுதிகளில் திட்டமிட்டு பட்டாசுகள் வெடிக்க வைக்கப்பட்டு பாற்சோறு வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன. அதில் கலந்து கொள்ளாத தமிழர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றார்கள். தமிழர்கள் வீடுகளில் வாகனங்களில் சிங்கக் கொடியை ஏற்றுமாறு வற்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக பாராளுமன்றத்தில் ஆற்றும் உரையும், அவர் அதில் கூறப்போகும் விடயங்களும் நிச்சயம் இந்த நடவடிக்கைகளை மென்மேலும் தீவிரப்படுத்தும். அவரின் உரையை செவிமடுக்கும் ஆர்வம் சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதுடன், அதன் பிறகு இந்த வெற்றி விழாவை தீர்க்கமாக முன்னெடுக்கும் தீர்மானத்தில் அவர்கள் இருக்கின்றார்கள்.

இந்த செயற்பாடுகள் அனைத்தும் தமிழர்களை கலக்கமுறச் செய்துள்ளன. தமிழினத்தின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் காட்டுமிராண்டித்தனங்களுக்கு இந்த செயற்பாடுகள் அத்திவாரமாகி விடுமோ என்று அச்சம் மேலோங்கியுள்ளது. பதில் பேசவோ, மறுதலிக்கவோ திராணியற்று நடப்பவற்றை ஏற்கும் சங்கடமான நிலையில் தலைநகர் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பது தான் உண்மை. தமிழினத்தினை காட்டிக் கொடுத்து தன்மானம் இழந்த தமிழர்கள் இதற்கு விதிவிலக்கு.

தமிழர்களின் படை பலம் தகர்க்கப்பட்டு விட்டதாகக் கருதும் சி;ங்களம், அடுத்ததாக தமிழர்களின் பண பலத்தினை தகர்ப்பதற்கான முன்னணி செயற்பாடுகளாகவும் இவை மாறக் கூடும் என்ற அச்சம் பரவலாக இங்கு தமிழர்கள் மத்தியில் உள்ளது.

மனிதாபிமான யுத்தம் என்ற பெயரில் தாயகத்தமிழர்களின் வாழ்வியலை சிதைத்து சின்னாபின்னமாக்கிய இந்த சிங்கள அரசாங்கம் தலைநகரில் தமிழர்களிடம் தனது வல்லமையை காட்ட விளையாது என்று எவராலும் உறுதிபடக் கூற முடியாது என்பதை இங்கு அனைத்து தமிழர்களும் அறி;ந்தே வைத்திருக்கின்றனர்.

கொடூரமான யுத்தத்தினை நடத்தி மனித குலம் மன்னிக்க முடியாத பேரவலங்களை நிகழ்த்தியுள்ள இந்த அரசாங்கத்தின் வெற்றிக்களிப்புக்கும் கொண்டாட்டங்களுக்கும் துணை போகாத தமிழர்களின் தலைவிதி எப்படியாகுமோ என்ற ஐயமும் தவிர்க்க முடியாமல் நிலவுகின்றது.

புலிகளை அழித்து விட்ட பின்னர் தமிழர்களுக்கு சம உரிமை எதற்கு? அரசியல் தீர்வு எதற்கு? தமிழர்களின் பேரம் பேசும் ஆற்றல், சக்தி அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. இது தான் சிங்கள மக்களின் ஏகோபித்த தீர்மானம். தமிழின அழிப்பினை கண்டுகொள்ளாத சர்வதேசம் இனி தமிழர்களின் பிரச்சினைகளைப் பற்றியோ அவர்கள் உரிமைகளைப் பற்றியோ அக்கறை செலுத்த தான் கூடுமா? இவையெலாம் எமக்கு வெளிப்படுத்தும் விடயம் என்னவெனில், தமிழர்களின் போராட்டச் சக்தி மீள் எழுச்சிப் பெறும் வரை சிங்களவர் காலடியில் நாம் கேட்பாரற்று நசுக்கப்படுவோம் என்பது தான்.

என்னதான் கூறி எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் இந்த காலப்பகுதி தமிழனுக்கு கேடான காலப்பகுதியாகி விட்டது. தமிழன் ஒன்று நினைத்தால் வேறு ஒன்று நடக்;கின்றது. தமிழன் நம்பியிருக்கும் விடயங்கள் காலை வாரி விட்டு விடுகின்றன. நம்பிக்கைப் பூக்கள் பூக்க மறுக்கின்றன. அவலமும் அச்சமும் நிறைந்த வாழ்வே தமிழனுக்கு இங்கு தற்பொழுது உரித்தாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் நாட்டை மீட்டு விட்டதற்காக கொண்டாடப்படும் களியாட்ட நிகழ்வுகள் எதிர்வரும் நாட்களில் எவ்வாறான வடிவத்தினைப் பெறுமோ என்ற அச்சம் பரவலாக அனைவர் மத்தியிலும் ஏற்பட்டிருக்கின்றது.

நன்றி:- viyapu.com

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: செ. பத்மநாதன் செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனும் பாதுகாப்பாகவும் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக இராசரீக உறவுகளுக்கான பிரதிநிதி செல்வராஜா பத்மநாதன் பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு இன்று மாலை 7 மணியளவில் தொலைபேசி வாயிலாக அளித்த செவ்வியில் இதனைத் தெரிவித்தார்.பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் எங்கிருக்கின்றார் என்ற விபரத்தை வெளியிட முடியாது எனவும் பத்மநாதன் கூறினார்.



வவுனியா தடுப்பு முகாம் உண்மை நிலையை நேரடியாகச் சென்று அனைத்துலகிற்கு வெளிச்சமிட்டுக்காட்டி சனல் 4 தொலைக்காட்சின் செய்தியாளர் நிக் பற்றன் வோஸிற்கு (Nick Patton Walsh) வழங்கிய செவ்வியிலேயே பத்மநாதன் இதனைக் கூறினார்.
கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, 17 மே, 2009

LTTE 'call ceasefire' - BBC

Tamil rebels trapped in a tiny enclave of northern Sri Lanka have declared a ceasefire, a rebel spokesman says.

The Tamil Tigers (LTTE) had given up their fight against a major government offensive and "decided to silence our guns", he said on a pro-Tamil website.

"This battle has reached its bitter end," said Selvarasa Pathmanathan, the Tigers' chief of international relations, in a statement on Tamilnet.

President Mahinda Rajapaksa has already claimed victory in the 26-year war.

A later statement on the Tamilnet website appeared to modify the rebel position.

Mr Pathmanathan said the LTTE was "prepared to silence its guns if that is what needed by the international community to save the life and dignity of the Tamil people".
See a map of the conflict region

"In the past 24 hours, over 3,000 civilians lie dead on the streets while another 25,000 are critically injured with no medical attention," said the statement.

Civilians trapped

In contrast, Sri Lanka military officials said earlier that all the civilians who had been trapped in Sri Lanka's northern war zone had escaped.
Advertisement

The BBC's Charles Haviland describes celebrations on the streets of Colombo - Video footage provided by Associated Press

The government rejected the ceasefire calls, saying that as all trapped civilians had now fled from the area of conflict, there was no reason to stop its offensive.

Army spokesman Brig Udaya Nanayakkara said some 50,000 ethnic Tamils had fled the area over the past three days.

Like all accounts from the war zone, neither claim can be independently verified.

For months, tens of thousands of Tamil civilians have been trapped in the war zone, vulnerable to bombardments as the government and Tamil Tiger rebels fought bitterly.

The United Nations says they were being forcibly kept there by the rebels and that more than 6,000 have been killed since January.

The UN has told the BBC the army figures reinforced its view that Sri Lanka's authorities were ill-prepared for the huge influx of internally displaced people.

Refugee camps inland are already badly strained accommodating the huge numbers of those who have fled the conflict.

Rebels 'cornered'

Both the UN and Western governments have called on Sri Lanka to exercise restraint in its pursuit of a military victory over the Tigers.

Despite President Rajapaksa's claim of military victory on Saturday, senior officials told the BBC that fighting was still continuing in the area where the LTTE leaders were said to be cornered.

A military spokesman has told the BBC the last remnants of the rebels are trapped in 1.5 square kilometres of jungle. Again, his assertion cannot be verified.

More than 70,000 people have died in the bitter war for a Tamil homeland.

Sri Lanka's army said earlier 70 rebels had been killed trying to escape from a tiny enclave where they are holed up in the island's north-east.

The army says it has cut off rebel access to the sea.

Brig Udaya Nanayakkara said a "process of identification" was going on to identify the 70 rebels killed while trying to cross a lagoon in six boats.

But Sri Lanka's defence ministry said later that the Tigers' leader, Velupillai Prabhakaran, had not been found, AFP news agency reported.

President Rajapaksa is expected to give a nationally televised news conference in parliament on Tuesday, when reports suggest he may officially declare the war over.

Courtesy:- BBC NEWS

கொழும்பில் பெரும் வெற்றி விழாவிற்கான ஆயத்தங்கள் - தமிழர்களுக்கு எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பிரதேசங்களை முழுமையாக மீட்டெடுததை பெரும் விழாவாகக் கொண்டாத் திட்டமிட்டுள்ளது சிறிலங்கா அரசு. இந்த வெற்றி விழாவை கொழும்பு உட்பட இலங்கை முழுவதும் வாழும் தமிழ் மக்கள் பெரும் வெற்றி விழாவாகக் கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் சிங்களக் காடையர்கள் வெடி கொழுத்துவதற்கு பணம் தரவேண்டும் என வலியுறுத்தி பணத்தினை வாங்கிச் செல்வதுடன், விடுதலைப் புலிகள் அழிந்துவிட்டனர் என கேலியும், கிண்டலும் செய்கின்றனர். அத்துடன், சிறிலங்காவின் தேசிய கொடியை நாளை வர்த்தக நிலையங்களில் பறக்கவிட்டு வெற்றியைக் கொண்டாட வேண்டும் எனவும் எச்சரித்துவிட்டு சென்றுள்ளனர்.

இதேவேளை, யாழ்குடாவில் சிறிலங்கா துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியினரும், கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் துணை இராணுவக் குழுவினரும் இந்த வெற்றி விழாவினை தமிழ் மக்கள் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தி வருவதுடன், கொண்டாடதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

இதுஇவ்வாறிருக்க, விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்துவிட்டதாக கூறியுள்ள சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளில் இருந்து விடுதலைபெற்ற ஒரு நாட்டுக்கு தான் நாளை திரும்பவுள்ளதாக ஜோர்தானில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு இன்று தெரிவித்துள்ளார்.

எனினும், படையினர் எஞ்சியிருக்கும் பகுதிகளை முழுமையாக நாளை கைப்பற்றாது போனால் தனது பயணத்தை ஓரிரு தினங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டு படையினர் குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றியதாக அறிவித்ததன் பின்னர் நாடு திரும்புவதற்கு மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சிறிலங்காவின் நிலைமை இவ்வாறிருக்க, பொதுமக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்கு மனிதாபிமான அமைப்புக்களை கொழும்பு அனுமதிக்கவில்லை என்றால் அதற்கான விளைவுகளை சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண் சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக எச்சரித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதங்களைக் கீழே வைப்பதுடன், அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அனுமதியை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கும் பிரித்தானியப் பிரதமர், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த மோசமான போரின் இடையில் அகப்பட்டுள்ள மக்களுக்கான தேவைகளைக் கவனிப்பதற்காக மனிதாபிமான அமைப்புக்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் கோர்டன் பிறவுண், இந்தப் பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காண்பதற்கு ஐ.நா. மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்தார்.

"சிறிலங்கா அரசாங்கம் தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் பிரித்தானியப் பிரதமர் கடுமையாக எச்சரித்தார்.

சனி, 9 மே, 2009

இளந்தமிழர் இயக்கத்தினர் கைது

இளந்தமிழர் இயக்கத்தினர் கைது

ஈரோடு: பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்றும், சீமான் பெரியார் சிறு வயதில் செய்த தவறுகளால் பிறந்திருக்கலாம் என்றும் பேசிய மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் வீட்டை முற்றுகையிட முயன்ற இளந்தமிழர் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக இதற்காக 48 மணி நேரத்தில் இளங்கோவன் மன்னி்ப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் வீட்டை முற்றுகையிடுவோம் என அந்த அமைப்பு எச்சரித்திருந்தது.

இந் நிலையில் இன்று காலை இளங்கோவனின் வீட்டை இளந்தமிழர் இயக்கத்தினர் 50 பேர் முற்றுகையிடச் சென்றனர்.

இந்த இயக்கத்தினர் பெரியார் சிலைக்கு மாலையிட்டுவிட்டு இளங்கோவன் வீட்டை நோக்கிச் செல்ல இருந்த நிலையில் மாலையிடுவதற்கு அனுமதி மறுத்த போலீசார் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருணபாரதி, மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ம.செந்தமிழன் உட்பட 10 பேரை கைது செய்தனர்.