வியாழன், 17 டிசம்பர், 2009

கற்றது தமிழ், பலன் ??? தற்கொலை !!!

தமிழ் படித்து அறிவை வளர்த்துக் கொண்டவன்தான் தமிழ்நாட்டில், வேலை யில்
சேர முடியும் என்ற நிலை எப்போதும் இருந்ததுமில்லை, இருக்கவுமில்லை,
இருக்கப் போவதுமில்லை.

தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரம் இளை ஞர்கள் தமிழைப் படித்துவிட்டு வேலை
கிடைக்காமல் முதிர்ந்து கொண்டிருக்கிறார் கள். இவர்கள் என்ன செய்யப்
போகிறார்கள்?

பேச்சாற்றலை வளர்த்துக் கொண்ட தமிழ்ப் பட்டதாரிகள் பட்டிமன்றம், வழக்காடு
மன்றம், தலைமைக் கழகங்களின் பேச்சாளர்களாவதற்கு முயற்சி செய்யலாம். உடல்
வலுவுள்ள தமிழ்ப் பட்டதாரிகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் குளைக்கால்
வெட்டப் போகலாம். மற்றவர்கள்?

தமிழில் எம்.எல்., எம்.பில்., பி.எட்., பி.எச்.டி., படித்து விட்டு 35
வயது வரை வேலைக்காக முயன்று தோற்ற பூமிநாதன் என்ற தலித் முதிர் இளைஞன்,
தமிழைப் படித்த தவறை உணர்ந்து 10.12.09 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சைப் பகுதியில் 10 ஆயிரத்தில் ஒருவர் காலி!

தஞ்சை மாவட்டம் அணைக்கரை அருகி லுள்ள வடபாதி கிராமத்தில், பூமிநாதனைப்
பெற்ற சின்னாச்சியைச் சந்திக்க சென்றோம்.

""என் மூணு பசங்களில் பூமிநாதன் நடு வுலவன். நல்லா படிச்சான். நெறையப்
படிச்சான். வேலை கெடைச்சாத்தான் கல்யாணம் செய்துக்குவேன்னு தேடுனான்
தேடுனான்... அன்னக்கிக் கூட என்னமோ அப்ளிகேஷன் வாங் கோணும் தஞ்சாவூர்
போகணும்னு கேட் டான். நெஜமாவே நீ வேலை தேடுறியா இல்லை இந்த வயசான
காலத்தில தெனக் கூலிக்கு போய் வர்ற எங்க காசை வாங் கிட்டுப் போயி ஊர்
சுத்துறியாடானு திட்டுனேன். திட்டிப்பிட்டு காசைக் குடுத்தேன். இப்படி
வெஷத்தை வாங்கிக் குடிச்சிட்டுச் சாவான்னு நெனைச்சுக் கொடப் பாக்கலியே
சாமீய்!'' தரையில் முட்டிக் கொண்டு கதறினார் அந்தத் தாய்.

தற்கொலை செய்து கொண்ட பூமி நாதனின் நண்பர் புலவர் சந்திரசேகரைச் சந்தித்தோம்.

""போன மாதம் நடந்த ஆசிரியர்கள் நியமனத்தில் 1588 பேர், அதில் தமிழ்
படித்தோர் 210 பேருக்கு நியமனம். அதிலும் பூமிநாதனுக்கு கிடைக்கவில்லை.
இப்ப டி.ஆர்.பி. கால்ஃபர் பண்ணியிருக்காங்களே... அதுக்காக ஒருவாரம் அலையோ
அலைனு அலைஞ்சு அப்ளிகேஷனை வாங்கிப் பார்த்தால்... அதில் தமிழ் ஆசிரியர்
18 பேர்தான். அந்த 18-ல் ஒண்ணுகூட எஸ்.சி.க்கு கிடையாது. எப்படியாவது
டி.ஆர்.பி.யில் பாஸ் பண்ணணும்னு கஷ்டப்பட்டு படிச்சான். கிடைக்காதுனு
தெரிஞ்சதும் நொறுங்கிப் போனான். விஷத்தை வாங்கிக் குடிச்சிட்டு
செத்துட்டான். அவன் செத்துட்டான்... இன்னக்கி ரெண்டாம் நாள்... நாளைக்கு
மறந்து விடுவோம். பூமிநாதன் மாதிரிதான் நாங்களும்... எங்க கதி?''
கண்களில் திரண்ட ஈரத்தைத் துடைத்துக் கொண்டார் புலவர் சந்திரசேகர்.

தமிழ்மொழி செம்மொழி. ஆனாலும் சொந்த நாட்டின் நீதிமன்றத்திலும் பாராளு
மன்றத்திலும் நுழையும் தகுதி தமிழுக்கு கிடை யாது. தமிழ் மக்களுக்கு
வருமானத்தை தரும் தகுதியும் தமிழுக்குத் தரப்படவில்லை. பூமிநாதன் களின்
புதைகுழியில் கூடி நின்று கோஷம் போடலாம் ""தமிழ் வாழ்க!''.

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்

சரணடைய வந்த விடுதலைப் புலி தலைவர்களை சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயவே உத்தரவிட்டார் : சரத் பொன்சேகா தகவல்
இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவே, சரணடைய வந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று முக்கிய தலைவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். வன்னியில் இறுதிகட்ட யுத்தத்தின் கடைசி மூன்று நாட்கள் தமக்கு தொடர்புகள் இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்கள், நோர்வே மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்சவுடன் தொடர்பு கொண்டு விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன், சமாதான செயலக பிரதானி புலிதேவன் எனப்படும் சீவரட்ணம் பிரபாகரன் மற்றும் சிரேஸ்ட இராணுவ தளபதி ரமேஸ் ஆகியோரும் அவர்களின் குடும்பத்தினரும் படையினரிடம் சரணடையப்போவதை அறிவித்துள்ளனர்.

இந்த செய்தியை பசில் ராஜபக்ச பின்னர், கோத்தபாய ராஜபக்சவுக்கு தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த மேமாதம் 17 ஆம் திகதி, அதிகாலை, இந்த மூன்று தலைவர்களும் தமது குடும்பத்தினருடன் பசில் ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு தரப்பு ஆலோசனையின்படி வெள்ளையாடை அணிந்து சரணடைவதற்காக வந்துள்ளனர். இதன் போதே கோத்தபாய ராஜபக்ச, 58 வது படையணித்தளபதியாக இருக்கும் சவேந்திர சில்வாவுக்கு எந்த ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர்களையும் சரணடைய அனுமதிக்கவேண்டாம் அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதன்படியே குறித்த தலைவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.எனினும் அரசாங்கம் மே 18 ஆம் திகதி மோதல் ஒன்றின் போது நடேசன்,புலிதேவன் மற்றும் ரமேஸ் ஆகியோர் கொல்லப்பட்டதாக அறிவித்திருந்தது. இந்த சம்பவம் தமிழீழ விடுதலைப்புலிகள் வெல்லமுள்ளிவாய்க்காலில் 100க்கு 100 மீற்றர் பிரதேசத்திற்குள் அகப்பட்டிருந்தபோதே இடம்பெற்றது என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக இராணுவத்தளபதி கருத்து கூற மறுத்துள்ளார்

சரத் பொன்சேகாவின் இந்த தகவல் தொடர்பில், 58 வது படையணித்தளபதி சவேந்திர சில்வாவும், இராணுவத்தளபதி ஜெகத் ஜெயசூரியவும் தமது கருத்தை தெரிவிக்க மறுத்துள்ளதாக இலங்கையின் ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

எனினும் நோர்வேயின் சர்வதேச விவகார அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், தமக்கு கடந்த மே மாதம் 17 ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் தாம் சரணடையப் போகும் விருப்பத்தை தொலைபேசி மூலம் அறிவித்திருந்ததாக தெரிவித்திருந்தார்

அதேநேரம், தமிழீழ விடுதலைப்புலிகளின் இரண்டு தலைவர்கள், சரணடையப் போவதாக நோர்வே தரப்பு தமக்கு அறிவித்ததாக இலங்கையில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்துள்ளார். எனினும் இறுதி நாட்களில் என்ன நடந்தது என்பது தமக்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதி நாட்களில் உரியவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போயிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவு செயலாளராக இருந்தவரும் தற்போது ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான தூதருமான பாலித கோஹன, செய்தி நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கையில், நடேசனிடம் இருந்தும் புலிதேவனிடம் இருந்தும் பல செய்திகளை பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, சமபவத்தின் போது, 58 வது படையணி தளபதி சவேந்திர சில்வாவுடன் இருந்த ஊடகவியலாளர்களே தமக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற விடயத்தை கூறியதாக ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு செயலாளரே சரணடையும் தமிழீழ விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு உத்தரவிட்டதாக அந்த ஊடகவியலாளர்கள் தம்மிடம் தெரிவித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்சவும் மறுப்பு

சரத் பொன்சேகாவின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துரைத்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ச, தாம் நோர்வே தரப்பிடம் இருந்து புலிகளின் தலைவர்கள் சரணடைவது தொடர்பான எந்த ஒரு தகவலையும் பெற்றிருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூன்று தலைவர்கள் சரணடையப்போவதான தகவலை அறிந்திருக்கவில்லையா என பசில் ராஜபக்சவிடம் கேட்டபோது, இல்லை. தாம் அவ்வாறு கூறவில்லை.ஆனால் நோர்வே தரப்பினர் தம்முடன் தொடர்புக் கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

சகோதரர் கோத்தபாய ராஜபக்சவுக்கு இது தொடர்பான செய்தி எதனையும் நீங்கள் வழங்கவில்லையா? என அவரிடம் கேட்டபோது நோர்வே தம்முடன் தொடர்புகொள்ளாத முதல் விடயம் நடக்காத போது, இரண்டாவது விடயமும் நடந்திருக்க வாய்ப்பில்லை என பதிலளித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த கருத்துக்கள் செய்திகள் தொடர்பாக இலங்கையின் ஆங்கில ஊடகம், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும், அது பலனளிக்கவில்லை என தெரிவித்துள்ளது.
 
 

வியாழன், 26 நவம்பர், 2009

செவ்வாய், 17 நவம்பர், 2009

மாவீரர் நாள் 2009

 
மாவீரர் நாள் 2009

nerudal-annaithink



செவ்வாய், 6 அக்டோபர், 2009

இந்திய "ஐ.என்.எஸ் சாவித்திரி 144" யுத்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்


இந்திய "ஐ.என்.எஸ் சாவித்திரி 144" யுத்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில்
 
இந்தியாவின் ஐ.என்.எஸ். சாவித்திரி 144" என்ற யுத்தக் கப்பல்  இந்திய கடற்படையினருடன் இலங்கையின் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கிறது.

கொழும்புத் துறைமுகத்தில் தற்போது தரித்து நிற்கும் ஜ.என்.எஸ் சாவித்திரி 144 என்ற இந்தியாவின் யுத்தக் கப்பலுக்கு, இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திசேரா சமரசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

அவர்  கப்பலில் தங்கியுள்ளள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் கடற்படைத் தளங்களின் பாதுகாப்பு நடவடிக்கைள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கடற்படைத் தளபதி- அலோக் பிரசாத் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படையினருடன்  ஐ.என்.எஸ். சாவித்திரி 144" யுத்தக் கப்பல் தொடர்ந்தும் கொழும்பு துறைமுகத்தில்  தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.


பன்னிரு வேங்கைகளின் 22 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்(05.10.1987)

1987ஆம் ஆண்டு இந்தியா – சிறீலங்கா கூட்டுச்சதிக்குப் பலியாகிய லெப்.கேணல் புலேந்திரன், லெப்.கேணல் குமரப்பா உட்பட 12 போராளிகளின் வீரவணக்க நாள்.

heros_name_05101987

எமது வீரர்களைச் சாவின் பொறிக்குள் தள்ளியது, இந்தியா எமது மக்களுக்கு இழைத்த மன்னிக்க முடியாத குற்றமாகும். புலேந்திரன், குமரப்பா உட்பட 12 வேங்கைகளின் வீரச்சாவு, ஒரு பெரும் வல்லரசை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தை எமக்கு ஏற்படுத்தியது.
 
-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன்


Fwd: தினமலர் (04.10.2009- Front Page News) : வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது



வீணாகிறது 'வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் : செஞ்சிலுவை சங்கமும் பின்வாங்கியது
அக்டோபர் 03,2009,23:48  IST

Top world news stories and headlines detail

 

இலங்கைத் இலங்கைத்  தமிழர்களுக்காக, "வணங்காமண்' கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தில், எடுப்பதற்கு ஆள் இல்லாமல் கிடக்கிறது. இந்திய செஞ்சிலுவைச் சங்கமும், இந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டதால், நிவாரணப் பொருட்கள் அனைத்தும் வீணாகி வருகின்றன. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து, "கருணைத் தூதுவன்' என்ற அமைப்பு உருவாக்கப் பட்டது.

இந்த அமைப்பின் சார்பில், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் திரட்டப்பட்ட உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் ஏற்றிய, "கேப்டன் அலி' கப்பல், கடந்த மே மாதம் 7ம் தேதி பிரான்சில் இருந்து இலங்கைக்கு கிளம்பியது. "வணங்காமண்' நிவாரணப் பொருட்கள் என, இவற்றிற்கு பெயரிடப்பட்டது. நிவாரணப் பொருட்களை இறக்க இலங்கை அரசு மறுப்பு தெரிவித்தது. சென்னையைச் சேர்ந்த, "மனிதம்' என்ற அமைப்பு, நிவாரணப் பொருட்களை சென்னை துறைமுகத்தில் இறக்க முடிவு செய்து, அனுமதி கோரியது; இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. மத்திய அமைச்சர் ராஜா மூலமாக தமிழக அரசு வலியுறுத்தலும், சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையே, கொத்தபயே ராஜபக்ஷே தலைமையில், இந்தியா வந்த இலங்கை உயர்மட்டக் குழு, நிவாரணப் பொருட்களை ஏற்பதாக உறுதியளித்தது. ஜூலை 3ம் தேதி, சென்னை துறைமுகத்திற்கு வணங்காமண் கப்பல் வந்து சேர்ந்தது. நிவாரணப் பொருட்கள் இறக்கப் பட்டன. நான்கு நாட்கள் சோதனைக்குப் பிறகு, 27 கன்டெய்னர்களில் அடைக்கப்பட்டு, "கேப் கலோராடா' என்ற கப்பல் மூலமாக, நிவாரணப் பொருட்கள் கொழும்பு எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் இந்தப் பொருட்கள் கொழும்பிற்கு அனுப்பப் பட்டன. நிவாரணப் பொருட்களை, கொழும்பில் இறக்கி வைத்துவிட்டு கப்பல் புறப்பட்டுச் சென்றுவிட்டது. துறைமுகக் கட்டணத்தை செலுத்துவது யார், உரிய ஆவணங்கள் இல்லை என பல காரணங்களைக் கூறி, அந்தப் பொருட்களை கிடப்பில் போட இலங்கை அரசு முயற்சித்தது. அதோடு, இந்த பொருட்களை ஆகஸ்ட் 15ம் தேதி ஏலம் விடுவதாக அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில், துறைமுகக் கட்டணத்தை செலுத்துவதற்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் முன்வந்தது. ஆனால், கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாகக் கூறிய இலங்கை அரசு, அதற்கான ஆவணங்களை கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. அதோடு, நிவாரணப் பொருட்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரி நிர்ணயித்து, அதைக் கட்டுமாறும் நிர்பந்தம் கொடுத்தது. இலங்கை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்திய நிலையில், இந்த நிவாரணப் பொருட்களை தாங்கள் எடுக்கப்போவதில்லை என, கடந்த செப்டம்பர் 26ம் தேதி இந்திய செஞ்சிலுவைச் சங்கம், கடிதம் மூலம் தெரிவித்துள்ளது. இதற்கும் இலங்கை அரசிடம் இருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. நிவாரணப் பொருட்களை அனுப்பிய கருணைத் தூதுவன் அமைப்பு, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகிய அமைப்புகள் விலகிக் கொண்டுள்ள நிலையில், 884 டன் நிவாரணப் பொருட்கள், கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில் கொழும்பு துறைமுகத்தில் கிடக்கின்றன.

  - நமது சிறப்பு நிருபர் -


http://www.dinamalar.com/new/topnewsdetail.asp?news_id=1493

புதன், 30 செப்டம்பர், 2009

பிரபாகரன் இறக்கவில்லை தமிழகத்தில் உள்ள அகதிகள் நம்பிக்கை: அரசுக்கு உளவுத்துறை அறிக்கை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இன்னும் இறக்கவில்லை, அவர் 8 பேர் பாதுகாப்புடன் பத்திரமாக உள்ளார் என உளவுத்துறையினரிடம் அகதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீசார் மற்றும் மாநில உளவு போலீசார் இலங்கைக்கு செல்ல விரும்பும் அகதிகள் விபரம், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றிய விவரம் உட்பட பல தகவல்கள் குறித்து கருத்து கேட்டுள்ளனர்.

இதற்கு அகதிகள் பதிலளிக்கையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடு தான் உள்ளார். அவர் 8 பேர் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளார். பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசு நாடகம் ஆடுவதாகவும், பிரபாகரன் விரைவில் இலங்கையில் தோன்றுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இவர்களின் கருத்து அரசுக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சனி, 19 செப்டம்பர், 2009

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை : இந்திய அரசைக் கண்டித்து மதுரையில் (30.09.09) அன்று ஆர்ப்பாட்டம் : பெ.மணியரசன் அறிக்கை

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட

ஒப்புதல் அளித்த இந்திய அரசைக் கண்டித்து

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் ஆர்ப்பாட்டம்
 
தஞ்சை, 15.09.09.

 

முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிதாக அணை கட்ட கேரள அரசுக்கு இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அனுமதி கொடுத்திருக்கிறது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழகத்தின் சட்டப்படியான உரிமையை சட்டத்திற்குப் புறம்பான வழியில் பறிப்பதாகும். இந்திய அரசின் இச்செயலைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

 

2006-ம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இப்பொழுதுள்ள முல்லைப்பெரியாறு அணை வலுவாக உள்ளது; முதற்கட்டமாக 142 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம். சிற்றணையில் வலுப்படுத்தும் பணிகள் சிலவற்றைச் செய்தபின் முழு அளவான 152 அடி உயரத்திற்குத் தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது. அத்தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு முரட்டுத்தனமாக மறுத்துவிட்டது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த இந்திய அரசு துரும்பைக்கூட எடுத்துப்போடவில்லை.

 

இப்பொழுதுள்ள அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்திற்குத் தடை கோரித் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்துள்ளது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

 

இந்நிலையில், கேரள அரசு முல்லைப்பெரியாற்றில் புதிய அணைகட்ட வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளலாம் என இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இது இந்திய ஆட்சியாளர்களே இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் உடைப்பதாக உள்ளது.

 

நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். நடுவண் அரசின் முக்கியத்துறைகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களே உயர் அதிகாரிகளாக உள்ளார்கள். அவர்கள் தொடர்ந்து தமிழக உரிமைகளுக்கும் தமிழர் நலன்களுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

 

காவிரி, முல்லைப்பெரியாறு, தமிழக மீனவர், ஈழத்தமிழர் உள்ளிட்ட எல்லாச் சிக்கல்களிலும் இந்திய ஆட்சியாளர்களும், இந்திய அரசின் உயர் பதவிகளில் உள்ள கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் தமிழர்களுக்கு எதிராகவே செயல்பட்டு  வருகிறார்கள் என்பதைத் தமிழகத்தில் உள்ள பாமர மக்களும் புரிந்துகொண்டுள்ளார்கள்.

 

இந்தியாவுக்குள் உள்ள ஒரு மாநில மக்களை எதிரிகள் போல் இந்திய ஆட்சியாளர்களும், கேரளத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் கருதுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

 

செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணைகட்டுவது என்பது, முற்றிலுமாக முல்லைப்பெரியாறு உரிமையைத் தமிழகத்திற்கு இலல் hமல் செய்வதற்கான சூழ்ச்சித் திட்டம் தவிர வேறு அல்ல.

 

வெள்ளையர் ஆட்சியில் 999 ஆண்டுகளுக்கு முல்லைப்பெரியாறு அணை உரிமையைத் தமிழகத்திற்கு வழங்கி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் செய்வதற்காகவே புதிய அணை என்று கேரள அரசு வலை விரிக்கிறது.

 

பழைய அணையை இடித்தபின், 999 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் பழைய அணைக்குத்தானே தவிர புதிய அணைக்கு இல்லை என்று கேரள அரசு கைவிரித்துவிடும். புதிய அணையும் உடனடியாகக் கட்டாது.

 

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்குப் பாசன நீர் இல்லாமல் போகும் குடிநீரே இல்லாமல் போகும். தண்ணீர் வரத்தின்றி வைகை அணை முற்றிலும் வற்றி விடும்.

 

எனவே இந்திய அரசு உடனடியாக, கேரளத்திற்குக் கொடுத்துள்ள ஒப்புதலை இரத்துச்செய்து, செயல்பாட்டில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்றத்தீர்ப்பின்படி 145 அடி தண்ணீர் தேக்க ஆணை இடவேண்டும். அதைச் செயல்படுத்த வேண்டும்.

 

முல்லைப்பெரியாற்றில் இப்பொழுதுள்ள அணையை இடிக்க வகை செய்யும் சூழ்ச்சித்திட்டமான புதிய அணைகட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த இந்திய அரசை எதிர்த்து மதுரையில் 30.09.2009 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் பெ.மணியரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 




--
Thanks and Regards...
                           K.ANAND B.Sc(Agri).,
                           145,Aravindar street,
                           pondicherry- 605001.
                           +91 9940800358
                      anand_1028@yahoo.co.in

இலங்கையின் சதிவலை! – தினமணி ஆசிரியர் தலையங்கம்

கடந்த புதன்கிழமை ஆழ்கடலில் மீன் பிடிக்கக் கிளம்பிய 543 மீன்பிடிக்கும் விசைப் படகுகளில் 538-தான் வியாழனன்று ராமேஸ்வரம் திரும்பி இருக்கிறது. ஐந்து படகுகளை இலங்கையில் கடற்படையினர் சுற்றி வளைத்துப் பிடித்ததுடன் நில்லாமல் அதிலிருந்த மீனவர்களையும் பிடித்துச் சென்றிருக்கிறார்கள். 

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அப்பாவி மீனவர்களைத் தாக்குவதும், தங்களது எல்லைக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறிக் கைது செய்வதும் இலங்கைக் கடற்படையினருக்குப் புதிய விஷயமொன்றும் அல்ல. கைது செய்யப்பட்ட 21 மீனவர்களில் நான்கு பேர் மட்டுமே மன்னாரிலுள்ள நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய 17 பேரின் கதி என்ன என்பது ராஜபட்ச அரசுக்குத்தான் வெளிச்சம்.  இலங்கைக் கடற்படையின் அட்டூழியத்தை எதிர்த்து மீன்பிடிப்பதை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடந்த செப்டம்பர் 12-ம் தேதிதான் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அவர்களது 22 நாள் போராட்டம் இலங்கை அரசு தந்த உறுதிமொழியைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின் பேரில் முடிவுக்கு வந்தது. நான்கே நாள்களில் மீண்டும் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

தூத்துக்குடி பகுதிகளில் மீனவர்கள் அநேகமாகத் தங்களது தொழிலை நிரந்தரமாக விட்டுவிட்ட நிலைமை. ராமேஸ்வரத்திலோ, நித்திய கண்டம் பூரண ஆயுசாகக் கடலுக்குள் சென்று வந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்பு இந்த மீனவர்கள்மீது தாக்குதல் நடத்துவதும், இவர்களைப் பிடித்து வைப்பதும் விடுதலைப்புலிகள்தான் என்று குற்றம்சாட்டித் தப்பித்து வந்தது இலங்கை அரசு. தங்கள்மீது பழி போடுவதற்காக மீனவர்கள் விடுதலைப் புலிகளால் தாக்கப்படுவதாக நீலிக்கண்ணீர் வடித்த நிகழ்வுகள் ஏராளம், ஏராளம்.  போதாக்குறைக்கு, இந்திய அரசும் இந்த அப்பாவி மீனவர்கள் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் கடத்த உதவி செய்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்தியாவிலிருந்து உணவுப்பொருள்களைக் கடத்திச் சென்று கொடுக்கிறார்கள் என்றும் சந்தேகப்பட்டது.

இப்போதுதான், இலங்கையில் அமைதி ஏற்பட்டு விட்டது என்று பெருமை பாராட்டிக் கொள்கிறார்களே… விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று எக்காளமிடுகிறார்களே… அப்படியானால், இந்த அப்பாவி மீனவர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்? வேண்டுமென்றே இம்சிக்கப்படுகிறார்கள்?

""மீனவர்கள் கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் வலைகளை விரித்து மீன்களுக்காகக் காத்திருந்தனர். அப்போது இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் அணிஅணியாக வந்துள்ளனர். இதைக் கண்டு அச்சமுற்ற தமிழக மீனவர்கள் தங்களது படகுகளை அவசர அவசரமாகக் கரைக்குத் திருப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.  அப்போது, தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து, கடலில் விரித்திருந்த வலைகளை அறுத்து, டீசல் கேன்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடலில் தூக்கி வீசியுள்ளனர். மீனவர்களைத் துப்பாக்கிக் கட்டையால் தாக்கி, படகுகளைச் சேதப்படுத்தி இறுதியாக 5 படகுகளையும், 21 மீனவர்களையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் அத்துமீறி நடத்தப்படும் முதல் வன்முறைச் சம்பவம் அல்ல இது. இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசின் தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன~இது தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பு. அதாவது, அரசே ஒத்துக்கொண்டிருக்கும் விஷயம்.

தூத்துக்குடி துறைமுகம், சேது சமுத்திரத் திட்டம் போன்ற வளர்ச்சிப் பணிகளின் விளைவாக இந்தியக் கடற்கரை ஓரமாக மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்ட நிலைமை. ஆழ்கடலில் நள்ளிரவில், இது எங்கள் எல்லைக்கு உள்பட்டது என்று இலங்கைக் கடற்படை கூறும்போது அப்பாவி மீனவர்கள் என்னதான் செய்ய முடியும்? கச்சத்தீவில் வலைகளை உலர்த்தும் உரிமை தமிழக மீனவர்களுக்கு இருக்குமானால், அந்தப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும் உண்டு என்பதுதானே பொருள்?  இலங்கைக் கடற்படையின் உண்மையான நோக்கம் மீனவர்களைத் தாக்குவது அல்ல.

இந்த மீனவர்களைத் தாக்கும்போது, தமிழகம் கோபத்தில் கொந்தளிக்க வேண்டும். அப்போது மத்திய அரசு, அண்டை நாடான இலங்கையைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்று கண்டும் காணாமலும் இருந்து தனது கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்த வேண்டும். இதில் இலங்கை அரசுக்கு ஒரு குரூர சந்தோஷம்.  "உறுதியான நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுப்பதை நிறுத்திவிட்டு, கச்சத்தீவை மீட்டெடுக்க, நமது மீனவர்களின் உரிமையை நிலைநிறுத்த, எல்லாவற்றிற்கும் மேலாக, இந்து மகா சமுத்திரப் பகுதிகளில் இந்தியாவின் மேலாண்மையை நிலைநாட்டக் குரல் எழுப்ப வேண்டிய நேரமல்லவா இது?  இது மீன்பிடிப்பதற்குப் போடப்படும் தடை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசால் வீசப்படும் சதி வலை!

நன்றி: தினமணி



வியாழன், 27 ஆகஸ்ட், 2009

தமிழகமெங்கும் நேற்று "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" ஆர்ப்பாட்டங்கள்

தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும், ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகமெங்கும், நேற்று(26.08.09) புதன்கிழமை  "தமிழ்த் தேசிய எழுச்சி நாள்" கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த யூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட "தமிழ்த்தேசியம்" சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் "தமிழ்த் தேசிய எழுச்சி" நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.

தஞ்சை
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.
சென்னை
சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்திற்கு
தமிழகத்தில் வெளியாரை வெளியேற்று! முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்!" என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பப்பட்டன.
சிதம்பரம்
சிதம்பரம் பெரியார் சதுக்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது.
ஈரோடு
ஈரோட்டில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் லோகநாதபுரத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசிய எழுச்சி நாள் கலை நிகழ்வுகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் மருத்துவர் ச.அர.மணிபாரதி தலைமை தாங்கினார். தங்கம் குழுவினரின் தமிழர் எழுச்சிப் பாடல்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மதுரை
மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஜான்சி ராணி புங்கா அருகில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட உணர்வாளர்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
ஓசூர்
ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. பெண்கள் உள்ளிட்டு திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தின் தொடக்கத்தில் பொம்மிக்குப்பம் சி.பெருமாள் வழங்கிய எழுச்சிப் பாடல்கள் பொது மக்களை வெகுவாக ஈர்த்தது. திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை
கோவையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நேற்று காந்திபுரம் பகுதியில் தமிழ்நாடு உணவகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தோழர் பா.சங்கர் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பபூண்டி காமராஜ் சிலை அருகில் நடைபெற்ற எழுச்சி நாள் ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் இரமேசு தலைமை தாங்கினார்.
புதுச்சேரி
புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் சுதேசி மில் முன்பு தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆத்தூர்
சேலம் ஆத்தூரில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வேலூர்
வேலூரில் வழக்கறிஞர் ச.ந.ச.மார்த்தாண்டம் தலைமையில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்




சிறிலங்காவின் தமிழ் இனப்படுகொலையின் புதிய ஆதாரங்களை பிரித்தானிய செய்திச் சேவையொன்று வெளியிட்டு பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்ற போர்வையில் சிறிலங்கா நடத்தி வந்த தமிழினப் படுகொலைக்கு இந்தியா உட்பட பல சர்வதேச நாடுகளும் உதவிகளை வழங்கியிருந்தன.

இந்நிலையில், வன்னனியில் சிறிலங்காப் படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் ஆதாரமான காட்சிகளை பிரித்தானிய செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார்.

இந்தக் காட்சிகளை வெளியிட்டுள்ள 'சிறிலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' (Journalists for Democracy in Sri Lanka) என்ற அமைப்பு, இந்தக் காட்சிகள் கடந்த ஜனவரி 2009 இல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளதாகவும், இதே காலப் பகுதியில் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் போர்ப் பகுதிகளுக்குச் செல்வதை சிறிலங்கா அரசு தடை செய்துவிட்டிருந்தது எனவும் 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

இந்தக் காட்சிகள், "சிறிலங்கா அரசின்போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்களாக இல்லையா?" என ஜொனதன் மில்லர் கேள்வி எழுப்புகினன்றார்.

இதேவேளையில் இந்த காணொலி காட்சிகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் - தமிழ் மக்களுக்கு எதிரான கோரச் செயல்களில் தமது படையினர் ஈடுபட்டனர் என்பதை மறுத்துள்ளதுடன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே தமது படையினர் ஈடுபட்டனர் எனவும் தெரிவித்துள்ளதாக 'சனல் - 4' தெரிவிக்கின்றது.

மேலும் - "கடந்த காலங்களில் சிறிலங்கா அரசையும் படையினரையும் மாசுபடுத்தும் விதமாக இவ்வாறான - பொய்யாக உருவாக்கப்பட்ட - ஆவணங்களை ஊடக நிறுவனங்கள் வெளியிட்டதாகவும். அதனால், இந்தக் காணொலிக் காட்சிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திய பின்னரே இதனை வெளியிடுமாறும் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் தம்மிடம் கோரியதாகவும் 'சனல் - 4' நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தக் காணொலியை தன்னோடு சோர்ந்து பார்த்த, பக்க சார்பற்ற ஒரு சிங்கள ஊடகவியலாளர் - இது உண்மையானது தான் என தன்னிடம் கூறியதாகவும் ஜொனதன் மில்லர் குறிப்பிடுகின்றார்.

கொடூரமான, மனதை பாதிக்கும் காட்சிகள் உள்ளன. மனதளவில் பாதிப்புள்ளவர்கள் தவிர்க்கவும்

திங்கள், 17 ஆகஸ்ட், 2009

தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்

"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா. அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள்.

அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்"தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர்.

ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.

அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன.

ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது.

தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள்.


(இதுதான் கெளசிகா)
 
குண்டுகள் அவள் வயிற்றை கிழித்து குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது.


(இதுதான் கலைப்பிரியா)
கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது.

ஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள்.


"அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா"

"தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்"

"அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா"

சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்"

"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்"

அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா..."

"எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ"

"அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா"

"கஜி...தேவாரம் பாடு"

"பாய்....பாய்....பா....ய்ய்...

இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்


(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)

(நன்றி: சருகு பிளாக்)



செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கை: நேபாள மாவோயிஸ்ட் தலைவர் கண்டனம்

 
 
இந்தியாவில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராகவும், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அந்த நாட்டு அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகளை கண்டிப்பதாக நேபாள மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பிரதமருமான பிரசந்தா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் காத்மாண்டுவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் புரட்சிகர இயக்கங்களை ஒடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன. இது கண்டனத்துக்குரியது.

இதுபோன்ற நடவடிக்கைகளை மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. இந்த நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு பாதகமாகவே முடியும்.

தெற்காசிய மாவோயிஸ்ட் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வலுப்படுத்தி வருகிறோம்.

அதேபோல உலக அளவில் உள்ள ஆயுதப் போராட்டங்களையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

நேபாளத்துக்கு வெளியே உரிமைகளுக்காக நடைபெறும் ஆயுதப் போராட்டங்களை நாங்கள் உறுதிபட ஆதரிப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் சேர்ந்ததன் மூலம் ஆயுதப் போராட்டத்தை நாங்கள் கைவிட்டு விட்டதாக அர்த்தம் கொள்ளக் கூடாது.

நேபாள ராணுவத் தளபதி கதவாலை மீண்டும் அப்பதவியில் அமர்த்தியதன் மூலம் நேபாள அரசு தவறு செய்து விட்டது. அதைத் திருத்திக் கொள்ள நான்கு நாள் அவகாசம் தருகிறோம். அதற்குப் பிறகும அது திருந்தாவிட்டால் மக்கள் புரட்சி வெடிக்கும் என்றார் பிரசந்தா.

நன்றி:- தமிழ்வின்

 

ஞாயிறு, 19 ஜூலை, 2009

தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாட்டுத் தீர்மானங்கள்



தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 12.07.09 அன்று திருச்சியில் நடத்தப்பட்ட "தமிழ்த் தேசியம்" - சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் :
 
தீர்மானம் 1 : தமிழ்த்தேசிய எழுச்சி நாள் போராட்டம்
 
தமிழர்களுக்கு நவீன கால அடிமைத்தளை ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் வன்கவர்தல் வழி முந்நூறு ஆண்டுகளுக்கு முன் ப+ட்டப்பட்டது. அதற்கு முன் பிற்காலப் பாண்டிய அரசு, பிற்காலச்சோழப்பேரரசு ஆகியவை வீழ்ச்சியடைந்ததையொட்டி, அயல் இனப்படைத் தளபதிகள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்திருந்தனர். இந்த அயலார் தமிழ் இன அடையாளங்களை அழித்தது ஒரு பக்கம் இருக்க,ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்கள், தமிழர்களைத் தங்களுக்கு வரலாற்றுவழி உறவு எதுவுமில்லாத வட நாட்டினங்களோடு பிணைத்தனர்.
 
நீண்ட நெடுங்காலத்திற்கு நிலைக்கும்படியான அடிமை நுகத்தடியைத் தமிழர்கள் கழுத்தில் ஆங்கிலேயர் பூட்டினர். தில்லி அதிகார நடுவத்தின் அடிமை உறுப்பாக தமிழர் தாயகத்தை முதல் முதலாகப் பிணைத்தனர். அதன்வழி ப+ட்டப்பட்ட அரசியல், பொருளியல், பண்பியல் விலங்குகளை இன்று வரைச் சுமந்து தமிழினம் துன்புறுகிறது. 1947ஆகஸ்ட் 15-இல் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இந்தியாவிற்கு அரசியல் விடுதலை தந்தது. ஆனால் இந்தியாவுக்குள் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ்நாட்டிற்கு அரசியல் விடுதலை கிடைக்கவில்லை. இதை அப்போதே தந்தை பெரியார் சுட்டிக் காட்டினார். 1947ஆகஸ்ட் 15-க்குப் பிறகு இந்தியாவில் தமிழர்கள் இழந்துள்ள உரிமைகளைப்; பட்டியல் இட்டால் ஏட்டில் அடங்காது. மொழிவாரி மாநிலப் பிரிப்பின்போது திருப்பதி, சித்தூர், புத்தூர், காளத்தி, பலமநேரி உள்ளிட்ட தமிழக நிலப் பகுதிகள் ஆந்திரப்பிரதேசத்தில் சேர்க்கப்பட்டன. கோலார் தங்கவயல், கொள்ளே காலம் போன்ற தமிழகப்பகுதிகள் கர்நாடகத்துடன் சேர்க்கப்பட்டன. மூணாறு, தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, கொச்சின் சித்தூர், செங்கோடை வனப்பகுதி போன்ற தமிழர் தாயகப்பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. காவிரி , முல்லைப்பெரியாறு, பாலாறு ஆகியவற்றின் உரிமைகள் அண்டை மாநிலங்களால் பறிக்கப்பட்டன.
 
இந்திராகாந்தி தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவைப் பிடுங்கி சிங்கள அரசிடம் கொடுத்தார்.சிங்களப்படை அன்றாடம் தமிழக மீனவர்களைச் சுட்டுக்கொல்கிறது. உலகமயம் என்ற பெயரில் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்குத் தமிழ்நாட்டைத் திறந்துவிட்டுள்ளது இந்தியா. ஏற்கெனவே, மார்வாரி, குசராத்தி சேட்டு முதலாளிகளின் ஆதிக்கத்தில் தமிழகப் பொருளியல் சீரழிகிறது. தமிழக வேலைவாய்ப்புகளை மலையாளிகளும் வடநாட்டாரும் கைப்பற்றிக்கொண்டுள்ளனர்.
 
"இந்திய தேசியம்" என்ற இல்லாத தேசியம் இதற்கெல்லாம் கதவு திறந்துவிடுகிறது.மனித அழிப்பு ஆபத்து நிறைந்த அணுமின் உலைகளை மிகுதியாகத் தமிழ் நாட்டில் திறக்கிறது இந்தியா .எடுத்துக்காட்டு கூடங்குளம்! எல்லாக்கொடுமைக்கும் சிகரம் வைத்ததுபோல் இந்திய அரசு இலங்கை இனவெறி அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஈழத்தில் தமிழினத்தை அழித்தது. தொடர்ந்து தமிழின அழிப்பில் அங்கு ஈட்டுபட்டும் வருகிறது.
 
எல்லா உரிமைகளையும் இழந்து இன அழிப்புக்கும் உள்ளான தமிழர்கள், வெள்ளை அரசின் கொடுமையைவிட அதிகமான கொடுமைகளையே இந்திய அரசின் கீழ் சுமக்கிறார்கள். இந்தி மற்றும் ஆங்கில ஆதிக்கத்திற்கு சட்ட ஏற்பு இருக்கிறது. தமிழ்மொழிக்கு அரசமைப்புச் சட்டப்படி ஆட்சி மொழி உரிமை இல்லை. தமிழர்களின் அரசுரிமையைப் பறித்துக்கொண்டு ஒரு கங்காணிச் சட்டபேரவையை "ஆட்சிமன்றம்" என்ற பெயரில் தமிழ்த்தேசிய இனத்தி;ற்கு இந்தியா கொடுத்துள்ளது.
 
தில்லியின் விசுவாச ஊழியராக விளங்கும் தமிழக முதல்வர் , கலைஞர் கருணாநிதி கூட "நானே ஒரு அடிமை, நான் இன்னொரு அடிமையான ஈழத்தமிழனுக்கு எப்படி உதவ முடியும்" என்று அண்மையில கேட்டார். தமிழ்த்தேசிய இனம் சுமக்கும் அடிமை நிலையின் அளவைப் புரிந்துகொள்ள இவர் கூற்றும் ஒரு சான்று. தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் இறையாண்மையை மீட்டுத் தமிழ்தேசக் குடியரசு நிறுவப்பட்டால்தான், தமிழ்மக்கள் தங்களின் பறிபோன உரிமைகளை முழுமையாகவும் இறுதியாகவும் மீட்கமுடியும். காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, பவானி, மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக எல்லைப் பகுதியில் உற்பத்தியாகும். ஆறுகள், கச்சத்தீவு முதலியவற்றில் நாம் பறிகொடுத்துள்ள உரிமைகளை மீட்க, தமிழகமெங்கும் முதற்கட்டமாக தமிழ்த்தேசிய எழுச்சி நாள் ஒன்றைக் கடைபிடிக்கவேண்டும் என்று இம்மாநாடு தமிழ் மக்களைக் கேட்டுக்கொள்கிறது.
 
தமிழ்த்தேசிய எழுச்சி நாளில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தெரு முனைக்கூட்டங்கள், கலை நிகழ்வுகள் ,பல்வேறு வடிவங்களில் பரப்புரைகள் எனச் செயல்படுமாறு மாநாடு கேட்டுக்கொள்கிறது. தோழமை இயக்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் இன உணர்வாளர்கள் ஆகிய அனைவரும் கூட்டாக இவ்வெழுச்சி நாளைக் கடைபிடிக்க முன்முயற்சிகள் எடுக்க வேண்டும். திருவள்ளுவராண்டு ஆவணிமாதம் நான்காம் நாள், அதாவது 2009ஆகஸ்டு மாதம் 20-ஆம் நாள் வியாழக்கிழமை தமிழ்த்தேசிய எழுச்சி நாள் கடைபிடிக்கப்படும் என்று தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு தீர்மானிக்கிறது. ஏற்கெனவே நம்முன்னோர்கள் - அரசியல் தலைவர்கள், தமிழறிஞர்கள், விடுதலைப் போராளிகள், இன உணர்வுமிக்க இளைஞர்கள் தமிழ்த்தேசிய உரிமைகளுக்காக பலவாறு போராடியிருக்கிறார்கள். உயிர் ஈகம் செய்துள்ளார்கள். கடந்த காலச் சாதனைகளிலிருந்து வீரம்பெற்று, கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்று, திசையைத் தீர்மானித்துக்கொண்ட, தமிழ்த்தேசியத்தின் புதிய தொடக்கமாக தமிழ்த்தேசிய எழுச்சி நாள் அமையட்டும்! வெல்வோம!
 
தீர்மானம் 2: ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளில் இருந்து இலங்கை அரசை நீக்க வேண்டும் ஐ.நா.மன்றமே அப்பணிகளைச் செய்யவேண்டும்!
 
தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கிட ஈழத் தமிழ் இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள இனவெறி அரசுக்கு, படை, பணம், அரசியல் வழிப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்து மனித அழிப்புப்போரில் பங்குகொண்ட இந்திய அரசை தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. கடந்த மே 16,17,18 நாட்களில் மட்டும் 45ஆயிரம் தமிழர்களும் விடுதலைப் போராளிகளும் சிங்களப்படை ஏவிய பாஸ்பரஸ் குண்டு வீச்சிலும், கொத்துக் குண்டு வீச்சிலும் கொல்லப்பட்டனர். இவ்விருவகைக் குண்டுகளும் ஐ.நா.மன்றத்தாலும் பன்னாட்டுச் சமூகத்தாலும் தடைசெய்யப்பட்டவை. மூன்றரை இலட்சம் தமிழர்களைச் சிங்கள அரசு முள் கம்பிவேலி வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.
 
ஒரு தேசத்தையே அழிக்கும் குருதி வெறிகொண்டு அலையும் சிங்கள நாஜி அரசுக்கு இந்திய ஏகாதிபத்தியம் மட்டுமின்றி சீனா, ரசியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் போர்க்கருவிகளை வாரி வாரி வழங்கின. போர் விதிமுறைகளைப் புறந்தள்ளி, தமிழ் மக்களைக் கூட்டங்கூட்டமாக இனப்படுகொலை செய்த இலங்கையின் குடியரசுத்தலைவர் இராசபட்சேயும் அவரது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் போர்க்குற்றவாளிகள் ஆவர். ஈழத்தமிழின அழிப்புப்போரில், அரசுப்படைகளோ, விடுதலைப்புலிகளோ, யார் போர் விதிமுறைகளை மீறியிருந்தாலும் அவர்களை விசாரிக்க இலங்கை அரசு ஒரு குழு நியமிக்கவேண்டும் என்று சுவிட்லார்ந்து முன் மொழிந்த தீர்மானத்தைக்கூட ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் எதிர்த்து வாக்களித்தது இந்தியா.
 
கம்ய+னிஸ்ட் கியுபாவும், இடதுசாரி அரசுகளைக் கொண்டுள்ள பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளும், கம்ய+னிச முகமூடி போட்டுக்கொண்டுள்ள புதிய ஏகாதிபத்தியமான சீனாவும் கூட அந்தத் தீர்மானத்தை எதிர்த்தன. வியட்நாம் சிங்கள அரசை ஆதரித்து வருகிறது. நிலக் கோளத்தில் பத்து கோடித் தமிழர்கள் வாழ்ந்தும் நமக்கென்று ஒரு நாடு இல்லாததால் பன்னாட்டு அரசியலில் தமிழர்கள் அனாதைகளாகவே உள்ளனர். தமிழகத்தில் 6.1ஃ2 கோடி மக்கள் வாழ்ந்தும் தமிழகத்திற்கென்று இறையாண்மையோ, தேசமோ இல்லை. தமிழர்களுக்கு இறையாண்மையுள்ள நாடு வேண்டும்.
 
சிங்கள அரசு தமிழர்களை அடைத்து வைத்துள்ள வதை முகாம்களில் ஒரு வாரத்திற்கு 1400 தமிழர்கள் சாகிறார்கள் என்று இலண்டனிலிருந்து வெளிவரும் 'டைம்ஸ்' ஏடு கணக்கிட்டுள்ளது. நோயினால், பட்டினியால் சாவோரும், சிங்களப் படையாட்களால் சுட்டுக் கொல்லப்படுவோரும் இவ்வெண்ணிக்கையில் அடக்கம். இப்படியே போனால் எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களும் அழிந்துபோவார்கள். சிங்கள -இந்திய அரசுகளின் விருப்பம்போல் ஈழத்தமிழினம் முற்றாக ஒழிக்கப்பட்டு விடும். இந்த மனித அழிவைத் தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா. மன்றத்தையும்,பன்னாட்டுச் சமூகத்தையும் தலையிட வைப்பதே இப்பொழுது நம்முன் உள்ள உடனடிக் கடமை. மனிதப் பேரழிவைத் தடுக்கும் மனச்சான்றுடன், தமிழ்நாடெங்கும் போராட்டங்கள் பெருவீச்சில் நடைபெற வேண்டும்.
 
போராட்டக் கோரிக்கைகள்:-
 
1.போர்க் குற்றவாளிகளான மகிந்த இராசபட்சே - கோத்தபய- பொன்சேகா ஆகியோரை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும். அவர்களோடு கூட்டுச் சேர்ந்து போர்க்குற்றத்தில் ஈடுபட்ட மன்மோகன்சிங், ஏ.கே. அந்தோணி ஆகியோரையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
 
2. ஈழத்தமிழர் துயர் துடைப்புப் பணிகளிலிருந்து இலங்கை அரசை முற்றிலும் விலக்கிவிட்டு, ஐ.நா.மன்றமும், பன்னாட்டுச் சமூகமும் மட்டுமே அப்பணிகளைச் செய்யவேண்டும்.
 
3. வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் அனைவரையும் விடுவித்து அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
 
4. ஈழத்தமிழர் தாயகப்பகுதிகளான வடக்கு, கிழக்கு மாநிலங்களில் சிங்களர்களைக் குடியேற்றுவதை ஐ.நா.மன்றமும் பன்னாட்டுச் சமூகமும் தடுக்க வேண்டும்.
 
5. 'வடக்கில் வசந்தம்' என்ற பெயரில் இந்தியாவின் ஆரிய நாஜிகளான என்.ராம் - எம்.எஸ்.சாமிநாதன் குழுவினர்; ஈழத் தமிழர் வேளாண்மை, தொழில் மற்றும் வணிகத்தில் தலையிடுவதைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
 
தீர்மானம்: 3 தமிழகத்தில் மூன்றாண்டு வசித்துள்ள ஈழத்தமிழ் ஏதிலியருக்குக் குடியுரிமை வழங்க வேண்டும்.
 
தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் முகாம்கள், சிறைச்சாலைகளை விடவும் மோசமானவை. சிறைச்சாலைகளில் உள்ள துப்புரவு, குடிநீர், கட்டடப்பாதுகாப்பு, மருத்துவம், உணவு போன்ற உறுதிப்பாடுகள் எதுவும் இந்த முகாம்களில் இல்லை. இவர்களுக்கான உதவித்தொகை மிகமிகக் குறைவாக உள்ளது. இவர்கள் சுதந்திரமாக வெளியே போய் வர அனுமதிப்பதில்லை. இவர்களை மற்றவர்கள் முகாம்களில் போய் எளிதில் சந்திக்க முடியாது. காவல் கெடுபிடிகள் அதிகம். முகாம்களுக்கு வெளியே வாடகை வீடுகளில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர் அவலம் அதிகம். அவர்கள் காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். வீடு மாறினால் அதற்குரிய காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் .
 
இவ்வாறான பதிவுக்கும் ஏதாவது சான்றிதழ் வாங்க வேண்டுமெனில் அதற்கும் காவல்நிலையத்தில் கைய+ட்டு கொடுக்க வேண்டியுள்ளது. இந்திய அரசும், தமிழக அரசும் திபேத்திய ஏதிலியரை நடத்துவதுபோல் ஈழத்தமிழ் ஏதிலியரையும் கண்ணியமாகவும், நாகரிகமாகவும் நடத்த வேண்டும். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குக் கிடைக்கும் உரிமைகள் அனைத்தையும் இவர்களுக்கு வழங்கவேண்டும். ஐ.நா. அமைப்பு ஏதிலிகளுக்கு அறிவித்துள்ள உரிமைகளை ஈழத்தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும். மூன்றாண்டுகளுக்கு மேல் தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத்தமிழ் ஏதிலியர் விரும்பினால் அவர்களுக்கு இங்கு குடியுரிமை வழங்கவேண்டும். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
இப்பொழுது, ஏதிலியர் முகாம்களில் குடும்பத் தலைவராக உள்ள ஆணுக்கு 1 மாதத்திற்கு ரூ.400 என்றுள்ள உதவித்தொகையை ரூபாய் ஆயிரமாக உயர்த்த வேண்டும். குடும்பத்தலைவிக்கு இப்பொழுதுள்ள ரூ.288 மாத உதவித்தொகை ஆயிரமாக உயர்த்த வேண்டும். 13 வயதுக்குள் உள்ள பிள்ளைகளுக்குத் தலைக்கு ரூ.180 என்றுள்ள மாத உதவித்தொகையை ரூ.500 ஆக்க வேண்டும். 13-வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் அனைவர்க்கும் ரூ.288 ஆக உள்ள மாத உதவித்தொகையை ரூபாய 800 ஆக உயர்த்தவேண்டும். அவர்கள் அனைவர்க்கும் புதிய கான்கிரீட் - வீடுகள் கட்டித்தர வேண்டும்;. தட்டுப்பாடில்லாத குடிநீர் வசதி, துப்புரவு வசதி ஆகியவை செய்துதர வேண்டும. ஏதிலியர் முகாம் ஒவ்வொன்றிலும் அவர்களுக்கென்று தனி மருத்துவமனை இருக்க வேண்டும். சிறப்பு முகாம் என்று பெயரிட்டுள்ள சிறைச்சாலைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும். அவற்றில் உள்ளவர்களை அவரவர் விரும்பும் நாட்டிற்கோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள ஏதிலியர் முகாமுக்கோ அனுப்பி வைக்கவேண்டும்.
 
மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமாறு இந்திய அரசையும்,தமிழக அரசையும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
 
தீர்மானம் : 4 : ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடியோர் - பேசியோர் மீது போட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும்.
 
தமிழ்நாட்டில் தமிழ் இன உணர்வாளர்களுக்கெதிரான ஒரு சார் நெருக்கடி நிலை (Selective Emaergency) உள்ளது என்றே கருதவேண்டியுள்ளது. ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கக் குரல் கொடுப்போரையும் தமிழ் இன உணர்வு அடிப்படையில் பேசுவோரையும் - ஈழத்தமிழர்களைப் பாதுகாக்கப் போராடுவோரையும் தமிழக அரசு, ஆள் தூக்கிச் சட்டங்கள் பயன்படுத்தியும,; காலனி ஆட்சியாளர்கள் தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள போட்ட பழைய சட்டப்பிரிவுகளைப்; பயன்படுத்தியும் சிறையில் அடைக்கின்றது. பொதுக்கூட்டங்களில் பேசியதற்காக பலரைச்சிறையில் அடைத்ததும், சிலருக்குத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவியதும் நாடறியும். போர்நிறுத்தம் கோரி போராடிய பலரைக் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு அடைத்தது.
 
ஈழத்தமிழர்களை அழிக்கும் போருக்காக இந்திய அரசு தமிழகத்தின் வழியாக ஆயுதங்கள் அனுப்பி வருகிறது. ஒரு தடவை கோவை நீலாம்ப+ர் அருகே அவ்வாகனங்கள் செல்வதை எதிர்த்து சாலை மறியலில் உணர்வாளர்களும், பொதுமக்களும் ஈடுபட்டனர். இதற்காக தோழர் கோவை இராம கிருட்டிணன் (பெரியார் தி.க. பொதுச்செயலாளர்) உள்ளிட்ட தோழர்களை ஆள் தூக்கி சட்டமான தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் சிறைவைத்துள்ளனர.; மற்றும் 40 பேர்க்கு மேற்பட்டோரை, மிக மோசமான சட்டப்பிரிவுகளில் சிறை வைத்துள்ளனர்.
 
இந்திய அரசு - இலங்கையுடன் இணைந்து ஈழத்தமிழர்களுக் கெதிரான இன அழிப்புப்போர் நடத்துவதைக் கண்டித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஆகியவை இந்திய - இலங்கை அரசுக்கொடிகளை எரிக்கும் போராட்டம் நடத்தின. போராட்டத்தில் கலந்துகொண்டோர் பிணை மறுப்பு வழக்கில் சிறைப்படுத்தப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, பிணை வழங்குவதற்கு, இந்திய அரசுக்கொடியை அவரவர் வீட்டில் ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அத்துடன் அனாதை இல்லத்தில் சேவை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
 
அடிப்படை மதவாதிகளும், சில நாட்டாண்மைகளும் வழங்கும் தீர்ப்பு போல் இது உள்ளது. தமிழ்த் தேசப்பொதுவுடைமைக்கட்சி தோழர் தமிழரசன் அவர்களும், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத் தோழர் பாரதி அவர்களும், மேற்கண்ட மனித உரிமைக்கு எதிரான நிபத்தனைகளை ஏற்க மறுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இன்னும் கோவை நடுவண் சிறையில் உள்ளனர்.
 
இவையெல்லாம், தமிழ்நாட்டில் தமிழ் இன உரிமைக்கும் உணர்வுக்கும் எதிராக நிலவும் சனநாயக மறுப்புச் சூழலைக் காட்டுகின்றன. தமிழ் இன உணர்வாளர்கள்- இந்த அடக்கு முறைகளுக்கு அஞ்சாமல் போராடவேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. தமிழக அரசு, தனது தமிழின எதிர்ப்புப் போக்கைக் கைவிட வேண்டும் என்றும், தமிழின உணர்வாளர்களின் கருத்துரிமை மற்றும் போராட்ட உரிமை ஆகியவற்றைத் தடை செய்யக்கூடாது என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. ஈழத்தமிழர்களைப் பாதுகாப்பதற்காக போராடியோர், பேசியோர் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் இது தொடர்பாக சிறையில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

புதன், 15 ஜூலை, 2009

திருச்சியில் எழுச்சியுடன் நடந்த "தமிழ்த்தேசியம் - சிறப்பு மாநாடு" (படங்கள்)
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் திருச்சியில் நேற்று(12.07.09) நடத்தப்பட்ட "தமிழ்த் தேசியம் - சிறப்பு மாநாடு" சிறப்பாக நடந்தேறியது. தமிழினத்தின் தேசிய எழுச்சியை ஒரு எழுச்சி நாளாக கடைப்பிடிக்க வேண்டும், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஈழ உணர்வாளர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகளுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.



ஓவியங்கள் மற்றும் புகைப்படக் காட்சி

பாவலர் சமர்ப்பா குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் காலை 9 மணியளவில் மாநாடு தொடங்கியது. அதன் பின்னர், ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கண்காட்சி நடந்தது. இதனை தணிக்கை அறிஞர் மு.குமரசாமி அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் ஓவியர்கள் கவிபாஸ்கர், ஆவுடி கண்ணன், திருமலை, க.ஆனந்த் ஆகியோரின் ஓவியங்கள் மற்றும் புகைப்படக் கலைஞர் நியாஸ் அகமது அவர்களின் புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஈழத்தமிழர் படும் அவலங்களை காட்சிப்படுத்தும் படங்கள் அரங்கம் முழுவதும் வைக்கப்பட்டிருந்தன. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசிய அரங்கு

காலை 10.30 மணியளவில் தமிழ்த் தேசிய அரங்கு என்ற பெயரில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியிள் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் இக்கருத்தரங்கிற்குத் தலைமை தாங்கி பேசினார். ஈழத்தில் இன அழிவிற்கு முழு முதற் காரணமான இந்திய அரசே தமிழினத்தின் முதற்பகை என்பதை விளக்கினார்.

பின்னர் "உலகமயமும் தமிழ்த் தேசியமும்" என்ற தலைப்பில் தோழர் ம.செந்தமிழன் பேசினார். ஈழத்தில் நடந்த இன அழிவிற்கு உலகமய நாடுகள் எப்படி காரணமாக விளங்கின என்பது பற்றியும் உலக நாடுகளின் சதிகள் பற்றியும் அவர் விளக்கினார். அவருக்குப் பின், "மொழிக் கொள்கை" குறித்து முனைவர் அரசேந்திரன் பேசினார். தமிழ்த் தேசியத்தின் மொழிக் கொள்கை ஒரு மொழிக் கொள்கையே என்றும் இருமொழிக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவை மோசடிகள் என்றும் அவர் விளக்கினார். அதன் பின்னர், மயிலாடுதுறை பேராசிரியர் த.செயராமன் "இழந்த நில, நீர் உரிமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

கருப்புக் குரல் நாடகம்

(ஓவியர் புகழேந்தி உரையாற்றும் பொழுது)

(கருப்புக் குரல் நாடகத்திலிருந்து....)

(கருப்புக் குரல் நாடகத்திலிருந்து....)

பிற்பகல் 1.30 மணியளவில் தமிழீழத் திரைப்பட உதவி இயக்குநர்கள் அமைப்பு நடத்திய கருப்புக்குரல் கலை நிகழ்வு நடைபெற்றது. ஓவியர் புகழேந்தி அவர்கள் இந்நிகழ்வை தொடங்கி வைத்தார். பாடலுடன் தொடங்கிய இந்நாடகத்தில் ஓட்டு அரசியல்வாதிகளின் முகத்திரைக் கிழிக்கும் வண்ணம் காட்சியமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்நாடகத்தை திரு. ஐந்து கோவிலான் இயக்கியிருந்தார். வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தமிழர்களின் நிலையை காட்சிப்படுத்தியிருந்த விதம் பார்வையாளர்களை துக்கத்தில் ஆழ்த்தியது.

கலை நிகழ்ச்சி

(கலை நிகழ்ச்சியிலிருந்து....)

இதன் பின்னர், அரியமங்கலம் இலெட்சுமி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய கலை நிகழ்ச்சி நடந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய "சங்கே முழங்கு" பாடலுக்கு மாணவர்கள் நடனமாடினர்.

பாவீச்சு

(கவிஞர் கவித்துவன் பாவீச்சு நடத்துகிறார்...)

(கவிஞர் கவிபாஸ்கர் கவிதை வாசித்த பொழுது...)

இந்நிகழ்விற்குப் பின்னர், பல்வேறு கவிஞர்கள் பங்கு கொண்ட கவியரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வை "திருக்குறள்" முருகானந்தம் அவர்கள் தொடங்கி வைத்தார். கிறார். இப்பாவீச்சில், பாவலர்கள் தமிழேந்தி, கவித்துவன், கவிபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கவிதைகள் வாசித்தனர்.

படத்திறப்பு
அதன் பின்னர், அண்மையில் காலமான புதுச்சேரியைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களது திருவுருவப்படத் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி செந்தமிழர் இயக்க அமைப்பாளர் தோழர் ந.மு.தமிழ்மணி அவர்கள் இந்நிகழ்விற்கு தலைமை தாங்கினார். திருமுருகனாரின் சிறப்பான குணங்களையும் தமிழ் இலக்கணத்தில் அவரது அறிவாற்றலையும் விளக்கி அவர் பேசினார். குடந்தைத் தமிழ்க் கழகத்தின் அமைப்பாளர் தோழர் சா.பேகன் அவர்கள் படத்தை திறந்து வைத்து உரை நல்கினார்.

கொடி எரிப்பில் சிறை சென்ற தோழர்களுக்கு பாராட்டு

(மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி உரையாற்றும் போது...)



 
(கொடி எரிப்பில் சிறை சென்ற தஞ்சை த.தே.பெ.க. நகரச் செயலாளர்
பழஇராசேந்திரன் அவர்கள் பாராட்டப்பட்ட போது...)

இந்நிகழ்விற்குப் பின், ஈழத்தில் தமிழின அழிப்புப் போரில் ஈடுபட்டுள்ள இந்திய - சிங்கள கூட்டுப் படையினரைக் கண்டித்து இந்திய இலங்கைக் கொடிகளை எரித்து சிறைக்கு சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. மொழிப்போர் ஈகி ப.பெரியசாமி அவர்கள் தோழர்களுக்கு பாராட்டுப் பத்திரங்கள் வழங்கி சிறப்பித்தார்.

தீர்மானங்கள் முன்மொழிவு
(தோழர் கோ.மாரிமுத்து தீர்மானங்களை முன் வைக்கிறார்...)


 
(தோழர் மதுரை ஆனந்தன் தீர்மானங்களை முன் வைக்கிறார்...)


 
(தோழர் குழ.பால்ராசு தீர்மானங்களை முன் வைக்கிறார்...)

மாநாட்டுத் தீர்மானங்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு அவர்கள் படித்தார். முதல் தீர்மானத்தை த.தே.பொ.க. மேற்கு மண்டலச் செயலாளர் தோழர் கோ.மாரிமுத்து படித்தார். இரண்டாம் தீர்மானத்தை மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் ஆனந்தன் வாசித்தார். மூன்றாம் தீர்மானத்தை சிதம்பரம் நகர த.தே.பொ.க. செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வாசித்தார். தீர்மானங்கள் பலத்த கருவொலியுடன் நிறைவேற்றப்பட்டன.

"தமிழீழ அரங்கு" - கருத்தரங்கம்

இதன் பின்னர், தமிழீழப் பிரச்சினை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு "இப்படிக்கு" இதழின் ஆசிரியர் வீ.ந.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில், கொலைகாரக் கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியை பற்றியும் ஈழத்திற்கு இந்தியத் தேசியம் விளைவித்த தீமைகள் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.

(முனைவர் வீ.ந.சோமசுந்தரம் பேசுகிறார்...)

 
(தோழர் க.அருணபாரதி பேசுகிறார்...)

 
(தோழர் கண.குறிஞ்சி பேசுகிறார்...)

இதன் பின்னர், "ஈழத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் தோழர் க.அருணபாரதி பேசினார். "தமிழ்த்தேசியம் என்ற கருத்தியலே ஈழத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்கும் உதவும் கருத்தியல்" என்பதை சாரமாகக் கொண்டு அவரது பேச்சு அமைந்திருந்தது. "இந்தியமும் ஈழமும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் த.பானுமதி அவர்கள் உரைநல்கினார். இந்தியத்தேசிய மாயையிலிருந்து தமிழர்கள் விடுபட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதாக அவரது பேச்சு அமைந்திருந்தது. "ஈழமும் உலகநாடுகளும்" என்ற தலைப்பில் மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் தோழர் கண.குறிஞ்சி அவர்கள் ஈழத்தில் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் வாழ்நிலையை பற்றியும், உலக நாடுகள் ஈழப்பிரிச்சினையில் அக்கறை கொள்ளாதது பற்றியும் கருத்துரையாற்றினார்.

நிறைவரங்கம்

(நிறைவரங்க மேடையில் தலைவர்கள்...)

மாலை 7 மணியளவில் நிறைவரங்கம் தொடங்கியது. இந்நிகழ்விற்கு பாவலர் பரணர் அவர்கள் தலைமை தாங்கினார்.

(பாவலர் பரணர் பேசிய பொழுது...)


(தோழர் அமரந்தா பேசிய பொழுது...)

 
(தோழர் நா.வைகறை பேசிய பொழுது...)


 
(தோழர் மதுரை அருணா பேசிய பொழுது...)

தமிழக இளைஞர் முன்ணனி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை அவர்கள் தமிழ்த்தேசியமே இனி எதிர்கால வரலாற்ரைறத் தீர்மானிக்கும் என்று பேசினார். லத்தீன் அமெரிக்க நட்புறவுக் கழகத் தலைவரும், மார்க்சிய எழுத்தாளருமான தோழர் அமரந்தா ஈழப்பிரச்சினையில் தவறான முடிவெடுத்த லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் அது குறித்து நடந்த கலந்துரையாடல்களைப் பற்றி பேசினார். மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா அவர்கள் தமிழ்த் தேசியத்தில் பெண்களின் பங்கு குறித்து விளக்கிப் பேசினார்.


(தோழர் கொளத்தூர் மணி பேசிய பொழுது...)

 
(தோழர் தியாகு பேசிய பொழுது...)

சிறப்புரையாக, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் தா.செ.மணி அவர்கள் உரையாற்றினார். பின்னர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு அவர்கள் தமிழ்த்தேசியம் சாத்தியமே என்ற சாரத்தில் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்.


(தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றுகிறார் ...)

மாநாட்டின் நிறைவாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சியுரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன் நன்றி கூறினார்.

மாநாட்டு ஏற்பாடுகளை திருச்சி மாநகர த.தே.பொ.க. அமைப்பாளர் தோழர் கவித்துவன் மற்றும் திருச்சி மாநகர தமிழ்க் கலை இலக்கியப் பேரவை அமைப்பாளர் தோழர் இராசாரகுநாதன், தி.மா.சரவணன், பி.ரெ.அரசெழிலன் உள்ளிட்ட பலரும் முன்னின்று சிறப்புற செய்திருந்தனர்.


--~--~---------~--~----~------------~-------~--~----~
------------------------------------------------------------------------------------------------------------------------------
                                    இளந்தமிழர் இயக்கம் -  கூகிள் குழுமம்

இணையதளம் : http://www.elanthamizhar.blogspot.com
மின்னஞ்சல் : elanthamizhar@gmail.com

குழுமத்தை பார்க்க : http://groups.google.com/group/elanthamizhar
மடல்கள் அனுப்ப : elanthamizhar@googlegroups.com
குழுமத்திலிருந்து விலக : elanthamizhar+unsubscribe@googlegroups.com
------------------------------------------------------------------------------------------------------------------------------
-~----------~----~----~----~------~----~------~--~---




--
Thanks and Regards...
                          K.ANAND B.Sc(Agri).,
                          145,Aravindar street,
                          pondicherry- 605001.
                          +91 9940800358
                     anand_1028@yahoo.co.in