செவ்வாய், 28 ஏப்ரல், 2009

இளந்தமிழர் இயக்கத்தின் துண்டறிக்கை பற்றி ”தினமலர்” மீண்ட...


ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசிற்கு காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு உதவி வருகின்றது. இதனை கண்டித்தும் தமிழினத் துரோகக் காங்கிரஸ் கட்சியை தமிழிகத்திலிருந்து விரட்டும் நோக்கிலோம் வருகின்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரசுக்கு தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என்று இளந்தமிழர் இயக்கம் பிரச்சாரம் செய்து வருகின்றது.

மாவீரன் முத்துக்குமாரை யாரென்று ஏளனம் செய்த தமிழினத் துரோகி ஈரோடு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கண்டிக்கும் வகையில் ஈரோட்டில் இளந்தமிழர் இயக்கம் சார்பில் ஒரு நிகழ்ச்சி ஏற்படாகி அதற்கான துண்டறிக்கை மக்களிடம் கொடுக்கப்பட்டது. அத்துண்டறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


இத்துண்டறிக்கையையும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள
துண்டறிக்கையையும் இணைத்து "தினமலர்" ஆட்காட்டி உள்நோக்கத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி பின்வருமாறு கூறுகிறது :

இளங்கோவனை கிண்டல் செய்து பிரசுரம் : தமிழ் அமைப்புகள் செயலால் காங்., எரிச்சல்
தினமலர், ஏப்ரல் 25,2009,20:31 IST

ஈரோடு : இளங்கோவனைக் கேலி செய்து 'பயோ-டேட்டா' வடிவில் ஈரோடு முழுவதும் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்கள் காங்கிரசாருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் மதுபாட்டிலுடன் நடனமாடுவது போல் கேலிச்சித்திரம் வரைந்து, ஈரோடு முழுவதும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.'கருணாநிதியின் 'டாஸ்மாக்'கும்; குடிப்பழக்கத்தால் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஞாபகமறதியும்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த துண்டுப் பிரசுரத்தில் உள்ள பயோ-டேட்டா வருமாறு:

பெயர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
ஊர்: பிறப்பால் கன்னடன்; பிழைப்பது தமிழகத்தில்.
பதவி: மத்திய மந்திரி.
தொழில்: குடிப்பழக்கத்தால் மறந்துவிட்டது.
பிடிக்காதது: தமிழர்கள்.
பிடித்தது: எல்லா வகை மதுபானங்களும்.
மறந்தது: தோழர் முத்துக்குமாரின் தியாகம்.
மறக்காதது: தமிழர்களுக்குத் துரோகம்.
சொத்து: சோனியாவின் செருப்பு.
கோபப்படுவது: கருணாநிதியின் நடிப்பு.
பொழுதுபோக்கு: உட்கட்சி மோதல்; சுவரொட்டிகள் கிழிப்பது.
பட்டப்பெயர்: தமிழனத் துரோகி.
சாதித்தது: ஈரோட்டில் 'சீட்' வாங்கியது.
எதிர்பார்ப்பது: மீண்டும் பதவி.
நடக்கவிருப்பது: 'டிபாசிட்' இழப்பு.

தமிழக மக்களே... 'காங்கிரசை ஒழிப்பதே என் முதல்பணி' என முழங்கிய பெரியார் பிறந்த மண்ணில் வாழும் ஈரோடு வாழ் மக்களே... உங்கள் ஓட்டுக்களை இளங்கோவனுக்கு வாய்க்கரிசியாய் மாற்றுங்கள்!இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 'சாணிப்பால் தெளித்து பழைய செருப்பால் அடிக்கும் முகாம்' என்ற தலைப்பில், 'இளந்தமிழர் இயக்கம்' சார்பில் வினியோகிக்கப்பட்டுள்ள மற்றொரு துண்டுப் பிரசுரத்தில் கூறியிருப்பதாவது:வழிப்பறி செய்தல், கொள்ளையடித்தல், கன்னம் வைத்து திருடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோரை தமிழர்கள் கழுதை மேல் உட்காரவைத்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி பழைய செருப்பால் அடித்து ஊர்வலம் விடுவது வழக்கம்.அன்று தமிழ் மக்களுக்குப் பல்வேறு இடையூறு செய்த கன்னட சாளுக்கிய மன்னன் மீது, ராஜராஜ சோழன் படை எடுத்து, மராட்டியம் வரை துரத்தி அடித்தான்.தமிழக மீனவர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் உயிர்த்தியாகம் செய்த, 'தோழர் முத்துக்குமாரை' - அவன் யார் என்று கேட்ட கன்னடன் இளங்கோவன் தமிழினத்துக்கே துரோகம் செய்கிறான்.'முத்துக்குமார் யார்?' எனத் தெரியாத இளங்கோவனுக்கும், மற்றவர்களுக்கும் நினைவுத்திறன் வளர, மறக்காமல் இருக்க சாணிப்பால் தெளித்து, செருப்பால் அடிக்கும் முகாம், ஈரோட்டில் ஏப்., 25 மாலை 5 மணிக்கு பன்னீர்செல்வம் பூங்காவில் நடைபெறும். குறிப்பு: தமிழர்கள் பழைய செருப்புகளை பத்திரமாக வைத்திருந்து முகாம் நடைபெறும் நாளில் அதை கொண்டு வரவும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுபோல், பல்வேறு நோட்டீஸ்கள் அச்சிடப்பட்டு நகர் முழுவதும் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காங்கிரசார் எரிச்சலடைந்துள்ளனர். 'இருக்கிற தலைவலி போதாதென்று இதுவேறயா' என போலீசாரும் புலம்பி வருகின்றனர்

இணைப்புப
தினமலர் இணையதளச் செய்தி :



--
Posted By இளந்தமிழர் இயக்கம் to இளந்தமிழர் இயக்கம் at 4/27/2009 11:24:00 PM



கருத்துகள் இல்லை: