வெள்ளி, 30 மார்ச், 2007

சிங்கள வெறியர்களின் இனவெறியாட்டம்

சிங்கள வெறிநாய்களின் இனவெறியாட்டம்::
தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி


 

Tamilwin.com சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
சிங்கள கடற்படையினலின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவரை காப்பாற்றத் தவறிய இந்திய கப்பற்படைக்கும், டில்லி ஏகாதிபத்தியத்திறகும் எமது கடுமையான கண்டனங்கள்...


--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
       க.அருணபாரதி
   www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------

கருத்துகள் இல்லை: