புதன், 14 மார்ச், 2007

கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்

கார்ல் மார்க்ஸ் (கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ், Karl Heinrich Marx, மே 5, 1818, ஜேர்மனிமார்ச் 14 , 1883, லண்டன்) ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.

மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.

பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.




கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அன்னாரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தை தருகிறது.

நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதல்ல. எனக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்க்ளும் விபரித்துவிட்டார்கள். நான் புதிதாக செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்

1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.

2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.

3. இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவிற்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும்.

- மார்ச் 5, 1852 Weydemeyer க்கு எழுதப்பட்ட கடிதம்


கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆவார்.

[ தொகு] வாழ்க்கைக்குறிப்பு

கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒரு யூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார்.

பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.

1841 இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சிலகாலம் பத்திரிகைத்துறையில் இருந்தார். சிறிது காலத்திலேயே ஜனவரி 1, 1843இல் தடைக்குள்ளான றைனிஷ் ஸைற்றுங் எனும் எதிர்க்கட்சி செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.

இக்காலப்பகுதியில் லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகள்ளான் 21 வயதுடைய ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதலுறவு ஏற்பட்டது. இதன்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக்குடும்பத்தைச்சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் தமது காதலை இரகசியமாக வைத்திருந்து ஜெனிக்கு 29 வயதாயிருந்தபோது அவரை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.

பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே ஒவ்வொன்றினதும் புரட்சிகர இயக்கங்களில் பங்குபற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ், 1843இற்கும் 1849 இற்கும் இடையே புலம் பெயர்ந்த வாழ்க்கையினை வாழ்ந்தார்.

1849 ஓகஸ்ட் 24 இல் பிரான்சில் உள்ள பிறிற்றனியில் சதுப்பானதும் உடல் நலத்துக்கு ஒவ்வாததுமான இடமொன்றுக்கு நாடுகடத்துமாறான பிரேஞ்சு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிய மறுத்து லண்டனுக்கு சென்று குடியேறி 35 ஆண்டுகளான தனது சீவியகாலத்தின் மிகுதியை அங்கேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் அகதிகட்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெருமெடுப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான பிரித்தானிய மியூசியத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்ஸ் நாள் தவறாது அங்கு சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்கு செலவிட்டு வந்தார். அங்கேதான் மூலதனம் எனும் நூல் தோற்றம் பெற்றது.

மார்க்ஸ், ஏங்கல்சை 1844 ஓகஸ்ட் 28க்கும் செப்டெம்பர் 6க்கும் இடையே பாரிசில் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவரும் தம்மிடையே நட்புறவு கொள்ள ஆரம்பித்தனர்.

நாடுகடந்து லண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்ஸ் தீவிரமான வறுமைக்குள்ளானார். தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடைமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டு வெளிக்கிட முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார்.

முற்போக்கு பத்திரிகையான நியூயோர்க் - டெய்லி ற்றிபியூனுக்கு ஆக்கங்கள் எழுதிவந்தபோதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அவ்வேட்டின் ஐரோப்பிய ரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது . ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பிரசுரமாகவில்லை. 1862 வரை ற்றிபியூனுக்கு எழுதி வந்தார்.

மார்க்சின் பெற்றோரு இறந்த சமயம் அவருக்கு மரபுரிமையாக சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கழகத்தின் பதிநான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் இடமிருந்து ஆறு நூறு பவுண் அளவில் விருப்புரிமைக்கொடையை மரபுரிமையாக பெற்றார். 1869 இல் தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் ஒரு செல்வந்தரானபோது மார்க்சுக்கு 350 பவுண் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார்.

Georg Wilhelm Friedrich Hegel என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்சு தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.

[ தொகு] மார்க்ஸ்சின் ஆக்கங்கள்

[ தொகு] இவற்றையும் பார்க்க

[ தொகு] ஆதாரங்கள்

  • வெ.சாமிநாத சர்மா. (). மார்க்ஸ். சென்னை: சந்தியா.

[ தொகு] வெளி இணைப்புகள்

கருத்துகள் இல்லை: