தண்ணீர் பஞ்சத்தின் பிடியில் சிக்கித் தவிக்கிறது தமிழகம். சென்னையின் பல பகுதிகளில் குடம் தண்ணீர் 5 ரூபாய் விலை விற்கிறது. தண்ணீருக்கே மாதம் ஆயிரம் ரூபாய் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறிக் குமுறுகிறார்கள் பெண்கள். தமிழகத்தின் பல நகராட்சிகள் 4, 5 நாட்களுக்கு ஒரு முறைதான் குடிநீர் விநியோகம் செய்கின்றன. குழாயடிச் சண்டை முற்றி திருச்சியில் ஒரு கொலையே விழுந்திருக்கிறது.
குடிநீருக்காக மக்கள் இப்படித் தவிக்கும் சூழ்நிலையில் ஒரு அரசு என்ன செய்ய வேண்டும்? தண்ணீர் பஞ்சத்தைப் பயன்படுத்தித் தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதைத் தடுக்க வேண்டும். நீர்வளத்தைப் கையகப்படுத்தி இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ மக்கள் அனைவருக்கும் குடிநீர் வழங்க வேண்டும். தாகத்தைக் காசாக்கும் தண்ணீர் வியாபாரத்தைத் தடை செய்ய வேண்டும்.
ஆனால் அரசு என்ன செய்கிறது? தண்ணீருக்காகப் போராடும் மக்கள் மீது தடியடி நடத்துகிறது. நெல்லை அருகே கங்கை கொண்டான் எனும் கிராமத்தில் அமையவிருக்கும் கொக்கோ கோலா ஆலைக்கோ, தாமிரவருணி ஆற்றிலிருந்து குழாய் போட்டுக் கொண்டு வந்து, லிட்டர் ஒண்ணரை பைசா விலைக்கு தண்ணீர் விற்க ஒப்பந்தம் போடுகிறது. கோயில்பட்டி, சாத்தூர் மக்களுக்குக் கிடைக்காத தாமிரவருணித் தண்ணீரை கொக்கோ கோலாவுக்கு வழங்கிறது. அதை பாட்டிலில் அடைத்து லிட்டர் 13 ரூபாய் விலைக்கு விற்று தமிழக மக்களைக் கொள்ளையடிக்கப் போகிறது கொக்கோ கோலா.
அமெரிக்கக் கம்பெனிக்கு வாரி வழங்குமளவுக்கு இங்கே நீர்வளம் கொழிக்கிறதா? "தமிழகத்தின் நிலத்தடி நீரில் 72 சதவீதம் குடிக்க லாயக்கற்றது" என்று கூறுகிறது பொதுப்பணித் துறை. மீதமுள்ள 28 சதவீகித நீர்வளத்தை போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சிக் காசாக்குகிறார்கள் தனியார் முதலாளிகள். 600 தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் ஏரிகளையும் நிலத்தடி நீரையும் உறிஞ்சுகின்றன. சென்னை நகரில் மட்டும் இவர்களது தண்ணீர் வியாபாரம் மாதமொன்றுக்கு 50 கோடி ரூபாய் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறது பொதுப்பணித்துறை.
அதாவது, 'தாகத்தால் தவிக்கும் மக்களைக் கொள்ளையடித்துக் கொள்ளுங்கள்' என்று தனியார் முதலாளிக்களுக்குத் கண்ணைக் காட்டிவிட்டுருக்கிறது இந்த அரசு. 'அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஊழல் பேர்வழிகள். பொதுச் சொத்தைச் சூறையாடும் திருடர்கள், இவர்களிடமிருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?" என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால் இவர்கள் திருடர்கள் மட்டுமல்ல, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கூலிகள், உலக வங்கியின் அடிமைகள். அ.தி.மு.க, தி.மு.க, பா.ஜா.க, தெலுங்கு தேசம் என எந்தக் கட்சியும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்த அடிமைகளின் நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் இவர்களுக்கு ஆண்டையான உலக வங்கியைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலக வங்கிக்காரன் என்பவன் யார்? 'குடிநீர் முதல் கக்கூசு வரை எல்லா நலத்திட்டங்களுக்கும் உதவி வழங்கும் வள்ளல் என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது அமெரிக்க வல்லரசின் தலைமையிலான ஒரு கந்துவட்டிக் கும்பல்; ஏழை நாடுகளுக்கு வலியக்கடன் கொடுத்து வலையில் வீழ்த்தி அந்த நாடுகளின் வளங்களையும் சொத்துக்களையும் வளைத்துப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு வழங்குவதுதான் உலகவங்கியின் பணி.
'உலக வங்கி ரேசன் அரசி விலையை உயர்த்தச் சொல்கிறது, மின் கட்டணம்-பேருந்துக்கட்டணத்தைக் கூட்டச் சொல்கிறது', என்று கருணாநிதியும் ஜெயலலிதாவும் சட்ட சபையிலேயே பேசுவதை நீங்கள் எத்தனை முறை கேட்டிருப்பீர்கள்! மத்திய அரசு முதல், மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணையர் வரை அனைத்து மட்டங்களிலும் உலக வங்கி நேரடியாக அதிகாரம் செலுத்துகிறது; கண்காணிக்கிறது.
அந்த உலக வங்கிதான் தண்ணீரைத் தனியார் மயமாக்கச் சொல்லி ஆணையிடுகிறது. பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதைப் போலவே ஆறு, குளம், ஏரிகளையும் தனியார் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கச் சொல்கிறது 'மக்களுக்கு இலவசக் குடிநீர் வழங்குவது என்ற கொள்கையையே ஒழித்துக் கட்ட வேண்டும்' என்று வெளிப்படையாக அறிவிக்கிறது.
இயற்கையின் கொடையான தண்ணீரை, உயிரின் மூலமான தண்ணீரை, உயிரினங்கள் அனைத்தின் உரிமையான தண்ணீரை ஒரு விற்பனைச் சரக்கென்று சொல்கிறது. ஆறுகளும் குளங்களும் மக்களின் பொதுச்சொத்தல்ல. முதலாளிகள் தொழில் செய்வதற்கான முதலீடு என்கிறது. காற்றைப் போலத் தண்ணீரும் மனிதனின் இயற்கையான தேவை என்பதை மறுத்து, அது காசு கொடுப்பவனுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய சேவை என்கிறது.
'தண்ணீரைத் தனியார் மயமாக்கினால்தான் கடன் தருவேன்' என்று மிரட்டிய பல ஏழை நாடுகளின் நீர் வளத்தைப் பன்னாட்டு முதலாளிகளின் உடைமையாக மாற்றியிருக்கிறது உலக வங்கி.
நிர்பந்தங்கள் மூலம் ரகசியமாக இது நாள் வரை உலக வங்கி திணித்து வந்த தண்ணீர் தனியார் மயத்தை சட்ட பூர்வமாகவும் வெளிப்படையாகவும் செய்கிறது 'காட்ஸ்' ஒப்பந்தம். 'காட்ஸ்' ஒப்பந்தத்தின் படி கல்வி, மருத்துவம், வங்கி, காப்பீடு போன்ற தனியார் மயமாக்கப்பட வேண்டிய சேவைத்துறைகளின் பட்டியலில் தண்ணீரும் ஒரு சேவைத் துறை. இந்த 'காட்ஸ்' ஒப்பந்தத்திலும் இதற்கு முந்தைய 'காட்' ஒப்பந்தத்திலும் தெரியாமல் ஒரு அதிகார வர்க்கக் கும்பல் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு எல்லா ஓட்டுக் கட்சி ஒப்புதல் அளித்து விட்டன.
'உலக வங்கி - ஐ.எம்.எப் - காட்ஸ் - உலக வர்த்தகக் கழகம்' என்ற இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் சொல்வதுதான் இனி இந்தியாவின் சட்டம், நிர்வாகம், அரசியல், பொருளாதாரம். சட்டத்துறைகளில் உலக வர்த்தகக் கழகம் என்ன ஆணையிடுகிறதோ அதற்கேற்ப இந்தியாவின் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும். இறையாண்மையற்ற இந்த அடிமைத்தனத்தைத் தான் மறு காலனியாக்கம் என்று சொல்கிறோம். தண்ணீர் தனியார் மயம் என்பது மறு காலனியாக்கத்தின் ஒரு குரூரமான வெளிப்பாடு.
தண்ணீர் தனியார் மயமாக்கப் பட்டால் என்ன நடக்கும்? அது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும், மாதந்தோறும் எண்ணெய் விலை ஏறுவது போல தண்ணீர் விலையும் ஏறக் கூடும். லாப வெறி பிடித்த முதலாளிகள் நீர் வளத்தைப் போட்டி போட்டுக் கொண்டு உறிஞ்சி இயற்கையை நாசமாக்குவார்கள். நம் கண் முன்னே ஒரத்துப் பாளையம் நீர்த்தேக்கத்தைத் தமது கழிவு நீர் தொட்டியாக மாற்றி எட்டு மாவட்டத்து மக்களின் குடிநீரையும் பாசன நீரையும் நஞ்சாக்கியிருக்கிறார்கள் திருப்பூர் முதலாளிகள்.
பன்னாட்டு முதலாளிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்? நீர் வளத்தை அழித்து புல், பூண்டுகள், தாவரங்கள், கால்நடைகள் என எல்லா உயிரினங்களையும் அழித்த அந்தப் பேரழிவை இயற்கையே கூட மீண்டும் சரி செய்து கொள்ள முடியாத நிலைக்குத் தள்ளி விடுவார்கள்.
இவையெல்லாம் நாளை வரவிருக்கின்ற அபாயங்கள் அல்ல. இன்று நம் கண் முன்னே தென்னாப்பிரிக்காவில் தண்ணீர் அளிக்கும் 'கிராமப்புற கூட்டுக் குடிநீர்த் திட்டம்' இத்தகையது தான். ஏரி, குளங்களை இனி அரசாங்கம் பராமரிக்காது. பயனாளிகளே பராமரித்துக் கொள்வது என்ற பெயரில் நீர் வளங்கள் அனைத்தும் கிராமப் புற ஆதிக்க சக்திகளிடம் ஒப்படைக்கப்படும். சந்தைக்கும் கக்கூசுக்கும் டெண்டர் எடுத்த சமூக விரோதிகளைப் போல பாசன நீருக்கு இவர்கள் விவசாயிகளிடம் விருப்பம் போல பணம் பிடுங்குவார்கள். தமிழகத்திற்கு உலக வங்கி வழங்கியிருக்கும் இந்த திட்டத்தை மராட்டிய காங்கிரசு அரசு சட்டமாகவே நிறைவேற்றியிருக்கிறது. இச்சட்டத்தின் படி ஒரு ஏக்கருக்கு ஒரு போகத்துக்கு விவசாயி கட்ட வேண்டிய தண்ணீர் வரி ரூ.8000. ஏழை நடுத்தர விவசாயிகளை விவசாயத்தை விட்டே துரத்துவதுதான் உலக வங்கியின் தண்ணீர் தனியார்மயத் திட்டம்.
தண்ணீர் தனியார்மயமென்பது தண்ணீர்ப் பிரச்சனை மட்டுமல்ல. தண்ணீரை இழந்தால் நாம் சோற்றையும் இழப்போம். விதைகளின் மீது நமது விவசாயிகள் கொண்டிருக்கும் பாரம்பரிய உரிமையை ரத்து செய்து அவற்றைப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாக்குகிறது மத்திய அரசின் புதிய விதைச் சட்டம். உரமும், பூச்சி மருந்தும் தான் ஏற்கனவே அவர்களது கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அரசு கொள்முதல் ஒழிக்கப் பட்டு நாடெங்கும் ஐ.டி.சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தானியக் கொள்முதலைத் தொடங்கி விட்டன. ஆயிரம், இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் பன்னாட்டுக் கம்பெனிகள் ஏற்றுமதிக்கான விவசாயம் செய்வதற்காகவே 'தரிசு நில மேம்பாட்டுத் திட்டம்' நாடெங்கும் கொண்டு வரப்படுகிறது. தற்போது தண்ணீர் விற்பனையில் இறங்கியிருக்கும் அமெரிக்க மான்சாண்டோ நிறுவனம் 'மொத்த உணவுச் சங்கிலியையும் கைப்பற்றுவது தான் எங்கள் திட்டம்' என்று பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறது.
தண்ணீர் தனியார் மயமாக்கப் பட்டால் நாம் சுய சார்பை இழந்து உணவுக்கும் தண்ணீருக்கும் கப்பலை எதிர்பார்த்துக் கையேந்தி நிற்போம். தண்ணீரைக் கட்டுப்படுத்துபவன் எல்லா ஆதாரங்களையும் கட்டுப்படுத்த முடியும். தண்ணீரை இழந்தால் பெயரளவிலான இறையாண்மையையும் நாம் இழப்போம். பிளச்சிமாடாவின் கதை நமக்கு ஒரு பாடம்.
முப்போகம் விளைந்த கேரளத்தின் பிளாச்சிமடா கிராமத்தில் கொக்கோ கோலா நிறுவனம் ஆலை அமைத்தது. கோடிக்கணக்கான லிட்டர் நீரை நிலத்திலிருந்து உறிஞ்சி எடுத்தது. ஒரு லிட்டர் கோக்கிற்கு எட்டு லிட்டர் ரசாயனக் கழிவு நீரை வெளியேற்றியது. பிளாச்சிமடா கிராமத்தின் நிலம் அழிந்தது. கோக் நிறுவனம் அனுப்பும் தண்ணீர் லாரிக்காக மக்கள் கையேந்தி நிற்கும் நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் பிளச்சிமடாவை சுடுகாடாக்கிய கோக் தனக்கு சாதகமாக நீதிமன்ற உத்திரவும் பெற்று விட்டது. இப்போது தாமிரவருணியைக் குறி வைத்திருக்கிறது.
கோக் ஒரு குறியீடு. 'உலகின் நீர் வளங்கள் அனைத்தும் எம் தனி உடைமை' என்று கூறும் பன்னாட்டு தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு கோக் ஒரு பிரதிநிதி. நமது ஆறு குளங்களூம் நிலத்தடி நீர் வளமும் நமக்கு சொந்தமா, பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி.
- திருநெல்வேலி கங்கைகொண்டானில் செப்டம்பர் 12,2005 அன்று 'கோக்' ஆலைக்கு எதிராக நடத்தவிருக்கும் மறியல் போராட்டம் தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகியவை வெளியிட்டுள்ள துண்டறிக்கையிலிருந்து.
நன்றி - தீம்தரிகிட
வெள்ளி, 30 மார்ச், 2007
தண்ணீர் - தாகத்துக்கா? லாபத்துக்கா?
சிங்கள வெறியர்களின் இனவெறியாட்டம்
சிங்கள வெறிநாய்களின் இனவெறியாட்டம்:: தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி |
|
சிறிலங்கா கடற்படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மதியம் அளவில் இடம்பெற்றதாக இராமேஸ்வரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அப்பகுதிக்கு வந்த சிறிலங்கா கடற்படையினர் எதுவித முன்னெச்சரிக்கையோ அறிவிப்பையோ விடுக்காது, திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர். மீன்பிடித் தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பகுதி சிறிலங்கா கடல் எல்லைக்கு உட்பட்டது என்றும், இருப்பினும் எச்சரிக்கை வழங்காது துப்பாக்கிச் சூட்டினை சிறிலங்காப் படையினர் நடத்தியது தவறு என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சிறிலங்கா கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்தில் இருவரும் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் கடலில் வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த இருவர் கன்னியாகுமரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவரில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றைய இருவரின் சடலங்கள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து கன்னியாகுமரிப் பகுதியில் பதற்றம் நிலவுவதாக தமிழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள கடற்படையினலின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மீனவரை காப்பாற்றத் தவறிய இந்திய கப்பற்படைக்கும், டில்லி ஏகாதிபத்தியத்திறகும் எமது கடுமையான கண்டனங்கள்... |
--
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
செவ்வாய், 20 மார்ச், 2007
HELP :: Only ur mouse click needed
நண்பர்களே உதவிடுங்கள்
இது பணம் சம்பாதிக்கும் நோக்கமின்ற செயல்படும் சேவை தளமே ஆகும். இதன் மூலம் சத்தியம் மக்கள் சேவை மையம் யாதொரு நிதியும் பெறாது என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்..
Sathiyam Makkal Sevai Maiyam is an Youth association of Puducherry Youths started by Mr.D.Sathiyamoorthy and Mr.K.Arunabharathi in 2003. This is a registered society with reference no:596/2003. This association involves in works related to Poverty, Hunger and other problems faced by the society by young talented youths. This Page contains sites of Non Governmenatal Organizations which helps in promoting the poors of the World.
How does the website work?
When you enter the websites, you are invited to click on the 'donate' button. This is completely FREE to the user, however a simple click means that sponsors will donate some amounts of money in loan credit to those in need. Every day, by simply clicking on this button and entering the site you can make a difference for someone in need.
What happens when I click on the "Donate" button? Does the donation cost me anything?
There is absolutely no charge to you for the donation; it is fully paid for by the sponsors.
When you click on the "Donate" button, the computer adds your donation to the day's totals and shows you the banners of the companies sponsoring your donation.
-----------------------------------------------------------
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
-----------------------------------------------------------
தோழமையுடன்
க.அருணபாரதி
www.arunabharathi.blogspot.com
-----------------------------------------------------------
திங்கள், 19 மார்ச், 2007
ஈழ மக்களுக்காக உதவி
பேரன்பு கொண்ட தோழர்களுக்கு செவ்வணக்கம்.
1 திரு. வீ.ரவி-ரேவதிஇ குயவர்பாளையம்இ புதுச்சேரி. ரூ.200
2 திரு. அ.கலியமூர்த்தி-ராணிஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.200
3 திரு. ந.மோகன்-செயலட்சுமிஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.100
4 திரு. க.செ ந்தில்இ சக்தி நகர்இ புதுச்சேரி. ரூ.100
5 திரு. க.ராஜேஷ்;இ சக்தி நகர்இ புதுச்சேரி. ரூ.100
6 திரு. ஜி.லியோஇ மேத்தா நகர்;இ சென்னை. ரூ.200
7 திரு. கு.சீனுவாசன்இ சாரம்இ புதுச்சேரி. ரூ.100
8 திரு. ஆறுமுகம்-சசிகலாஇ டி.ஆர் நகர்இ புதுச்சேரி. ரூ.100
9 திரு. தி.திருநாவுக்கரசு-ரேவதிஇ எழில் நகர்இ புதுச்சேரி. ரூ.100
10 திரு. தி.சாந்தகுணம்-தனலட்சுமிஇ எழில் நகர்இ புதுச்சேரி. ரூ.25
11 திரு. ப.ராஜுஇ நெற்குன்றம்இ சென்னை. ரூ.50
12 திரு. தே.சந்தோஷ்இ கவிக்குயில் நகர்இ புதுச்சேரி. ரூ.50
13 திரு. தே.சத்தியமூர்த்திஇ கவிக்குயில் நகர்இ புதுச்சேரி. ரூ.50
14 திரு. தே.சரவணன்இ கவிக்குயில் நகர்இ புதுச்சேரி. ரூ.50
15 திரு. மூ.சங்கர்இ டி.ஆர் நகர்இ புதுச்சேரி. ரூ.50
16 திரு. பாலாஇ தென்றல் நகர்இ புதுச்சேரி. ரூ.50
17 திரு. வீ.ராஜு-சித்ராஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.50
18 திரு. ச.கணேசன்-செல்விஇ குயவர்பாளையம்இ புதுச்சேரி. ரூ.50
19 திரு. சோமுஇ டி.ஆர்.நகர்இ புதுச்சேரி. ரூ.25
20 திரு. க.ஆனந்த்இ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. ரூ.100
21 திரு. க.சண்முகம்இ காமாட்சியம்மன் வீதிஇ புதுச்சேரி. ரூ.50
22 திரு. இம்மானுயல்இ நங்கநல்லூர்இ சென்னை. ரூ.500
23 திரு. ஜி.ராஜேஷ்இ நங்கநல்லூர்இ சென்னை. ரூ.50
24 திரு. பி.செந்தில்இ மேட்டுப்பாளையம்இ கோவை. ரூ.200
25 திரு. போகா சந்தோஷ்இ சின்மயா நகர்இ சென்னை. ரூ.100
26 திரு. சோழன்இ மேத்தா நகர்இ சென்னை. ரூ.100
27 திரு. கிருபாகரன்இ அண்ணா சாலைஇ புதுச்சேரி. ரூ.25
28 திரு. செல்வம்இ அண்ணா சாலைஇ புதுச்சேரி. ரூ.25
உணவுப் பொருட்கள்
29 திருமதி. ராணி-கலியமூர்த்திஇ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. 10 கிலோ அரிசி
30 திருமதி ராஜிஇ எழில் நகர்இ புதுச்சேரி. 4 கிலோ அரிசி
31 திருமதி. செயலட்சுமி மோகன் தாஸ்இ அரவிந்தர் வீதிஇ புதுச்சேரி. 3 கிலோ அரிசி
32 திரு. புஷ்பராஜ்இ வானவில் நகர்இ புதுச்சேரி. 5 கிலோ அரிசி
33 வேதபுரீஸ்வரர் வழிபாட்டு நற்பணி மன்றம்இ புதுசாரம்இ புதுச்சேரி. 2½ லிட்டர் எண்ணெய்
மருந்து பொருட்கள்
34 திரு. பார்த்திபன்இ முத்திரையர்பாளையம்இ புதுச்சேரி. 600 மாத்திரைகள்
எண்
மொத்தம் - பொருள் அளவு
அரிசி 22 கிலோ
எண்ணெய் 2½ லிட்டர்
மாத்திரைகள் 600
தோழர் க.அருணபாரதி
தலைவர்,
புதன், 14 மார்ச், 2007
கியூபாவில் இயற்கை வேளாண்மை
1980 இறுதியில் சோவியத் பிளாக்குடன் இருந்து வணிக உறவுகள் முறிந்தால் உணவு இறக்குமதி 50%க்கும், பூச்சிகொல்லிகள் 60%மும், உரம் 77%ம், வேளாண்மைக்குத் தேவையான பெட்ரோலிய பொருட்கள் 50% வீழ்ச்சியடைந்தன.இதனால் வேளாண் நிர்வாகம் இரண்டு விதமான சவால்களை சந்திக்க நேர்ந்தது. குறைந்த விவசாய உள்ளீடுகளை கொண்டு இருமடங்கு வரை உற்பத்தி செய்ய வேண்டியதாயிற்று. அதே நேரத்தில் அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் ஏற்றுமதி உணவு பயிர்களின் உற்பத்தி குறையாமல் இருக்க வேண்டியதாகியது.
இதன் விளைவாக கியூபாவில், அதிக உள்ளீடு விவசாயத்திலிருந்து, இயற்கை வேளாண்மைக்கு பெருமளவில் திரும்ப வேண்டயிதாயிற்று. பொதுவாக இவ்வாறு இயற்கை வேளாண்மைக்கு திரும்பினால் முதலில் இருந்த உற்பத்தி அளவினை எட்ட மூன்று முதல் ஐந்து வருடங்கள் பிடிக்கும். வளம் இழந்த மண் மீண்டும் வளம் பெறவும், இயற்கையாகவே பூச்சி மட்டும் நோய்களை கட்டுப்படுத்தும் திறன் பெறவும் இக்கால அவகாசம் தேவைப்படும். ஆனால், கியூபாவால் இந்த கால அவகாசத்திற்காக காத்திருக்க இயலாது. இதனால் கியூபாவின் அறிவியலறிஞர்களும், திட்டமிடுபவர்களும், புதிய வழிமுறைகளை, இயற்கை வேளாண்மையில் புகுத்தி இந்த கால அளவை குறைக்க முயன்றனர்.
கியூபா வேளாண்மையில் ஓரினப்பயிர் வளர்ப்பு முறைக்கு மாற்றாக பல்வகைப் பயிர் வளர்க்க முயன்றனர். வேதியல் உரங்களுக்குப் பதிலாக உயிரியல் உரங்களும், வேதியல் பூச்சி கொல்லிகளுக்கு பதிலாக உயிரியல் பூச்சி கொல்லிகளும் பயன்படுத்தப்பட்டன. டிராக்டர்களுக்கு பதிலாக கால்நடைகளை கொண்டு உழுதனர். நீர் பாசனத்தை நம்பினால் பருவ காலங்களில் பெய்யும் மழையின் அளவை கணக்கில் கொண்டு அதற்கேற்ற வகையில் பயிர் செய்ய முற்பட்டனர். விவசாயத்தில் உள்ளூர் மக்கள் அதிகம் ஈடுபாடு காட்டியதால், அவர்கள் நகரங்களுக்கு வெளியேறுவது வெகுவாக குறைந்தது.
நவீன வேளாண்மையால் உற்பத்தியான அளவை அடைய, பாரம்பரிய இயற்கை வேளாண்மை மூலம் மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் பிடிக்கும். அதற்குப் பிறகு உணவு உற்பத்தி அதிகரிக்கும், மேலும் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் பொருட்களுக்கு நுகர்வோர்களும் கூடுதல் தொகை கொடுப்பவர். இந்த கால கட்டத்தில், மண் வளம் பாதுகாக்கப் படவேண்டும்.
மற்ற நாடுகளில், நவீன வேளாண்மையின்றி, பாரம்பரிய இயற்கை வேளாண்மைக்கு மாறுவது என்பது ஏதாவது, சில பகுதிகளில் நடக்கும். ஆனால் கியூபாவில் நாடு முழுவதுமே இயற்கை வேளாண்மைக்கு மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. பயிர் பாதுகாப்பிற்காக கியூபாவில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக முறை கடைபிடிக்கப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்த பெருமளவில் உயிரியல் பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்பட்டன. உள்ளூர் தேவைகளுக்காக மொத்தம் 218 வேளாண் கூட்டுறவு மையங்களும், அரசு பண்ணைகளும் இவற்றை உற்பத்தி செய்தன. மேலும் மண்ணில் உருவாகும் தாவர நோய்களை கட்டுப்படுத்த நுண்ணியிரிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. களைகளை கட்டுப்படுத்த பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்பட்டது.
இயற்கை வேளாண்மை வெற்றி பெறவேண்டுமானால் மண், நீர்வளம் சிறப்பாக அமைய வேண்டும். கியூபாவில் நிலம் உப்புத்தன்மையாக மாறுவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் மண் அரிமானம், உயிரியல் பொருட்கள் குறைவது கட்டுப்படுத்தப்பட்டது. மண்ணை வளப்படுத்தி, கால்நடை சாணத்திலிருந்து பெறப்படும் உரங்களை உபயோகித்தும், பயிர் சுழற்சி மூலம் கிடைக்கும் தாவர உரங்களை பயன்படுத்தியும், வீடுகளிலிருந்து பெறப்படும் கழிவுகளை கொண்டு கம்போஸ்ட் உரம் தயாரித்தும், மண் புழுவை உபயோகித்து தொழிற்சாலை கழிவுகளை உரமாக தயாரிக்க உபயோகப்படுத்தினர். கியூபாவில் பயன்படுத்திய இயற்கை உரங்கள் உலகத்திலேயே எங்கும் இல்லாத அளவிற்கு பயன்படுத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் விளை நிலங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட பயிர் வகைகள் ஊடுபயிராக செய்யப்பட்டன. பாரம்பரியமாக கியூபா விவசாயிகள் ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்துவருபவர்கள். எ.கா. சோளமும், பீன்சும், காபியுடன் வாழையும் பயிரிட்டனர்.
கியூபாவில் மண்வள மேம்படுத்தலில் காடு வளர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. ஸ்பானியர்கள் கியூபாவிற்கு வந்த பொழுது, கியூபாவில் 80% காடுகளாக இரந்தது. 1959 புரட்சியின் போது, அந்நாட்டில் 18% தான் காடுகள் இருந்தது. ஆனால் புரட்சிக்கு பிறகு, காடு வளர்ப்பிற்கும், நில அரிப்பை தடுப்பதற்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1970களில் சமூக மரக்கன்று, பண்ணைகள் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டன. அதன் குறிக்கோள் என்னவெனில் விதைகளை சேகரித்து, நாற்றுகள் வளர்த்து, அவற்றை கிராமப்புறங்களில் நடுவது என்பதாகும். 1989 - 1990ல் 2,00,000 எக்டேர் நிலங்களில் காடுகள் வளர்க்கப்பட்டன. இன்று காடுகளின் அளவு 18% அதிகமாக உள்ளது. மற்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் காடுகளின் அளவு விரைவாக குறைந்து வருகிறது. கியூபா விவசாயிகள் பாரம்பரிய விவசாய முறையும் அவர்களது அறிவையும், தற்பொழுதுள்ள அரசு விவசாய தொழில் கலைஞர்களின் புதிய முறைகளையும் இணைத்தது, இது குறித்து நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தியது, ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். இதற்கான கியூபா பெரும் முயற்சி எடுததுக் கொண்டது.
லத்தீன் அமெரிக்க மக்கள் தொகையில் 2% முள்ள நாடு கியூபா, ஆனால் விஞ்ஞானிகளில் 11%மும் நல்ல ஆராய்ச்சி பின்புலமும் கொண்ட கியூபாவில் அரசு இதனை முனைப்புடன் நடத்தியது. இதற்காக 1982ல் மாற்று விவசாயம் என்பது இயக்கமாக மாறியது. இதனால் இந்நாள் வரை உபயோகிக்கப்படாத ஆராய்ச்சி முடிவுகள், உடனுக்குடன் விவசாயிகளை சென்றடையுமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. உள்ளூர் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட வேளாண்மை நடைபெற்றது. இதனால் இதன் பயனை கியூபா மக்கள் 1989 - 1990ல் பெற முடிந்தது.
பாரம்பரிய முறை விவசாயம் செய்ய அதிக ஆட்கள் தேவை. இயந்திரங்களுக்கு பதிலாக கால்நடையை உபயோகிக்கும் போது, மற்ற விவசாய வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. இதற்காக கிராமப்புறங்களில் வேலை செய்ய விருப்பத்துடன் வரும் நகரமக்களுக்காக, தற்காலிக தொழிலாளர் குடில்கள் கட்டப்பட்டன. இவ்வாறு தற்காலிகமாக வருபவர்கள் 15 நாட்கள் வேலை செய்து விட்டு தங்கள் நகரங்களுக்கு திரும்பி விடுவார்கள். 1991ல் முதல் முறையாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டபொழுது ஹவானா நகரத்தில் 1,46,000 பேர் கிராமப்புற வேலையில் பணிபுரிந்தனர்.
இரண்டு வருடம் வேலை செய்ய ஒரு தொழிலாளர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இவர்கள் ஒவ்வொருநாளும் 12 மணி நேரம் வேலை செய்தனர். இவர்களை ஊக்குவிப்பதற்காக, ஆசிய விளையாட்டின் போது கட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம் போன்ற பெரிய வீட்டு வசதி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. இங்கு வசிப்பவர்களுக்கு மருத்துவ வசதி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு வசதிகள் போன்ற வசதிகளும் அளிக்கப்பட்டன. இரண்டாண்டு வேலை செய்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் அளிக்கப்பட்டது.
அரசு நிலங்கள் சிறு, சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு தொழிலாளர் பொறுப்பில் அளிக்கப்பட்டது. இதில் அதிகமான விளைச்சலை பெறும் குழுக்களுக்கு ஊக்க பரிசு அளிக்கப்பட்டது. இதனால் விளைச்சல் இருமடங்காகியது. தற்பொழுது வாழை மற்றும் எலுமிச்சை பயிர்களில் இம்முறை பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிபவர்களிடம் கேட்ட பொழுது, அவர்கள் தங்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்பதாகவும் மேலும் இரண்டு ஆண்டுகள் பணிபுரிய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.
மேலும் டர்கிளோ திட்டம் எனும் முறையில், இராணுவ சேவை முடிந்தவுடன் எல்லா இளைஞர்களும் விவசாயத்தில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என்பதாகும். இதன் மூலம் இளைஞர்களுக்கு கிராமப்புற சூழ்நிலையில் ஈர்க்கப்பட்டு அவர்கள் நகரப்புறங்களிலிருந்து வெளியேறி கிராமப் புறங்களில் தங்க வாய்ப்பு ஏற்படும்.
***********
உணவு பயிர்களுக்காக கியூபா வெளிநாடுகளை சார்ந்திருக்க வேண்டியதாயிற்று, எனவே உணவு தற்சார்புடைய 1989ல் தேசிய உணவு திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இதன்படி உணவுபயிர்கள் மற்றும் காய்கறிகளின் உற்பத்தியை அதிக அளவில் பெருக்குவதற்கு முன்னுரிமை தரப்பட்டது. மேலும் ஹவானாவை சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்களை சாராமல், தற்சார்புடையதாக மாற்ற முன்னுரிமை அளிக்கப்பட்டது.
நகரங்கள் உணவுப் பொருட்களுக்காக கிராமப்புறங்களை சார்ந்திருந்ததால் அதிக செலவு ஏற்பட்டது. எ.கா. கிராப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி, கனிகளை குளிர்பதனப்படுத்தவும், சேமித்து வைக்கவும், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களுக்கு கொண்டு செல்ல போக்குவரத்திற்கும் முதலீடு செய்ய வேண்டியிருந்தது. இப்பிரச்சனையை சமாளிக்க நகரங்களிலேயே காய்கறிகளை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. சிறிய அளவில் உற்பத்தி செய்யப்படுவதற்கு மனித வளமே தேவை, பெரிய இயந்திரங்கள் தேவையில்லை.
கியூபாவின் உணவில் வைட்டமின்களும், தாதுப் பொருட்களும் குறைவாக இருப்பதால், நகரத்தில் உள்ள தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யும். சிறிய தோட்டங்களில், பல்வேறு வகையான பயிர்கள் பயிரிடப்படுவதால், தாவர நோய்கள் மற்றும் நச்சு பூச்சிகள் வராமல் தடுக்க முடியும். கடைசியாக, நகர தோட்டங்களினால் உணவு பிரச்சனையை ஒரு தனிநபரே தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கு அரசாங்கத்தை எதிர்நோக்க தேவையில்லை.
நகர தோட்டங்கள் கியுபாவில் மூன்று வகைகளாக இருந்தன. முதல் தனியார் நிலத்தில் தனி நபர் அல்லது குடும்ப தோட்டம். இரண்டு அரசு நிலத்தில் கூட்டுறவு மூலம் பயிர்செய்வது மூன்று அரசு தோட்டங்கள். முதல் வகையான தோட்டத்தில், தனி நபர் அல்லது குடும்பம் பயிர் செய்வது அவர்களது உபயோகத்திற்கு போதுமானதாக இருக்கும். பயிர்செய்ய தேவையான இடு பொருட்களை அவர்களே தயாரித்துக் கொண்டனர். விதைகளை அரசு நிறுவனங்களிடமிருந்து பெற்றனர். இரண்டாவது வகையான தோட்டங்கள் என்பது, பொது நிலங்களில் மக்கள் அமைப்புகள் (பெண்கள் குழு, வட்டாரக் குழுக்கள்) பயிரிட்டன. பொது நிலங்கள் உபயோகத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட பின் இக்குழுக்கள், என்ன பயிரிடுவது? எப்பொழுது பயிரிடுவது? என்பதை தீர்மானித்தனர். பயிர்செய்ய தேவையான இடுபொருட்களை இவர்களே தயாரித்துக் கொண்டனர். மூன்றாவது வகையான தோட்டங்கள், பள்ளிகள், தொழிற்கூடங்கள் போன்ற நிறுவனங்களினால் பயிர் செய்யப்பட்டன. இதில் பங்கேற்பவர்கள் வேலை நேரம் என்ன பயிரிடுவது? போன்ற பொறுப்புகளை தீர்மானித்துக் கொண்டனர். இதிலிருந்து உற்பத்தியாகும் விளைபொருட்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டன. மற்ற வகைகளில் உற்பத்தியாகும் பொருட்களை அவர்களது வீட்டு உபயோகத்திற்காக எடுத்து சென்றனர்.
நகரத்தில் வசிப்பவர்களுக்கு கூட வேளாண்மை பற்றிய பொது அறிவு இருந்தது. ஏனெனில் கியூபா புரட்சியின் போது வேளாண் தொழில் மற்றும் உணவு உற்பத்தியுடன், மக்கள் தொடர்பு கொண்டு இருந்தனர். கியூபா தேசிய தலைவரான ஜோஸ் மார்ட்டியின் தத்துவப்படி, தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை பற்றி அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். எனவே கியூபா இளைஞர்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பொழுது, அவர்களது பாடதிட்டத்தின் ஒரு அம்சமாக, கிராமப்புரங்களுக்குச் சென்று, விவசாயத்தை ஒரு பாடமாக பயின்றனர். மேலும் அநேக கியூப மக்கள் ஆண்டிற்கு இரண்டு வாரம் கிராமப்புறங்களுக்கு சென்று விவசாய வேலையில் ஈடுபட்டனர். வாரத்திற்கு இருமுறை தொலைக்காட்சியில் இயற்கை வேளாண்மை பற்றிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பபட்டன.காகித தட்டுப்பாடு நிலவுவதால், தொலைக்காட்சி மூலம் நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதால் அது பலரை சென்றடைய உதவிகரமாக இருந்தது.
இவ்வாறு மிகப்பெரிய அளவில் கியூபாவில் இயற்கை வேளாண்மைக்கு மாறாமல் இருந்திருந்தால், சோமாலியாவில் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை நிலைதான் கியூபாவிலும் ஏற்பட்டிருக்கும். கியூப அரசாங்கத்தின் நீண்ட கால திட்டத்தினால் மனித வளமும் அதிகரித்து, அறிவியல் பூர்வமான விவசாயம் செய்யும் அறிவும் அதிகரித்ததால் மாற்று விவசாயத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிந்தது. கீழ் சமூகத்தில் திறம்பட ஒருங்கிணைந்து செயல்பட்டதால், குறைவான வளங்களை கொண்டு அதிக அளவு உணவு உற்பத்தி செய்ய முடிந்தது. இதனால் வெளியிலிருந்து உணவு இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டது.
இயற்கை விவசாயம் செய்யும் பொழுது, விவசாயி அல்லது தோட்டத்தை நிர்வகிப்பவர், நிலத்துடனான உறவு நெருக்கமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மண்ணின் ஒவ்வொரு தரம் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். எந்த இடத்தில் உயிர்சத்துக்கள் அதிகம் உள்ளன. எங்கு நில அமைப்பு மோசமாக உள்ளது, எப்பக்கத்திலிருந்து நச்சு பூச்சிகள் நுழையும், எங்கு எறும்பு புற்றுகள் உள்ளன என்பன போன்றவற்றை தெரிந்து இருக்க வேண்டும். சோசலிச பிளாக்குடன் கொண்டிருந்த வணிக உறவு முறிவுற்ற நிலையில், கியுப மக்கள் அதிக தொல்லைகளுக்கும், உணவு பற்றாக்குறைக்கும் ஆளாயினர். ஆனால் இயற்கை விவசாயத்திற்கு மாறியதன் மூலம் அவர்கள் இந்த சவாலை சமாளித்தனர். இத்தகைய மாற்றுவிவசாயம் அவர்களது முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகின் மற்ற பகுதிகளில் இயற்கை விவசாயம் கொள்கை அளவில் உள்ளது. இந்த இருபது ஆண்களில் இயற்கை விவசாயத்தில் கியூபா மக்கள் மேற்கொண்ட நடவடிக்கை பிரமிக்கும் படி உள்ளது. விவசாய பண்ணைகளில் விவசாயிகளின் குழந்தைகள் நச்சுத்தன்மையான பூச்சிகொல்லிகளுக்கும், வேதியல் உரங்களுக்கும் இடையில் உலாவிய நிலைமாறி இயற்கை விவசாயம் மூலம் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.
பிடல்காஸ்ட்ரோயின் உழைப்பு (வியர்வை) மற்றும் அறிவின்மூலம் அற்புதம் நிகழ்த்துவோம் என்ற சூளுரைக்கேற்ப அவர்கள் உழைப்பது வரவேற்கத்தக்கது. அவர்களது செயல்பாடுகள் அவர்களது நாட்டில் பசியால் வாடும் மக்களுக்கு மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையால் வாடும் மற்ற நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.
மானிட சரித்திரத்தில், நவீன நச்சு, பசுமை புரட்சி வேளாண்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. நாம் கீழ்மக்களின் வெற்றி, தோல்விகளிலிருந்து படிப்பினை மேற்கொண்டு, நாமும் இயற்கை வழி வேளாண்மைக்கு திரும்புவோம். இதன்மூலம் புதிய பொருளாதார அமைப்பு ஏற்படுத்துவோம்.
**********
2006ல் அனைவரும் சுற்றுச் சூழல் என்று ஏ.சி. அறையில் அமர்ந்து அதனை விவாதித்து புராஜக்ட்களாக மாற்றி கோடிகளாக உருமாற்றிக் கொண்டிருக்க, 20 வருடங்களுக்கு முன்பே அதனைப் பற்றியும் அதனை நாம் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் மக்களிடம் அவர்கள் மொழியில் பேசிக் கொண்டிருந்தவர்.
மனித உரிமை என்பதை இன்று மேல்தட்டு மனிதர்களுடையதாகவும், அதனை கருத்தரங்குகளில் பேசுவதற்கும், ரிப்போர்ட் அனுப்பி டாலரைப் பெறுவதற்கும் மட்டும் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் இந்திய தலைவராக இருந்தாலும் மாட்டுவண்டி கட்டி குக்கிராம மக்களிடமும் சென்று மனித உரிமை பற்றி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தவர்.
உலகமயமாக்கல் இன்று அனைவரின் வாழ்வாதாரத்தையும் நெறித்துக் கொண்டிருக்க இருபது ஆண்டுகளுக்கு முன்பே அதுபற்றி மக்களை வெளியீடுகள் மூலம் வலியுறுத்தியவர். யாருக்கும் உபயோகமில்லாத கவிதைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டு விட்டாலே அதன்பின்பு தங்களுக்குள் நாயே பேயே என்று அடித்துக் கொண்டும் தங்களைத் தாங்களே திட்டிக் கொண்டும் அறிவுக் கொழுப்பெடுத்து மமதையில் பேசித் திரியும் தற்போதைய எழுத்தாளர்கள் மத்தியில், சுற்றுச் சூழல், உலகமயமாக்கல் வேளாண்மை என்று நூற்றுக்கணக்கான மக்களுக்கான புத்தகங்களை மொழி பெயர்த்தவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதவர். பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர்.
சி.நெடுஞ்செழியன் நமது விழிப்புணர்வு இதழின் முதல் வாசகனும், சரியாத விமர்சகரும், நம்மை விட இதழின் வளர்ச்சியில் தீவிர ஆர்வமும் உடையவர். மாணவர்களையும் விழிப்புணர்வு இதழின் ஒவ்வொரு பக்கத்தையும் செழுமைப் படுத்தியவர். ஆனால் அவர் இன்று நம்மிடம் இல்லை. அவரது நினைவுகளும், அவர் உருவாக்கித் தந்த தொடர்புகளும் மட்டுமே இன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.
அவரது மரணத்தின் வெறுமை மாணவர்கள் அனைவருக்கும் தாங்கமுடியாத வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
காரல் மார்க்ஸ் நினைவு நாள்
தத்துவ மேதைகள் இதுவரை உலகை வர்ணனை தான் செய்திருக்கிறார்கள்.நாம் இனி
அந்த உலகை மாற்ற வேண்டும்"–காரல் மார்க்ஸ் "இதுவரை பூசாரிகளும்
மதத்தலைவர்களும் உங்களுக்கு விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் சொர்க்கத்தை
காட்டிக்கொண்டிருந்தார்கள். ஆனால் நான் காட்டும் வழி உங்களை பூமியிலேயே
பொன்னுலகம் அடைய வைக்கும்…..வாழ்க்கை என்பது அறிவால் நிர்ணயிக்கபடுவது
அல்ல..உங்கள் அறிவு நீங்கள் வாழும் வாழ்க்கையால் தான்
நிர்ணயிக்கப்படுகிறது" (மார்க்ஸ் 1861)
போராட்ட வரலாறு: மார்க்ஸ் (1818 - 83) 1842′ல் ரைன்லான்ட் கஜட் என்னும்
பத்திரிக்கையின் ஆசிரியராக தனது பொது வாழ்வை துவக்கினார். ஒரெ வருடத்தில்
அரசு அந்த பத்திரிக்கையை தடை செய்து அவரையும் ஆசிரியர் பதவியில் இருந்து
தூக்கியது. மார்க்ஸ் பாரிசுக்கு குடிபெயர்ந்து பிரென்சு மண்ணில் இருந்து
ப்ருஷ்ய தொழிலாளிகளுக்காக குரல் கொடுத்தார். 1845′ல் பிரென்சு அரசு அவரை
நாடு கடத்தியது. புருஸ்செல்ஸ்ல் இருந்து தனது முதல் பொருளாதார அறிக்கையயை
வெளியிட்டார். (வறுமையின் தத்துவம்).
1847′ல் கம்யுனிஸ்ட் பிரகடனம் என்னும் வரலாற்று சிறப்பு வாய்ந்த
பிரகடனத்தை என்கெல்ஸுடன் சேர்ந்து வெளியிட்டார்.உடனடியாக அவர்
பெல்ஜ்யத்திலிருந்து வெளியெற்றப்பட்டார்.பிரன்சு அரசும் அவரை ஆயுத
புரட்சியில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தி அவரை நாடு
கடததியது.அவருக்கு எந்த நாடும் இடம் தர முன்வரவில்லை. "நாடற்ற நபர்"
என்று அவர் அறிவிக்கபட்டார்.ரத்தச்சிவப்பு வண்ணத்தில் தனது
பத்திரிக்கையில் அதன் கடைசி இதழை வெளியிட்டு விட்டு குடும்பம்
குட்டியோடு(1843′ல் திருமணம் செய்து கொண்டார்) நாடோடியாக நாடு நாடாக
சுற்றினார்.எந்த நாடும் அடைக்கலம் தரவில்லை.1849′ல் பிரிட்டன் மட்டுமே
அடைகலம் தந்தது. சாகும் வரை பிரிட்டனில் வாழ்ந்தார். வறுமையிலும்,
வியாதிகளிலும் பிடிக்கபட்டார். அவரின் பல குழந்தைகள் பசியால் செததன.மனைவி
நரம்பு வ்யாதியால் பாதிக்கபட்டார்.
எங்கெல்ஸ் கஷ்டப்பட்டு செய்த பண உதவி மட்டுமே அவர் பசியை அவ்வப்போது
ஆற்ற்யது ஆனால் இந்த 35 ஆண்டுகளில் அவர் மாபெரும் எழுத்து புரட்சியை
செய்தார்.நரம்பு வியாதி வந்த போதும் பிரிட்டிஷ் மியுசியத்துக்கு சென்று
தனிஅறையில் அமர்ந்து எழுதினார். டாஸ் காபிடல் என்னும் புரட்சியாளர்களின்
வேதநூலை அவர் 1867′ல் வெளியிட்டார்.வறுமையிலும் வியாதியிலும் 1883′ல்
அவர் இறந்தார். அவரது கல்லறையில் நடந்த இரங்கல் கூட்டத்தில் எஙெல்ஸ்
கண்ணீர் உரை ஆற்றினார்.அனைத்து போராளிகளின் தந்தை என்று மார்க்ஸை அவர்
குறிப்பிட்டார். "போரட்ட உணர்வு மார்க்ஸின் இணைபிரிக்கமுடியாத குணம்"
என்றார் எங்கெல்ஸ். "அவர் போராட்டத்தை நேசிக்கவில்லை காதலித்தார்."
என்றார் எங்கெல்ஸ்
இருக்கும் உலகை வைத்து மார்க்ஸ் திருப்தி அடையவில்லை.ஒரு புது உலகை அவர்
அமைக்க விரும்பினார்.பெண்ணியம் முதல் போராடும் அனைத்து துறைகளுக்கும்
தலைவரும், தந்தையும் காரல் மார்க்ஸ் தான்.பின்னவீனத்துவ தத்துவ மேதைகள்
படைத்த அற்புத துறைகளுக்கு தாயாய் இருப்பது மார்க்சியமே மார்க்ஸ் தனது இள
வயதில் கெகல்( G.W.F. Hegel) என்ற தத்துவ அறிஞரின் சிஷ்யனாக
இருந்தார்.ஆனால் பின்னாளில் கேகலின் தத்துவங்களை நடைமுறைக்கு ஒத்துவராதவை
என்று கடுமையாக சாடினார்."கெகல் சொன்னது சிந்தனைக்கு மட்டுமே
விருந்து.நடைமுறைக்கு அல்ல" என்று கிண்டலும் அடித்தார் மார்க்ஸ் மதங்களை
வெறுத்ததும் இதனால் தான்.அவற்றால் எந்த நடைமுறை பயனையும் அவர் காணவில்லை.
இப்பொதைய பசிக்கு அவை எதுவும் செய்வதில்லை, அவை காட்டும் மோட்சம்
இறந்தபிறகே அடையகூடியது என்பதை உணர்ந்ததும் அவர் வருத்தம்
அடைந்தார்.ஆனால் மதங்கள் மனிதனின் தற்போதய வாழ்வை இறந்தபின் வரும்
சொர்க்கதிற்க்காக தியாகம் செய்ய சொல்வதை உணர்ந்ததும் அவர் கடும் கோபம்
அடைந்து 'மதம் மனிதனின் எதிரி' என்று சாடும் அளவுக்கு அவர் சென்றார்.
நடைமுறை வாழ்வில் பயனளிக்காத எந்த ஒரு தத்துவத்தயும் எதிர்த்தவர்
மார்க்ஸ். கெகலை அவர் சாடியதும் அதன் அடிப்படையில் தான். ஆனால் கெகலின்
அடிப்படை சித்தாந்தமான "சமூக கட்டமைப்புகளும் அரசுகளும் மனிதனின் சுய
தேடலின் உருவாக்கம்" என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.மார்க்ஸியம் என்பதை
'அந்த சுயதேடல் இன்னும் முடிவடையவில்லை' என்ற தத்துவத்தை அடிப்படையாக
கொண்டு உருவாக்கினார். மனிதன் உருவாக்கிய சமூக அமைப்புகளை அவர்
வலியோனுக்கும் மெலியோனுக்கும் இடையே நடைபெற்ற யுத்த களமாக
பார்த்தார்.ஆண்டாண்டு காலமாக வலியோனே வெற்றி பெற்று தனக்கு சாதகமான
சமூகத்தை,அரசை,சட்டத்தை உருவாக்கினான்.நாளடைவில்
அச்சட்டம்,சமூகம்,சமுதாயம்,அரசு இவை அனைத்தும் வலியோனை மேலும் மேலும்
வலியோனாக்கியது. கானகத்தில் உருவான "வல்லவன் வாழ்வான்" என்ற விதி 19ம்
நுற்றாண்டு ஐரொப்பிய சமுகத்திலும் நிலவியதை அவர் கணடார். இந்த விதியே
இதுவரை உருவான அனைத்து சமுகங்களயும் படைத்தது என்பதையும் அவர் கண்டார்.
வலியோனுக்கும் மெலியோனுக்கும் நடைபெறும் யுத்ததை அவர் "வர்க்க போராட்டம்"
என்று வர்ணித்தார்.அவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வாழ முடியும் என்பதை
அவர் நம்பவில்லை. புலியும், புள்ளிமானும் எங்காவது கூடி வாழ முடியுமா?
மெலியோன் என ஒருவன் இருப்பதால் தான் வலியோன் என ஒருவன் இருக்கிறான்.
மெலியோனை சுரண்டி தான் வலியோன் வாழ முடியும். வலியோன் வாழ்வான் என்ற
விதியை மார்க்ஸ் மறுக்கவில்லை. மெலியோன் தனது விதியை போராட்டம் மூலம்
மாற்றி அமைக்க முடியும் என அவர் நம்பினார்.மெலியோன் வலியொனாவதெ அவன்
முன்னேற வழி என அவர் நினைத்தார்.
ஐரொப்பிய சமூகம் முன்னெறியது என்பதை மார்க்ஸ் ஒத்துக்கொள்ளவில்லை.
ரோமானியா காலத்து அடிமைகளையும் தற்போது உள்ள பஞ்சாலை தொழிளாலிகளையும்
ஒப்பிட்டு பார்த்தால் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை என்று அவர்
சொன்னார்.
அனுப்பியவர்: தியாகு seewtypie2000@gmail.com
ப. ஜீவானந்தம்
ப. ஜீவானந்தம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்தவர் பொதுவுடைமை வீரர் ப. ஜீவானந்தம் அவர்கள். தமது 56 ஆண்டுகால வாழ்வில் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். அப்பழுக்கற்ற எளிய வாழ்க்கை நடத்தியவர்.
காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா அவர்கள் பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடிவயர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாகிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
திலீபன்
திலீபன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பார்த்தீபன் இராசையா (19?? - செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்துவர். இந்திய படைகளிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.
[ தொகு] ஐந்து அம்சக் கோரிக்கை
- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்துநிறுத்தவேண்டும்.
- சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலைசெய்யப்படவேண்டும்.
- அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
- ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
- தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
[ தொகு] இவற்றையும் பார்க்க
[ தொகு] வெளி இணைப்புகள்
விளாடிமிர் லெனின்
விளாடிமிர் லெனின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விளாடிமிர் இளியிக் லெனின் (Vladimir Ilyich Lenin) ( ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин கேளுங்கள்), ( ஏப்ரல் 22 (ஏப்ரல் 10 ( பழைய முறை)), 1870 – ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்ஷவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் பிரதமரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்ஸிஸம்-லெனினிஸம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினிஸம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
"லெனின்" என்பது் ரஷ்ய புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைப்பெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உளியனொவ்" என்கிற பெயரை ்"விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். (சில சமயங்களில் அவரை "நிகொலை லெனின்"(Nikolai Lenin) என்று மேற்க்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களும் வர்ணித்தார்கள்.் ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.்)
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம்் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும்,் அந்த பெயரினை எதற்காக தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயர் லேனா (Lena) என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் என அறியப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியன ஜார்ஜி பிளக்னாவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா் நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைப்பெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்க்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்த காலகட்டத்தில் லெனின் பிளக்னாவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்க்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.
[ தொகு] வெளி இணைப்புகள்
- V.I.Lenin.info: voting about carrying out of a body of Lenin from the Mausoleum. (Russian) (Red - against, Dark blue - for, Grey - I abstain)
சே குவேரா
சே குவேரா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் ( கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
பொருளடக்கம்[மறை] |
[ தொகு] மார்க்சியத்தில் ஈடுபாடு
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.
[ தொகு] கியூபாவில் புரட்சி
சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.
[ தொகு] பொலிவியாவில் சே குவேரா
பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரனத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.
[ தொகு] கவனம் பெறும் நிகழ்வுகள்
- 1945 - மருத்துவப்படிப்பை மேற்கொள்ளுதல்
- 1950 - உந்துருளியில் 3000 மைல் தூரம் ஆர்ஜென்டீனா முழுவதும் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்
- 1952 - தனது நண்பன் அல்பெர்த்தோ கிரனடாவுடன் பெரு, கொலம்பியா , வெனிசூலா, ஆகிய நாடுகளுக்கு பயணம் செல்லுகிறார். பெருவில் தொழுநோயாளர் குடியிருப்பில் பணிபுரிதல்
- 1953 ஜூன் 12 - மருத்துவராக பட்டம் பெறுதல்.
- ஜூலை 6 - லத்தீன் அமெரிக்கா பயணத்தை மேற்கொள்ளுதல்
- 1955 ஜூலை - ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்தல். கரந்தடிப் போராளிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கும் குழுவினருக்கு மருத்துவராக அவர்களுடன் இணைந்து பின் போராளியாகிறார். இங்குதான் அவர முதன் முதலில் சே என அழைக்க ஆரம்பித்தார்கள்.
- ஆகஸ்ட் 18 - குவாதமாலாவில் தாம் சந்தித்த பெரு நாட்டைச்சேர்ந்த தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்தவரான ஹிடா காடியாவை மணந்துகொள்கிறார்.
- 1956 பெப்ரவரி 15 - சே வுக்கும் ஹில்டாவுக்கும் ஹில்டா பிட்ரீஸ் குவேரா பிறக்கிறாள்.
- ஜூன் 24 சே மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோவுடன் 26 பேர் கைதுசெய்யப்படுகிறார்கள். சே 57 நாட்கள் சிறையில் இருக்கிறார்.
- 1958 ஜூலை - புரட்சிப்படை பாடிஸ்டாவின் படைகளை தோற்கடித்து முன்னேறுகிறது.
- டிசம்பர் 28 - லாஸ் வியாசின் தலைநகரான சாண்டா கிளாராவின்மீது சே போர் தொடுக்கிறர்.
- 1959
- ஜனவரி 1 - சாண்டா கிளாரா சேவின் வசமாகிறது. பாடிஸ்டா ஓடித்தப்பிவிடுகிறார். சே ஹவானாவை நோக்கி முன்னேறுகிறார்.
- ஜனவரி 2 - காஸ்ட்ரோ அறிவித்த பொது வேலை நிறுத்தத்தினால் நாடே ஸ்தம்பிக்கிறது.
- ஜனவரி 3 - சே ஹவானாவை அடைந்து கபானா கோட்டையை கைப்பற்றுகிறார்
- ஜனவரி 8 - காஸ்ட்ரோ ஹவானா வந்து சேர்கிறார்.
- மே 17 - உழவுத்துறையை முன்னேற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன.
- ஜூன் 2 - சேவும் அலெய்டா மர்ச்சும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
- ஜூன் 12 - வணிகம் மற்றும் தொழிநுட்ப ஒப்பந்தங்களை தீர்மானிப்பது தொடர்பாக சே நீண்ட பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பா, ஆபிரிக்கா, மற்றும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறார்.
- அக்டோபர் 7 - உழவுத்துறையின் மறுமலர்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் சே தொழிற்றுறைக்கு தலைவராக நியமிக்கப்படுகிறார்.
- நவம்பர் 26 - சே, தேசிய வங்கியின் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
- 1960
- அக்டோபர் - சோவியத் கூட்டமைப்பு, கிழக்கு ஜெர்மனி, செக்கோஸ்லோவேகியா, சீனா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு இரண்டுமாத சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளுதல்
- நவம்பர் 24 - சே - அலெய்டாவின் முதற்குழந்தை அலேய்தித்தா பிறக்கிறாள்.
- 1961
- ஜனவரி 3 - அமெரிக்க அரசு கியூபாவுடனான ராஜதந்திர உறவுகளை முறித்துக்கொள்கிறது.
- பெப்ரவரி 23 - சேவை அமைச்சராக்கி தொழிற்றுறை அமைச்சகம் நிறுவப்படுகிறது.
- ஆகஸ்ட் 8 - உருகுவேயில் நடைபெற்ற அமெரிக்க நாடுகள் அமைப்பின் கருத்தரங்கில் கியூபாவின் சார்பில் சே உரை நிகழ்த்துகிறார்.
- 1963
- ஜூன் 14 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் சிலியா பிறக்கிறாள்.
- ஜூலை 3 - பிரான்சிடமிருந்து அப்போதுதான் சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் அதிபர் அகமது பென் பெல்லாவை சந்திக்கிறார்.
- 1964
- பெப்ரவரி 24 - சே வுக்கும் அலெய்டாவுக்கும் எர்னஸ்டிடோ பிறக்கிறான்.
- மார்ச் 14 - சே கியூபா திரும்புகிறார்.
- அக்டோபர் 31 - காங்கோவின் புரட்சிப்படையினருக்கு பயற்சி தர ஒரு கியூப படைக்குழுவினரோடு தாமும் காங்கோ புறப்படும் சே, விடை பெற்றுக்கொள்வதாக ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு கடிதம் எழுதுகிறார்.
- டிசம்பர் - காங்கோ படையெடுப்பு தோல்வியடைந்ததன் பிறகு சே இரகசியமாக கியூபாவுக்கு திரும்பி வருகிறார். பொலிவியா படையெடுப்புக்காக வீரர்களை திரட்டுகிறார்.
- 1967
- மார்ச் 23 - முதல் கரந்தடி தாக்குதலில் சேவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை சிதறடிகிறது.
- ஏப்ரல் 16 - ஆசிய, ஆபிரிக்க, லத்தீனமரிக்க நாடுகளின் ஒற்றுமைக்காக நடத்தப்பட்ட முக்கண்டக் கருத்தரங்கில் இரண்டு மூன்று அல்ல, பல வியட்நாம்களை படைக்கலாம் என்ற சேவுடைய அறிக்கை வாசிக்கப்படுகிறது.
- ஆகஸ்ட் 4 - ஒரு விட்டோடி, பொலிவிய படைக்கு தலைமை தாங்கி நடத்தி சே அணியின் ஆயுத தளத்தை நோக்கி முன்னேறுகிறான்.
- செப்டெம்பர் 26 - கரந்தடி வீரர்களை பொலிவிய அரச படைகள் சுற்றிவளைக்கின்றன.
- அக்டோபர் 8 - மிஞ்சியிருந்த சே உட்பட 17 வீரர்களும் பொறிக்குள் அகப்பட்டுக்கொள்கிறார்கள். போரில் காயமடையும் சே கைதுசெய்யப்படுகிறார்.
- அக்டோபர் 9 - சே கொலைசெய்யப்படுகிறார்
- ஜூலை 1 - ஃபிடல் காஸ்ட்ரோவின் முன்னுரையுடன் சேவின் பொலிவிய நாட்குறிப்பு கியூபாவில் வெளியிடப்படுகிறது.
- 1995 - கொலை செய்து புதைக்கப்பட்ட சேவினதும் மற்ற இரு வீரர்களதும் உடலங்களை தேடியெடுக்கும் பணி தொடங்குகிறது.
- 1997
- ஜூன் 28 - பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் ஏழு வீரர்களின் சடலங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்படுகிறது.
- ஜூலை 14 - சடல எச்சங்கள் கியூபாவை வந்தடைகின்றன.
- அக்டோபர் 13 - ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடைபெறுகிறது.
- அக்டோபர் 14 - சேவின் சடல எச்சங்கள் சாண்டா கிளாராவுக்கு மாற்றப்படுகின்றன.
[ தொகு] வெளி இணைப்புகள்
கார்ல் மார்க்ஸ்
கார்ல் மார்க்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கார்ல் மார்க்ஸ் (கார்ல் ஹென்ரிச் மார்க்ஸ், Karl Heinrich Marx, மே 5, 1818, ஜேர்மனி – மார்ச் 14 , 1883, லண்டன்) ஜேர்மனிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார்.
மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் நிபுணராகவும், தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகவும் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார்.
பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளாரெனினும் இவரது ஆய்வுகளினதும், கருத்துக்களினதும் அடிப்படை, வர்க்க முரண்பாடுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வுசெய்தல் என்பதாகும்.
கார்ல் மார்க்ஸ் எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அன்னாரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தை தருகிறது.
நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதல்ல. எனக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்க்ளும் விபரித்துவிட்டார்கள். நான் புதிதாக செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்
1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்று காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.
2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.
3. இந்த பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவிற்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும்.
- மார்ச் 5, 1852 Weydemeyer க்கு எழுதப்பட்ட கடிதம்
கம்யூனிச சித்தாந்தத்தின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்ஸ் கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆவார்.
பொருளடக்கம்[மறை] |
[ தொகு] வாழ்க்கைக்குறிப்பு
கார்ல் மார்க்ஸ், தற்போது ஜேர்மனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5ம் திகதி பிறந்தார். அவர் 1824 இல் கிறிஸ்துவராக மதம் மாறிய ஒரு யூதரான ஹைன்றிஷ் மார்க்ஸ் எனும் வசதி படைத்த வழக்கறிஞர் ஒருவரின் மூன்றாவது மகனாவார்.
பொன், பேர்லின் பல்கலைக்கழகங்களில் சட்டம், வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்றார். யெனா பல்கலைக்கழகத்தில் தனது கலாநிதி பட்டத்தினை பெற்றார்.
1841 இல் பட்டம் பெற்ற மார்க்ஸ் சிலகாலம் பத்திரிகைத்துறையில் இருந்தார். சிறிது காலத்திலேயே ஜனவரி 1, 1843இல் தடைக்குள்ளான றைனிஷ் ஸைற்றுங் எனும் எதிர்க்கட்சி செய்தி ஏட்டின் ஆசிரியராக இருந்தார்.
இக்காலப்பகுதியில் லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகள்ளான் 21 வயதுடைய ஜெனியுடன் மார்க்ஸுக்கு காதலுறவு ஏற்பட்டது. இதன்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக்குடும்பத்தைச்சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக 8 ஆண்டுகள் தமது காதலை இரகசியமாக வைத்திருந்து ஜெனிக்கு 29 வயதாயிருந்தபோது அவரை மார்க்ஸ் திருமணம் செய்துகொண்டார்.
பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய நாடுகளிடையே ஒவ்வொன்றினதும் புரட்சிகர இயக்கங்களில் பங்குபற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடுகடத்தப்பட்ட மார்க்ஸ், 1843இற்கும் 1849 இற்கும் இடையே புலம் பெயர்ந்த வாழ்க்கையினை வாழ்ந்தார்.
1849 ஓகஸ்ட் 24 இல் பிரான்சில் உள்ள பிறிற்றனியில் சதுப்பானதும் உடல் நலத்துக்கு ஒவ்வாததுமான இடமொன்றுக்கு நாடுகடத்துமாறான பிரேஞ்சு அரசாங்கத்தின் ஆணைக்கு பணிய மறுத்து லண்டனுக்கு சென்று குடியேறி 35 ஆண்டுகளான தனது சீவியகாலத்தின் மிகுதியை அங்கேயே வாழ்ந்தார். அக்காலத்தில் இங்கிலாந்து ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் அகதிகட்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெருமெடுப்பில் கட்டப்பட்ட பிரமாண்டமான பிரித்தானிய மியூசியத்தின் நிர்மாண வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்ஸ் நாள் தவறாது அங்கு சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்கு செலவிட்டு வந்தார். அங்கேதான் மூலதனம் எனும் நூல் தோற்றம் பெற்றது.
மார்க்ஸ், ஏங்கல்சை 1844 ஓகஸ்ட் 28க்கும் செப்டெம்பர் 6க்கும் இடையே பாரிசில் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவரும் தம்மிடையே நட்புறவு கொள்ள ஆரம்பித்தனர்.
நாடுகடந்து லண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்ஸ் தீவிரமான வறுமைக்குள்ளானார். தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடைமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டு வெளிக்கிட முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார்.
முற்போக்கு பத்திரிகையான நியூயோர்க் - டெய்லி ற்றிபியூனுக்கு ஆக்கங்கள் எழுதிவந்தபோதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அவ்வேட்டின் ஐரோப்பிய ரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண் பணம் வழங்கப்பட்டது . ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பிரசுரமாகவில்லை. 1862 வரை ற்றிபியூனுக்கு எழுதி வந்தார்.
மார்க்சின் பெற்றோரு இறந்த சமயம் அவருக்கு மரபுரிமையாக சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சால் தோற்றுவிக்கப்பட்ட முதலாவது கம்யூனிஸ்ட் கழகத்தின் பதிநான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் இடமிருந்து ஆறு நூறு பவுண் அளவில் விருப்புரிமைக்கொடையை மரபுரிமையாக பெற்றார். 1869 இல் தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்ஸ் ஒரு செல்வந்தரானபோது மார்க்சுக்கு 350 பவுண் ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார்.
Georg Wilhelm Friedrich Hegel என்பவரின் தர்க்கமுறை மற்றும் வரலாற்று பார்வை அடம் ஸ்மித் மற்றும் டேவிட் ரிக்காடோ என்பவர்களின் தொன்மை அரசியல் பொருளியல் கருத்துக்கள் பிரான்சு தத்துவவியலாளர் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் என்பனவற்றால் மார்க்ஸ் மிகவும் கவரப்பட்டார்.
[ தொகு] மார்க்ஸ்சின் ஆக்கங்கள்
- Introduction to a Critique of Hegel's philosophy of Right- சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம்,1843.
- The Poverty of Philosophy - தத்துவத்தின் வறுமை,1847.
- Discourse upon The Question of Free Exchange - சுதந்திரமான நாணயமாற்றுக்கேள்வி பற்றிய சொற்பொழிவு,1848.
- The communist Manifesto - கம்யூனிஸ்ட் அறிக்கை,1848.
- Das kapital- மூலதனம்
- Introduction to the Critique of Political Economy - அரசியல் பொருளாதார திறனாய்விற்கு அறிமுகம்,1859.
[ தொகு] இவற்றையும் பார்க்க
[ தொகு] ஆதாரங்கள்
- வெ.சாமிநாத சர்மா. (). மார்க்ஸ். சென்னை: சந்தியா.