கடவுள்மறுப்புக்கொள்கை எதோ இன்று தோன்றியது அல்ல. கடவுள்மறுப்புக்கொள்கைகள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மனிதர்களால் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கடந்தநூற்றாண்டில் அம்பேத்கார், பெரியார் போன்றோர்கள் இந்தியாவில் கடவுள்மறுப்புகொள்கைகளை பெரிதும் உறுதிபடுத்தினர். மார்க்ஸிய தத்துவமும் கம்யுனிசமும் கடவுள்மறுப்புகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. டார்வினின் பரிணாம வளர்ச்சித்தத்துவம் கடவுள்மறுப்பை மேலும் உறுதிபடுத்தியது. புத்தர் மற்றும் சக்கிரடிஸ்-ன் தத்துவங்கள் கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த சாத்திரங்களை எதிர்த்தன.
பொதுவாக, கடவுள்மறுப்பும் பகுத்தறிவும் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டவை. ஆனால் பகுத்தறிவு முழுமையாக செயல்படாவிட்டால், கடவுள்மறுப்பு நிச்சயமாக நீர்த்துவிடும். உதரணத்திற்கு, கடவுளை மறுத்த புத்தரை கடவுளாக பாவிக்கும்தன்மை, அந்த சித்தாந்தம் நீர்த்ததன் விளைவு. எனவே கடவுள்மறுப்பைவிட, பகுத்தறிவே ஒரு சித்தாந்ததில் முதன்மை இடம் பெற வேண்டும். ரஷ்யாவில் மார்க்ஸ்ய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கம்யுனிச ஆட்சியில் கடவுள் மற்றும் மதங்கள் முற்றிலும் மறுக்கப்பட்டன. இவை பகுத்தறிவால் தோன்றியவை அல்ல. சட்டதினால் மாற்றப்பட்டவை. எனவே இவை காலப்போக்கில் செயலளவில் பலகீனம் அடைந்தன.
எனவே ஒரு மனிதன் கண்மூடித்தனமாக கடவுளை பின்பற்றுவதாலும், கடவுளை மறுப்பதாலும் ஒரு பயனும் இல்லை. எவன் ஒருவன் தன் பகுத்தறிவின் மூலம் உணர்கின்றானோ அவனே அப்பாதையில் செழுமை அடையமுடியும். கடவுள் மறுப்பு விட கடவுள் நம்பிக்கையை ஆதரிப்போர் அதிகம் ஆகவே கடவுள் நம்பிக்கை பற்றி நம்மக்களிடையே தோன்றும் சில கேள்விகளை பற்றி அலசுவோம்.
1. கடவுள்னம்பிக்கை ஒருவனை செம்மைபடுத்துகிறதா?
முற்றிலும் இல்லை, இன்றைய காலகட்டத்தில் தவறு (கொலை, கொள்ளை...) செய்பவர்களில் அதிகமானோர் இறைனம்பிக்கை உடையோர்தான். கண்மூடித்தனமான கடவுள் நம்பிக்கை ஒருவனை முட்டாள் ஆக்குகிறது. ஆகவே பகுத்தறிவு இங்கு முக்கியம். எடுத்துகாட்டாக இந்தியாவில் சென்ற தோன்றிய முக்கிய பிரச்சனைகள் (மசூதி இடிப்பு, பம்பாய் குண்டுவெடிப்பு) எல்லாம் மத அடிப்படையில் உண்டானவை.
2. குழந்தைகளுக்கு பகுத்தறிவு என்றால் புரியுமா?
இது ஒரு வரட்டுவாதம். மதம், கடவுள் என்றால் மட்டும் குழந்தைகளுக்கு புரியப் போகிறதா? நிச்சயமாக இல்லை. பொதுவாகவே, குழந்தைகள் பகுத்தறிவுவாதிகள்தான். ஏன்னென்றால், அவர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்திற்கும் காரணங்களை ஆராய்வார்கள். ஆனால் நாமோ, அவர்களை பயமுறுத்தி கேள்விகளை தவிர்ப்போம். இது ஆரோக்கியமானது அல்ல. முதலில் பகுத்தறிவோடு கூடிய கருத்துக்களை அவர்களின் மனதில் பதிக்க வேண்டும். முடிந்தவரை கண்மூடித்தனமாக அவர்களை எதையும் செய்ய பயிற்ச்சிக்க கூடாது.
3. கடவுள்னம்பிக்கையால் லாபம் என்ன?
எனக்கு தெரிந்து நட்டம் தான் அதிகம். அது திருப்பதி ஆகட்டும், சபரிமலை ஆகட்டும், வாடிகன் ஆகட்டும், மக்கா ஆகட்டும். பணவிரயம் தான் கடவுளால் மிஞ்சுகிறது. நம்மக்கள் இங்கே நிம்மதியை விட்டுவிட்டு வேறெதயோ தேடிக்கொண்டு இருக்கிறார்கள். “மதம் மலர்களால் மறைக்கப்பட்ட விலங்கு” என்று மார்க்ஸ் கூறினார். மதம் மாறுவதால் மட்டும் மனிதநேயம் தழைத்துவிடாது என்பது. மார்க்ஸின் உறுதியான கொள்கை. எந்த மதமானலும் பகுத்தறிவுக் கருவியின் பயன் கொள்ளவேண்டும்.
4. எதோ ஒரு ஆற்றல் இந்த பிரபஞ்சத்தை செயல்படுத்துகிறதா?
செயல்படுத்தட்டும். அப்படி ஒரு ஆற்றல் இருந்தால் இருந்து விட்டுப்போகட்டும். நாம் அதை நம்புவதாலோ (அ) பூஜிப்பதாலோ, அது இயற்கை பிரச்சனையில் இருந்து காப்பாற்றிவிடப்போவதில்லை. அப்படி காப்பாற்றும் என்று நம்பினால், அதுவே உலகமகா மூடத்தனம். நம்முடைய தேவை 1. மக்கள் நன்மை மற்றும் 2. தேவையில்லாத பிரச்சனைகளை அகற்றுவது.
5. நன்மைசெய்வோர் கடவுளா?
இன்று நம்மக்கள் எந்த கடவுளை சொல்லி அடித்துக்கொள்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் முந்தைய காலங்களில் தத்துவஞானிகளாக (யேசு, முகமதுநபி, புத்தர், மகாவீரர்) , அரசர்களாக (ராமர், கிருஷ்ணர்), மக்களுக்காக உயிர்நீத்த வீரர்கள் (கிராம கடவுள்கள்) இருந்தவர்கள். எனவே ஒரு மனிதனை கடவுளாக்குவதும் பிரச்சனையின் அடிப்படை.
‘கடவுளால் எல்லாம் நடைபெறுகிறது’ என்று சூழ்நிலைக்கைதியாகமல், மக்களின் நன்மைக்குரிய காரியங்களில் ஈடுபடவேண்டும். கடவுள் மறுப்போ அல்லது பகுத்தறிவோ என்பதன் காரியம் மக்களின் நலனாக இருக்கவேண்டும். வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலவில் இருக்கவேண்டும். “இன்று நான் கூறுவது, நாளைய சமுதாயத்திற்கு பொருந்தாமல் போகலாம். நான் கூறியவை தவறாகவும் இருக்கலாம், ஆதலால் நான் கூறியவற்றை பகுத்தறிவு கொண்டு சிந்தனை செய்து முடிவெடுக்க வேண்டுங்கள்” என்று சாக்கிரடிஸ் கூறினார். அதுபோல ஒவ்வொறு மனிதனும் கடவுள், மதம், மதசாத்திரங்களை தூக்கியெறிந்து பகுத்தறிவுடன் வாழ்ந்து உலகம் வளம் பெற மனிதநேயம் தழைத்தோங்க வாழவேண்டும்.
என்னுடைய கருத்துகளை யாரும் தவறாக கொள்ளவேண்டாம். இந்த கருத்துகள் யாரயும் யாருடைய மத நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கம் அல்ல. தங்களுடைய சிறந்த கருத்துகளை விவாதத்திற்கு கொண்டு வரலாம்.
நன்றி:- யாழ் இணையம்
செவ்வாய், 12 ஜூன், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக